இந்த பேரண்டத்தில் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது சூரியன். சூரியன் தான் பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம். ஜூன் 24, 2020 அன்று நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்திலிருந்து (Solar Dynamics Observatory – SDO) ஒரு வீடியோ வெளிவந்தது.
நாசாவின் SDO தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக இடைவிடாமல் சூரியனின் செயல்பாட்டை கவனித்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் மூலமாக எஸ்.டி.ஓ A Decade of Sun என்ற தலைப்பில் அந்த வீடியோ வெளியானது. ஜூன் 2, 2010 முதல் ஜூன் 1, 2020 க்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில், 425 மில்லியன் உயர் தெளிவுத்திறன் (High Resolution) படங்களை எடுத்தது SDO. கிட்டத்தட்ட 20 மில்லியன் ஜிகாபைட் தரவுகளை சேகரித்து, அதை ஒரு வினாடிக்கு ஒருநாள் என்ற முறையில் 61 நிமிடங்களில் சுருக்கி ஒரு Timelapse Video உருவாக்கி வெளியிட்டது. இதில் ஒவ்வொரு நொடியும் ஒரு நாளை குறிக்கிறது.
இந்த தகவல்களின் மூலமாக எஸ்.டி.ஒ நமது நெருங்கிய நட்சத்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் சூரியமண்டலத்தை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றியும் எண்ணற்ற புதிய கண்டுபிடிப்புகளை விளக்கியுள்ளது.

SDO-ன் செயல்பாடுகள்
இந்த SDO இரண்டு விதமாக படங்களை பிடித்துள்ளது. அதாவது, மூன்று கருவிகளை பயன்படுத்தி ஒவ்வொரு 0.75 வினாடிக்கும் ஒரு படத்தை பிடித்துள்ளது. இதேபோல் வளிமண்டல இமேஜிங் அசெம்பிளி (The Atmospheric Imaging Assembly – AIA) கருவி மட்டுமே ஒவ்வொரு 12 வினாடிக்கும் 10 வெவ்வேறான அலைநீள ஒளியில் படங்களை எடுத்துள்ளது.

Also Read: பிங்க் நிலவு பற்றித் தெரியுமா?
எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் 17.1 என்ற நானோமீட்டர் அலைநீளத்தில் சூரியனின் வெளிப்புற வளிமண்டல அடுக்கான கொரோனாவை காட்டும். இந்த புகைப்படங்களைத் தான் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு படம் என்ற கணக்கில் அதை தொகுத்து 61 நிமிட காணொளியாக வெளியிட்டுள்ளது.
வளிமண்டல இமேஜிங் அசெம்பிளி கருவியில் 2016 ல் ஒரு பிரச்சினை உருவானது. அதனால், சில நாட்கள் இக்கருவி சரியாக படம் பிடிக்கவில்லை. பிறகு SDO குழுவினர் அதை ஒரு வார காலத்தில் வெற்றிகரமாக சரி செய்தனர்.
Also Read: ஒரு நாளில் 16 சூரிய உதயம் – விண்வெளியில் அமைந்திருக்கும் விடுதி
இதை பார்ப்பதன் மூலம் 10 ஆண்டுகளாக சூரியன் எப்படி இருந்தது என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம். சூரிய சுழற்சியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, சூரிய கிரகணங்கள், கோள்களின் மாற்றங்கள் மற்றும் சூரியவெடிப்பு போன்ற நிகழ்வுகளையும் இந்த வீடியோ காட்டுகிறது. அதனுடன், வெள்ளி கோள் சூரியனை சுற்றி வருவதையும் 12.24 நிமிடங்களில் காணலாம்.
Also Read: வெள்ளி கிரகத்தின் ஓராண்டு என்பது எவ்வளவு தெரியுமா?
Watch ‘A Decade of Sun’ Video
இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்! அவர்களும் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்!!