செவ்வாய் எப்படி இருக்கும்?
சூரியக் குடும்பத்தில் உள்ள ஒரு கோள் செவ்வாய் (Mars) ஆகும். இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது.
இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுவதனால் இது செவ்வாய் என்று அழைக்கப்படுகிறது.
பூமியிலிருந்து வெறும் 38.6 மில்லியன் மைல் தொலைவில் செவ்வாய்!
இந்த வாரம், அக்டோபர் 6 அன்று செவ்வாய் கிரகம் பூமியை மிக குறைந்த தொலைவில் நெருங்க இருக்கிறது. செவ்வாய் பூமியிலிருந்து, வெறும் 62.1 மில்லியன் கிலோமீட்டர் (38.6 மில்லியன் மைல்) தொலைவில் நெருங்குகிறது.
இந்த சந்திப்பானது, பூமி சூரியனிடமிருந்து மிகவும் அதிக தொலைவில் இருக்கும்போது, செவ்வாய் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் (பெரிஹேலியன்) இருக்கும்போது ஏற்படுகிறது.
இந்த கட்டத்தில் பூமி மற்றும் செவ்வாய் குறைந்தபட்சம் 54.6 மில்லியன் கிலோமீட்டர் (33.9 மில்லியன் மைல்) இடைவெளியில் காணப்படும்.
ஆனால், செவ்வாய் கிரகம் பூமியை அந்த சரியான ‘நெருங்கிய’ புள்ளியைத் தொட்டதை இதுவரை பதிவு செய்ததில்லை. ஆனால், இந்த முறை ‘நெருங்கிய’ புள்ளியை தொடும் என்று நம்பப்படுகிறது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் சந்திப்பு!
இந்த சந்திப்பானது ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டில், வெறும் 55.7 மில்லியன் கிலோமீட்டர்கள் செவ்வாய் கிரகத்துடன் பூமி மிகவும் நெருக்கமாக காணப்பட்டது.
அதே போன்று, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2018) ல் வெறும் 57.6 மில்லியன் கிலோமீட்டர் (35.8 மில்லியன் மைல்) தொலைவில் நெருக்கமாக காணப்பட்டது. செவ்வாய் கிரகம் பிரகாசமாகவும், பெரியதாகவும், இருப்பதால் தொலைநோக்கி உதவியின்றி மிகவும் எளிதாக வெறும் கண்களால் பார்க்க முடியும்.
இவை இதற்கு அடுத்தபடியாக அடுத்த 15 ஆண்டுகளுக்கு பின்பு தான் மிக நெருக்கமாக இருக்கும் என்று வல்லுநர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், செவ்வாய் தொடர்பான ஆராய்ச்சியாளர்களுக்கு இது உகந்த தருணம் ஆதலால், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த தருணத்தை பயன்படுத்தி கொள்ள இருக்கின்றனர்.
முன்னதாக, கடந்த 2020-ல் மார்ஸ் ஒன் (Mars One) நிறுவனம் செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், அம்முயற்சி பல்வேறு காரணங்களால் வெற்றியடையவில்லை.
செவ்வாய் மற்றும் பூமி இரண்டும் சற்று நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளன, அதாவது அவை எப்போதாவது ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக வரக்கூடும். இது தொடர்பான வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.