பொதுவாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் வரும் பவுர்ணமி நிலாவை பிங்க் நிலா என்று அழைக்கிறார்கள். அதற்காக நிலா பிங்க் நிறத்தில் இருக்கும் என நினைத்துவிடாதீர்கள். அப்பறம் எதுக்கு இந்த பெயர்?

என்ன காரணம்?
அமெரிக்காவில் வசந்த காலம் ஏப்ரல் மாத துவக்கத்திலிருந்து ஆரம்பிக்கும். இந்தக்காலத்தில் பிங்க் நிறப்பூக்கள் அமெரிக்கா முழுவதும் பூத்துக்குலுங்கும். மேலும் ஏப்ரல் மாதத்தில் வரும் பவுர்ணமி நிலவு பெரிதாக இருக்கும். எனவே இந்த பிரத்யேக நிகழ்வினை பிங்க் நிலவு என்று குறிப்பிடுகிறார்கள்.
எப்போது தெரியும்?
இந்திய நேரப்படி 4.42 க்கு இந்த பிங்க் நிலாவானது தெரியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றார். தொலைநோக்கிகள் மூலம் பார்த்தால் இந்த பிரம்மாண்ட நிலாவை தெளிவாக பார்க்கலாம்.
தூரம்
மற்ற நாட்களில் நிலவுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் சுமார் 384,400 கிலோமீட்டர்கள் ஆகும். ஆனால் நாளை இந்த தூரம் 363,104 கிலோமீட்டர்களாக இருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது வழக்கத்தை விட 21,296 கிலோமீட்டர் நெருங்கி வர இருக்கிறது நிலவு.
வட அமெரிக்காவில் இதனை புல் நிலவு (Grass Moon) முட்டை நிலவு (Egg Moon) மீன் நிலவு (Fish Moon) என்றும் அழைக்கிறார்கள்.

இந்த நிலவை வெறுங்கண்ணால் பார்ப்பதினால் எவ்வித ஆபத்தும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருப்பதால் நீங்கள் எங்கிருந்து வேண்டுமேனாலும் நிலவைப் பார்க்கலாம்.