விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் பல ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த எக்சோபிளானெட் (exoplanet) ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமது பூமியைப் போல மூன்று மடங்கு அளவும், நெப்டியூன் கிரகத்தைவிட 20% குறைவாகவும் இருக்கும் இந்த புதிய கோளிற்கு NGTS-4b எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

எக்சோபிளானெட் (exoplanet)
சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்து நிறையுள்ள பொருட்களும் சூரியனை மையமாக வைத்தே சுற்றிவருகின்றன. அதாவது சூரியனின் ஈர்ப்புவிசையில் மற்ற பொருட்கள் அனைத்தும் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றிவருகின்றன. இது அனைத்து அண்டத்திற்கும் பொருந்தும். ஆனால் சில கோள்கள் மட்டும் தனக்கு அருகிலிருக்கும் நட்சத்திரங்களை சுற்றிவரும். அளவில் பெரிதாக இருக்கும் இவை எக்சோபிளானெட் (exoplanet) என்று அழைக்கப்படுகின்றன.
தற்போது கண்டுபிடிக்கப்படிருக்கும் இந்த NGTS-4b கோள் புதனை விட வெப்பமுடையதாகும். இங்கே சராசரி வெப்பநிலை 1,832 டிகிரி செல்சியஸ் ஆகும். நெப்டியூன் டெசர்ட் எனப்படும் விண்மீன்களுக்கு அருகே இருக்கும் குறுங்கோள்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும் பகுதியில் இந்த NGTS-4b கோள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச வானியல் ஆராய்ச்சியாளர்களின் Next-Generation Transit Survey observing என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

பூமியைப் போன்று சுமார் 20 மடங்கு எடையுள்ள இந்த கோள் தனது அருகே உள்ள விண்மீனை 1.3 நாட்களில் சுற்றிவருகிறது. விண்வெளியில் நெப்டியூன் டெசெர்டைப் பொறுத்தவரை இங்கு ரேடியேஷன் அதிகமாக இருக்கும். ஆனால் இங்கு ரேடியேஷன் அளவு குறைவாகவே இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கோளிற்கு என தனியாக வளிமண்டலம் இருக்கிறது.
ஆராய்ச்சியாளர்களின் இந்த புது கண்டுபிடிப்பு நாசாவின் புதிய கோள்கள் பற்றிய ஆய்வில் இறங்கியிருக்கும் TESS தொலைநோக்கியை நோக்கி விஞ்ஞானிகளை ஈர்த்துள்ளது. இதனால் வர இருக்கும் காலத்தில் புதிய கோள்கள் பல கண்டுபிடிக்கப்பட இருக்கின்றன என்பது உறுதியாகிறது.