இன்னும் 150 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மோத அதிக வாய்ப்புள்ள சிறுகோள் பென்னு (Bennu). இந்த மோதலை தடுக்க இருக்கும் வழிகளை ஆராய நாசா முடிவு செய்து OSIRIS-REx – (Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regolith Explorer) என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
சிறுகோள்களை ஆய்வு செய்யவும், அதன் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவதற்கும் அனுப்பப்பட்ட விண்கலம் ஓரிஸிஸ்-ரெக்ஸ். இதன் முதல் முயற்சியாக பென்னு விண்கல்லில் (Bennu) இருந்து மாதிரியை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது ஓரிஸிஸ்-ரெக்ஸ். அக்டோபர் 20, 2020 அன்று பெண்ணுவின் மேற்பரப்பை தொட்டு அங்கிருந்து மாதிரியை எடுத்துக்கொண்டு வருகிறது இந்த விண்கலம். இது பூமியை வந்தடையும் பொழுது, பென்னு பூமியிலிலிருந்து 200 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருக்கும்.
பென்னு விண்கல்
பென்னு என்பது ஒரு கரிம வகை சிறுகோள். இது 1999-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது பூமியை நோக்கி வரும் இரண்டாவது பெரிய விண்பொருளாக கண்டறியப்பட்டது. இதனை ஆராய்ச்சி செய்ய 2016 செப்டம்பரில் ORISIS-REx விண்கலத்தை “பெண்ணு”வை நோக்கி அனுப்பியது நாசா.
அதில் முதல் கட்டமாக, விண்கலம் சிறுகோளின் மேற்பரப்பில் இருந்து குறைந்தது 2.1 அவுன்ஸ் (60 கிராம்) மாதிரியை பூமிக்கு கொண்டுவரும். அப்பல்லோ வரலாற்றில் விண்வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட மிகப் பெரிய அளவிலான வேற்று கிரகப் பொருள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிலிருந்து இதுவரை கிடைக்கப்பெற்ற தகல்வல்களை இப்போது பார்க்கலாம்.
1. பென்னு மிகவும் இருண்ட கோள்
பென்னு ஒரு B-வகை சிறுகோள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஏராளமான கார்பன் மற்றும் அதன் பல்வேறு தாதுக்கள் உள்ளன. பென்னுவின் மேற்பரப்பில் ஏராளமான கார்பன் இருப்பதால் அது சூரிய ஒளியின் 4% மட்டுமே பிரதிபலிக்கிறது. சூரிய மண்டலத்தின் பிரகாசமான கோளான வெள்ளி சூரிய ஒளியில் 65%-ம், பூமி சுமார் 30%-ம் பிரதிபலிக்கிறது. இதன் கறுப்பு மேற்பரப்பில் மற்றும் அதற்குக் கீழே ரசாயனங்கள் மற்றும் பாறைகள் உள்ளன.
2. 4.5 பில்லியன் ஆண்டு பழமையான பென்னு
நமது சூரிய மண்டலத்தின் வரலாற்றின் முதல் 10 மில்லியன் ஆண்டுகளில், 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பென்னு உருவானது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையிலான பிரதான சிறுகோள் இது.
3. பென்னு ஒரு “விண்வெளி குப்பை“
இது 60 மைல் [சுமார் 100 கி.மீ] அகலத்தில் ஒரு சிறுகோள்]. எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் போல உயரமாக உள்ளது. ஏராளமான விண்வெளி சிதைவுகள் ஒரு ஈர்ப்பு விசையின் காரணாமாக ஒன்றிணைந்து பென்னு உருவாகி இருக்கிறது. இதன் உள்ளே துளைகளால் நிரம்பியுள்ளது. அதன் அளவின் 20 முதல் 40 சதவீதம் வரை வெற்று இடம்.
4. பூமியில் உயிர்களின் தோற்றம் பற்றி பென்னுவில் தகவல்?
இது மிகவும் பழமையானது என்பதால், பூமியில் உயிர் முதன்முதலில் உருவானபோது இருந்த மூலக்கூறுகளைக் கொண்ட பொருட்களால் பென்னு உருவாகி இருக்க முடியும். பூமியில் உயிர்கள், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் மற்றும் பிற பிணைக்கப்பட்ட கார்பன் அணுக்களின் சங்கிலிகளை அடிப்படையாகக் கொண்டு உருவானவை.
5. தங்கம் மற்றும் பிளாட்டினம்
பூமியின் சராசரி மேலோட்டத்துடன் ஒப்பிடும்போது பென்னு பிளாட்டினம் மற்றும் தங்கம் நிறைந்ததாக இருக்கக்கூடும். பல விண்கற்கள் பூமியின் வரையறுக்கப்பட்ட வளங்களுக்குப் பதிலாக தொழில்துறை ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய கூறுகளைக் கொண்டுள்ளன.
6. சூரிய ஒளியினால் மாறும் பயணம்!
