பல சிறுகோள்கள் (Asteroids) பூமியை நெருங்குவது உண்டு. ஆனால், Asteroid 11 ES4 போல எந்த சிறுகோளும் இதுவரை பூமியை நெருங்கியது இல்லை.
Asteroid -களை குறுங்கோள்கள் எனவும் அழைக்கலாம். செப்டம்பர் 1 2020 அன்று Asteroid 11 ES4 பூமியை நெருங்குகிறது. இது 1,21,000 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அருகில் வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூமிக்கு மிக அருகில் உள்ள துணைக்கோள் என்று கூறப்படும் நிலா 3,84,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
1987லிருந்து இதுவரை இது போன்ற 8 நிகழ்வுகள் நடந்துள்ளது. ஆனால், இதில் உள்ள எந்த சிறுகோளும், Asteroid 11 ES4 அளவு பூமிக்கு நெருக்கமாக வரவில்லை என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (JPL) தெரிவித்துள்ளது.
Also Read: 2018-ல் பூமியை நெருங்கிய 1,082 அடி அகலமுள்ள பிரம்மாண்ட விண்கல்!!
இதற்கு பிறகு இது போன்ற அரிய நிகழ்வு 2032ல் நடைபெறும். இறுதியாக சிறுகோள் பூமிக்கு மிகவும் அருகில் வந்த நிகழ்வு 2011ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள்
இதற்கு முன்னர் பூமிக்கு அருகில் Asteroid 11 ES 4 வந்த நிகழ்வுகள் மற்றும் அவை நெருங்கிவந்த தொலைவும் இந்த பட்டியலில்… (1987-க்கு பின்னர் நடத்த நிகழ்வுகள்)
- 10 செப்டம்பர் 1987 – 20,368,150 கி.மீ
- 27 பிப்ரவரி 1994 – 39,115,642 கி.மீ
- 23 செப்டம்பர் 2004 – 65,568,944 கி.மீ
- 13 மார்ச் 2011 – 4,268,643 கி.மீ
- 27 நவம்பர் 2011 – 55,565,337 கி.மீ
- 10 செப்டம்பர் 2012 – 26,499,097 கி.மீ
- 4 மார்ச் 2019 – 22,653,322 கி.மீ
- 14 டிசம்பர் 2019 – 55,773,685 கி.மீ
Also Read: சூரியக் குடும்பத்தில் புதிதாக ஒரு கோள் இருக்கலாம் – ஆய்வாளர்கள் கருத்து

சிறுகோளால் பூமியில் ஏற்படும் தாக்கம் என்ன?
இந்த சிறுகோள் பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. அவ்வாறு செய்தாலும், விண்வெளி பாறையின் விட்டம் 22 மீட்டர் முதல் 49 மீட்டர் வரை மட்டுமே இருக்கும். அதாவது இது ஒரு விமானத்தின் அளவை ஒத்திருக்கும்.
இதனால் பூமிக்கு 0.41 சதவீதம் மட்டுமே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காரணம் துணைக்கோள் 11 இஎஸ் 4 சிறிய வடிவமைப்பு கொண்டதாகவே இருக்கிறது. இது பூமியின் வளிமண்டல பரப்புக்குள் நுழைய நேரிட்டால் பூமியின் மேற்பரப்பை தாக்கும் முன் அதுஎரிந்து சாம்பலாகிவிடும். அதனால் பாதிப்புகள் ஏதும் இருக்காது.
Asteroid 11 ES 4 மணிக்கு 29,376 கி.மீ வேகத்தில் பயணித்து வருகிறது. இது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையாமல் பூமியை கடந்து செல்லவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.