வான்வெளியில் எவ்வாறு விண்மீன்கள் மற்றும் துகள்கள் ஒன்று சேர்ந்து புதிய கோள்களாக உருவெடுக்கின்றன என்பது குறித்து வானியலாளர்கள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். முன்னமே வானியலாளர்கள் வரையறுத்து வைத்திருந்த கோட்பாடுகள் அடிப்படையில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அவற்றை சரிபார்க்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், சிலி நாட்டில் வானியலாளர்கள் பெரிதான தொலைநோக்கி மூலம் வானில் துகள்கள் மற்றும் சுழலும் காற்று விண்மீன்களை முற்றுகையிட்டு புதிய கோளாக உருவாவதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 520 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஆரிகா எனும் விண்மீன் குடும்பத்தின் AB Aurigae விண்மீனை மையமாகக் கொண்டு மிகப்பெரிய அளவில் சுருள் வடிவிலான வளிமம் (வாயு) மற்றும் துகள்கள் சுற்றுகின்றன. சிறிதுநேரத்தில் மையத்தில் உள்ள விண்மீனும் இருள்பெற்று தட்டையான கோளாக உருவாவதை வானியலாளர்கள் புகைப்படம் எடுத்திருந்தனர்.

கோள் எவ்வாறு உருவாகிறது பற்றிய கோட்பாட்டினை அறிந்துகொள்வோம்!
விண்வெளியில் இருக்கும் ராட்சத அளவிலான விண்மேகங்கள் தட்டையாகிச் சுழலும்பொழுது, மத்தியில் இருந்த பருத்த பகுதியானது சூரியனைப் போல பிரகாசமாகவும், அதனைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும் வாயுக்களும் ஆங்காங்கே உருண்டு திரண்டதால் கோள்கள் உருவானதாக வரையறுக்கின்றன.
வெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்!
இதில் குறிப்பாக, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவுகிறது. அதனால், சூரியனுக்கு அருகில் குறைந்த அளவிலேயே வாயுக்களும் தூசிகளும் இருக்கும். இதன் காரணமாக, அந்தத் தூசிகளும் வாயுக்களும் மெதுவாக உருண்டு திரண்டு தற்போது பூமி, செவ்வாய் போன்ற சிறிய அளவிலான பாறைக் கோள்களாக மாறின. இவை உருவாக நீண்ட காலம் ஆனது என்கிற ஆய்வுகளும் இருக்கின்றன.
இந்த உருவாக்க முறையானது திரளுதல் (accretion method) என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் கிரகங்கள் உருவாக நீண்ட காலம் தேவைப் படுவதால் இதற்கு “ஆமை முறை” என்ற பெயரும் உண்டு. இந்த முறையில் உருவாக கோளானது சுமார் ஒரு கோடி முதல் பத்து கோடி ஆண்டுகாலம் எடுத்துக்கொள்ளும் என்ற துல்லிய கணக்குகளும் இருக்கின்றன.
இத்தகைய கருத்துக்கள் ஆய்வின் மூலமாக வரையறுக்கப்பட்டபோது, விண்வெளியில் புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
முதன்முதலாக கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஆராய்ச்சிகளில் தற்போது வரை 3000-க்கும் அதிகமான புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்!!
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விண்வெளியில் இருக்கும் விண்மீன்களை விட அதிக அளவில் கோள்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
கோள் உருவாகும் காட்சி…
சிலி நாட்டு வானவியலாளர்கள் எடுத்த புகைப்படத்தில், கோட்பாடுகளில் கூறியவாறே, முதலில் விண்மீன் மையப்பகுதி அதிக வெளிச்சத்துடனும், அதை சுற்றியுள்ள தட்டையான பகுதியில் துகள்கள் மற்றும் வாயுக்கள் சுழன்றுகொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிகழ்வு திரளுதல் முறைப்படி நடைபெறுவதாக வானவியலாளர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய் கிரகத்தில் பறவையா? – நாசா வெளியிட்ட மர்ம புகைப்படம்!!
பிறகு, சுழன்றுகொண்டிருக்கும் அனைத்தும் ஒருங்கிணைவதையும் புகைப்படத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தனர். பிறகு, ஒருங்கினையும் கிரகத்தின் வட்டப்பாதையை நெப்டியூன் கிரகத்தின் வட்டப்பாதையும் ஒப்பீடும் செய்திருந்தனர்.

வானவியலாளர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “புதிதாக உருவாகி வரும் கோளின் நிறை குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஆனால் வியாழன் போன்று இதுவொரு வாயு கிரகமாக உருவாகி வருகிறது. பூமி போன்று திடமான கிரகமாக தென்படவில்லை. மேலும், இது ஒற்றை கிரகமாக தெரியவில்லை. உருவாகி வரும் கிரகத்தில் தட்டைப்பகுதிக்கு அருகில் இன்னொரு கோளும் உருவாகி வருவதைப்போல தெரிகிறது” என்றார்.
இது பற்றிய காணொளி