சூரியனை நான்காவது கோளாக சுற்றிவருகிறது. சூரிய குடும்பத்தில் இரண்டாவது மிகச்சிறிய கோள் செவ்வாய். புதனை விட பெரிய கோள் செவ்வாய். சிவப்பு கோள் என்றும் அழைக்கப்படுகிறது. செவ்வாய் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இங்கே!
- செவ்வாய் கோள் சூரியனிடமிருந்து நான்காவது கோள். சூரிய குடும்பத்தின் இரண்டாவது மிகச்சிறிய கோள் செவ்வாய்.
- செவ்வாய் கோளின் வயது 4.603 பில்லியன் ஆண்டுகள்.
- சூரியனுக்கும் செவ்வாய் கோளுக்கும் இடைப்பட்ட தூரம் 142 மில்லியன் மைல்கள் அதாவது (228 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது.
- செவ்வாய் கோளின் விட்டம் 4220 மைல் அதாவது 6791.432 கி.மீ.
- ஒருநாள் என்பது 24 மணிநேரம் 37 நிமிடங்கள். பூமியை ஒப்பிடும் போது செவ்வாய் கோளில் ஒரு வருடம் என்பது 687 நாட்கள்.
- வெப்பநிலை சராசரியாக -81 டிகிரி பாரன்ஹீட்
- செவ்வாய் கோளுக்கு 2 நிலவுகள்உள்ளன (Delmos, Phobos).
- சராசரியாக செவ்வாய் சூரியனை விநாடிக்கு 14.5 மைல் வேகத்தில் சுற்றும்.
- பூமியில் 100 பவுண்டுகள் எடையுள்ள ஒருவர் செவ்வாய் கிரகத்தில் சுமார் 38 பவுண்டுகள் மட்டுமே எடையுள்ளவராக இருப்பார். செவ்வாயில் புவியீர்ப்பு விசை குறைவு.
- செவ்வாய் பூமியின் அளவில் கிட்டத்தட்ட பாதி. செவ்வாய் கோளின் விட்டம் 4,220 மைல்கள், பூமியின் விட்டம் 7,926 மைல்கல்.
Also Read: செவ்வாய் கோள் (Mars) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!
செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்: படங்கள் உள்ளே..
ஒரே நாளில் வானத்தில் இரு அதிசயங்கள் !!
Source: https://mars.nasa.gov