சந்திரன் பூமியின் ஒரே இயற்கை செயற்கைக்கோள். சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களை சுற்றி வரும் 200 க்கும் மேற்பட்ட நிலவுகளில் ஐந்தாவது பெரியது. சந்திரனின் மேற்பரப்பு வால்நட்சத்திரம் மற்றும் சிறுகோள்களின் தாக்கங்களால் பள்ளமாக காணப்படுகின்றன.
நிலவு தகவல்கள்!
- நிலவு 3,476 கி.மீ விட்டம் கொண்ட ஒரு தூசி நிறைந்த பாறை ஆகும்.
- நிலவு, பூமியின் அளவின் கால் பகுதி.
- பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் (2,40,000 மைல்) 3,85,000 கி.மீ.
- நிலவு பூமியின் சுற்றுப்பாதையை முடிக்க 27.3 நாட்கள் ஆகும்.
- நிலவின் வயது 4.53 பில்லியன் ஆண்டுகள்.
- பூமியைப் போலவே, சந்திரனுக்கும் ஈர்ப்பு உள்ளது. ஆனால் சந்திரனின் ஈர்ப்பு பலவீனமானது. உண்மையில் பூமியின் ஈர்ப்பில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே.
- சூரியன் நிலவின் மேற்பரப்பைத் தாக்கும் போது, வெப்பநிலை 127 ° C ஐ எட்டும். ஆனால் சூரியன் ‘கீழே போகும்போது’ வெப்பநிலை -153 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.
- நிலா வேறு பெயர்கள்: நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன், பிறை என பல பெயர்களை கொண்டுள்ளன.
- சூரிய குடும்பத்தில் ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோள்.
- நமது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களை சுற்றி வரும் 190+ நிலவுகளில் பூமியின் சந்திரன் ஐந்தாவது பெரியது.
- நிலவுக்கு வளையங்கள் இல்லை.
- இரவு வானத்தில் சந்திரன் பிரகாசமாக பிரகாசித்தாலும், அது அதன் சொந்த ஒளியை உருவாக்காது. நாம் சந்திரனைப் பார்க்கிறோம், ஏனெனில் அது சூரியனில் இருந்து வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது.
Also Read: பிங்க் நிலவு பற்றித் தெரியுமா?