சம இரவு பகல்
இன்று இரவு நேரமும் பகல் நேரமும் சமம். அதாவது மிகச்சரியாக பகல் பொழுது 12 மணி நேரமும், இரவுப் பொழுது 12 மணிநேரமும் இருக்கும். இதற்குக் காரணம் பூமியின் சாய்வும் சூரியனுக்கு இடைப்பட்ட தொலைவும்தான்.
பூமியானது 23 1/2 டிகிரி சாய்வில் தன்னைத்தானே சுற்றுகிறது. இதனால் இரவு பகல் மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே ஒரு முறை பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும்காலம் ஒரு நாள் என்று கணக்கிடப்படுகிறது. அதேபோல் பூமி சூரியனைச் சுற்றிவருவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன.
சாய்வு
பூமியின் சாய்வு சூரியனை நோக்கி இருந்தாலும், சூரியனுக்கு வெளிப்புறத்தில் இருந்தாலும் இந்த மாற்றம் நிகழும். வருடத்திற்கு இரண்டு முறை வரும் இது மார்ச் 20 ஆம் தேதி (Spring Equinox) ஒருமுறையும் செப்டம்பர் 22 தேதியன்றும் (Autumnal Equinox) வரும்.

இந்நிகழ்வானது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அற்புதமாகும். இன்று வழக்கத்தை விட நிலவானது பெரிதாக தெரியும். கடைசியாக கடந்த 2000 ஆம் ஆண்டு இந்த பெரிய நிலவு தோன்றியது. இனி வரும் 2030 ஆம் ஆண்டுதான் இந்த அரிய நிகழ்வு தோன்றும் என்பதால் இன்று நிலவினைப் பார்க்க மறக்காதீர்கள்.