கார்த்திக். இவரின் ஒவ்வொரு படங்கள் வெளிவரும் போதும், அமுல்பேபி, சாக்லெட் பாய், ஆக்ஷன் ஹீரோ, சிறப்பான நடிப்பு, காமெடி ரோல்களிலும் கூட வெகு சிறப்பான நடிப்பு என்று மாறி மாறி புகழ்ந்தார்கள். இப்படி எல்லாவிதமாகவும் சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகர் என்று பெயரெடுப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. அப்படியெல்லாம் எந்த விதமான ரோல்களிலும் அற்புதமாக பொருந்திப்போகிற அளவிற்கு நடித்ததன் காரணமாகத்தான் இவர் “நவரச நாயகன்”. எத்தனை படங்கள் இவர் நடித்திருந்தாலும், வேறு நடிகர்கள் என்னதான் “சிறப்பு தோற்றங்களில்” நடித்திருந்தாலும், இவர் 20 நிமிடங்கள் மட்டும் வந்து போகும் அந்த “மௌனராகம்” ரோலுக்கு ஈடு இணை இதுவரை இல்லை. இவரின் படங்களில் இடம்பெற்ற சிறந்த 10 பாடல்களை இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.