பூமியிலிருந்து வேற்று கிரகவாசிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் தகவல் – கூகுள் டூடுல் வெளியிட்டது. நவம்பர் 16, 2018

Date:

வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொள்ளவும் அவர்களின் கிரக நிலைகளை ஆராயவும் 1974 – ஆம் ஆண்டு நவம்பர் 16 – ஆம் தேதி மனிதர்கள் பற்றிய தகவல்களை விண்வெளிக்கு அனுப்பியது. தென் அமெரிக்காவின் கரீபியன் கடலில் Puerto Rico தீவு இருக்கிறது. இங்குள்ள அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடத்தில் இருந்து பால்வெளி அண்டத்திற்கு வெளியே உள்ள மிகப்பெரிய நட்சத்திரக்கூட்டமான Messier 13 (M13) – விற்கு வேற்று கிரக வாசிகளை நோக்கி முதல்முறையாக செய்தி அனுப்பப்பட்டது. இது அரிசிபோ தகவல் எனப்படுகிறது. வெளியுலக வாசிகளைத் தொடர்புகொள்ள மனிதர்களால் எடுக்கப்பட்ட இந்த முதல் முயற்சி எடுக்கப்பட்டு இன்றோடு  44 ஆண்டுகள் ஆகின்றது. இதனை கூகுள் தனது முகப்புத்திரையில் டூடுல் வெளியிட்டுள்ளது.

arecibo November_16
Credit: Google

அரேசிபோ தகவல்கள்

சூரியக்குடும்பத்தில் இருந்து 25,000 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள Messier 13 (M13) நட்சத்திரக் கூட்டத்திற்கு 1,679 பைனரி டிஜிட்களில் தகவல் கட்டமைக்கப்பட்டு (சுமார் 210 பைட்) 2,380 MHz அதிர்வெண் வேகத்தில் அனுப்பப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த ஏழு வகையான தகவல்களைக் கீழே காணலாம்.

  1. 1 முதல் 10 எண்கள் (பைனரியில்)
  2. டி.என்.ஏ(DNA) மூலக்கூறை உருவாக்கும் ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் இவற்றின் அணு எண்கள்.
  3. குளுகோசின் வேதியியல் வாய்ப்பாடு
  4. டி.என்.ஏ-வின் ஏணி போன்ற சுருள் வடிவம்
  5. மனிதனின் உருவம் (ஆண்)
  6. சூரிய மண்டலத்தின் உருவம்
  7. அரேசிபோ சமிக்ஞையை அனுப்பிய தொலைநோக்கியின் படம்.

மூன்று நிமிட ரேடியோ அலைகளாகத் தயாரிக்கப்பட்ட இந்த தகவல்கள் பிராங்க் டிரேக் (Frank Drake) மற்றும் கார்ல் சேகன் (Carl Sagan) ஆகியோரால் தயாரிக்கப்பட்டன. எதிர்காலத்தில் நிச்சயம் இதன்மூலம் வெளிகிரக வாசிகளை கண்டுபிடிக்கமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!