வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோள் வெள்ளி. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான கோள் வெள்ளியாகும். வெள்ளி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்…
- சூரியனுக்கு மிக அருகில் உள்ள இரண்டாவது கோள் வெள்ளி.
- வெள்ளியில் ஒரு நாள் என்பது பூமியின் 243 நாட்கள். அதாவது வெள்ளியில் ஒரு இரவும் பகலும் செல்வதற்கு 243 நாட்கள் ஆகும். வெள்ளியில் ஓர் ஆண்டு என்பது 225 நாட்கள் ஆகும். பூமியின் கணக்கின் படி நீங்களே கணக்கு செய்து கொள்ளலாம்.
- வெள்ளி பின்னோக்கி சுழல்கிறது. இங்கு சூரியன் மேற்கில் உதிக்கும். கிழக்கில் மறையும்.
- சூரியனுக்கும் வெள்ளி கோளுக்குமான தொலைவு 108.8 மில்லியன் கி.மீ ஆகும்.
- வெள்ளி பூமியை விட சிறிய கோள். வெள்ளியின் ஆரம் 3,760 மைல் அதாவது 6,052 கிலோமீட்டர் ஆகும்.
- வெள்ளியில் மலைகள் எரிமலைகள் உள்ளது. வெள்ளிக்கு நிலவு இல்லை. வெள்ளிக்கு வளையங்கள் இல்லை.
- வெள்ளியின் வெப்பநிலை 880 டிகிரி பாரன்ஹீட் (470 டிகிரி செல்சியஸ்) விட அதிகமாக உள்ளது.
- வெள்ளியின் வளிமண்டலம் கார்பன் டை ஆக்சைடு, சல்பரும் உள்ளன.
- வெள்ளி ஒரு மணி நேரத்திற்கு 224 மைல் (360 கிலோமீட்டர்) வேகத்தில் சுழல்கிறது.
- புதன், வெள்ளி மற்றும் பூமி இவை மூன்றும் அடுத்தடுத்த கோள்கள்.
Also Read: வெள்ளி கோள் (Venus)- 3D Model – மேலும் சில தகவல்கள்!