
பிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய ‘மின்னல்’ ஒன்று உலக சாதனை படைத்துள்ளது.
2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த மின்னலின் தூரமானது, நியூயார்க்கில் இருந்து சார்லஸ்டன், டபிள்யூ.வி-க்கு 709 கிலோமீட்டர் (440 மைல்) நீளத்தை எட்டியது.
கடந்த மார்ச் 4, 2019 அன்று வடக்கு அர்ஜென்டினாவில் தாக்கிய 16.7 வினாடிகள் நீளமான மின்னல், அதிக நேரம் நீடித்த மின்னல் என்ற வகையில் புதிய உலக சாதனை படைத்தது என்று உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது.
அதேபோன்று, கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி 321 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் ஏற்பட்ட மின்னலே, அதிக தூரத்தை அடைந்த மின்னல் என சர்வதேச வானிலை மையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. மேலும், ஆகஸ்ட் 2012 இல் பிரான்சின் புரோவென்ஸ்-ஆல்ப்ஸ்-கோட் டி அஸூரை விட 7.74 வினாடிகள் மின்னல் வெட்டியது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய நிகழ்வுகளை விட பிரேசிலில் ஏற்பட்ட மின்னல் தற்போது, இரு மடங்கு அதிக தூரம் கொண்டு முறியடித்துள்ளதாக காலநிலை உச்சநிலைகளின் தலைமை அறிக்கையாளரும், புவி இயற்பியல் ஆராய்ச்சி கடிதங்களில் இந்த கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தும் ஆய்வின் இணை ஆசிரியருமான பேராசிரியர் ராண்டால் செர்வெனி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
.
மின்னலை கணக்கிடும் கருவி:

முன்னதாக, பூமியில் இருக்கக்கூடிய ரேடியோ அலைகளைக் கண்டறியும் மின்னல் மேப்பிங் அரே நெட்வொர்க்குகளை (Mapping Array networks) பயன்படுத்தி ‘மின்னல்’ கணக்கிடப்பட்டது.
இருப்பினும், மின்னல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் அதி தீவிர மின்னலைக் கணக்கிடுவதற்கு தொழில்நுட்பத்தின் அளவை அதிகரிப்பது அவசியம் என்று கருதினர்.
2016 ஆம் ஆண்டில், அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) உலகின் முதல் மின்னல்-மேப்பிங் செயற்கைக்கோளை புவிசார் சுற்றுப்பாதையில் இயக்க, பூமியின் வானிலையை நமக்கு மேலே 36,000 கிலோமீட்டர் (22,300 மைல்) தொலைவில் இருந்து கண்காணித்தது. இதன் பொருள் பூமியின் வானிலையை 24/7 நாம் கண்காணிக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், அதிகரித்த மின்னல் செயல்பாடுகள், வெப்பமண்டல சூறாவளிகள் மற்றும் இடியுடன் கூடிய மழையினையும் கணிக்க உதவுகிறது.
மின்னலின் வகைகள்:

‘மின்னல்’ எப்போதும் இடியுடன் வரும், அவை இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. மின்னல் என்பது மழைக் காலங்களில் திரண்ட கார் மேகங்களின் இடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறி போன்ற மின் பொறிக் கீற்றல். கண்ணைப்பறிக்கும் ஒளிவீச்சோடு, கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சி தான் மின்னல். மின்னலோடு கூட பேரொலியாய் இடி இடிப்பதையும் கேட்கலாம். ஆனால், ஒளி வேகமாகப் பயணிப்பதால் இடியைக் கேட்கும் முன் நாம் மின்னலைப் பார்க்கிறோம். பெரும்பாலான மின்னல்கள், இடியுடன் சேர்ந்து வரும் அல்லது ஒரு மேகத்திற்குள் தொடங்கி மற்றொரு மேகம் வழியாக வந்து சேரும். சில சமயங்களில் மேகத்திலேயே தங்கி, காற்று வழியாக வந்து இறுதியில் தரையில் இறங்கும்.
எனவே, இனி வரும் நாட்களில் இடி மற்றும் மின்னல் போன்றவற்றை தற்போது, இருக்கும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டு நாம் துல்லியமாக கணக்கிட முடியும்.