ஈர்ப்பு விசை என்பது மட்டுமே பென்னு பாதை மாறக் காரணம் அல்ல. சூரியனை எதிர்கொள்ளும் பென்னுவின் பக்கம் சூரிய ஒளியால் வெப்பமடைகிறது. பென்னுவில் ஒரு நாள் வெறும் 4 மணி நேரம் 17 நிமிடங்கள் மட்டுமே. எனவே சூரியனை எதிர்கொள்ளும் மேற்பரப்பின் பகுதி தொடர்ந்து மாறுகிறது. பென்னு தொடர்ந்து சுழன்று கொண்டே இருப்பதால், இந்த வெப்பத்தை அது வெளியேற்றுகிறது. இது சிறுகோளை சூரியனை நோக்கிய ஒரு சிறிய உந்துதலை ஆண்டுக்கு சுமார் 0.18 மைல்கள் (தோராயமாக 0.29 கிலோமீட்டர்) தள்ளுகிறது. இதன் மூலம் அதன் சுற்றுப்பாதையை மாற்றுகிறது.
7. அடுத்த நூற்றாண்டில் பென்னு விண்கல் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்த ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது
நாசாவின், பூமி அருகில் உள்ள கோள்கள் கண்காணிப்பு அமைப்பு (N.E.O.) பூமிக்கு அருகில் வரும் பொருள்களை தொடர்ந்து கண்காணிக்கிறது. குறிப்பாக பென்னு போன்ற பொருட்கள் பூமியின் சுற்றுப்பாதைக்குள் சுமார் 4.6 மில்லியன் மைல்களுக்குள் (7.5 மில்லியன் கிலோமீட்டர்) வரும் அபாயகரமான பொருள்களை கண்காணிக்கின்றது. 2175 மற்றும் 2199 ஆண்டுகளுக்கு இடையில், பென்னு பூமியை அடையும் வாய்ப்பு 2,700 இல் 1 மட்டுமே. இருப்பினும் நாசா இந்த ஆராய்ச்சியை செய்கிறது.
8. பென்னுவில் மாதிரி சேகரிப்பது நாம் நினைத்ததை விட கடினம்
OSIRIS-REx விண்கலம் அதிக தெளிவுடன் எடுத்த படங்களை பார்க்கையில், பென்னுவின் மாதிரியானது முன்னர் நம்பப்பட்டதை விட மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பென்னுவின் மேற்பரப்பின் புதிய படங்கள் பெரும்பாலும் பெரிய பாறைகளால் மூடப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன, சிறிய பாறைகளால் அல்ல.
9. பென்னு: ஒரு பழங்கால எகிப்து கடவுளின் பெயர்!
“Bennu” – 2013இல் வடக்கு கரோலினாவை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனால் இந்த பெயரிடப்பட்டது. Name that Asteroid! போட்டியில் வெற்றி பெற்ற Michael Puzio என்ற சிறுவன் இதற்கு பெயரிட்டான். விண்கலத்தின் டச்-அண்ட்-கோ மாதிரியான தோற்றம் (TAGSAM) கை மற்றும் சோலார் பேனல்கள் சதுப்பு நிலங்களில் வாழும் சாம்பல் நிற கொக்கின் கழுத்து மற்றும் இறக்கைகளை ஒத்திருப்பதாகக் கூறி மைக்கேல் புசியோ போட்டியில் வெற்றி பெற்றார். பண்டைய எகிப்திய தெய்வம் பென்னு – ஒசிரிஸின் அடையாளமாக பென்னு இருப்பதாகவும் புசியோ குறிப்பிட்டார். இது சூரிய குடும்பம் உருவாகும் காலத்திற்கு முந்தைய ஒரு பழமையான பொருள்.
10. பென்னு: ஆச்சரியமாக இருக்கப் போகிறது
ஒவ்வொரு வாரமும் ஓரிரு முறை பென்னு துகள்கள், நீரோடைகளை வெளியேற்றுவதை விண்கலத்தின் கேமரா படம்பிடித்தது. பென்னு ஒரு அரிய சிறுகோள் மட்டுமல்ல, அவற்றில் சில மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. மிக அண்மையில், சூரிய ஒளி பென்னுவில் பாறைகளை சிதைக்கக்கூடும் என்பதையும், அதன் மேற்பரப்பில் சிதறடிக்கப்பட்ட சிறுகோள் துண்டுகள் இருப்பதையும் மிஷன் குழு கண்டுபிடித்தது. மேலும் இதன் பயணத்தில் மேலும் துகள்களை சேகரித்து ஆராயும் பொழுது, ஒவ்வொன்றும் சூரிய மண்டலத்தின் பரிணாம வரலாற்றை தெளிவுபடுத்தும் என்று நம்பப்படுகின்றது.
நாசாவின் OSIRIS-REx பற்றிய கூடுதல் தகவலுக்கு, visit: www.nasa.gov/osiris-rex