இந்தியாவின் அக்னி – 1 ஏவுகணைச் சோதனை வெற்றி – கலக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனா

0
270

கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில் இந்தியா சார்பில் உள்நாட்டு நாட்டுத் தொழில்நுட்பத்தில் அக்னி – 1 (Agni-I) ஏவுகணை தயாரிக்கப்பட்டது.

தற்போது இந்த அக்னி – 1 ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதால், பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவைக் கண்டு கலக்கமடைந்துள்ளன. மேலும், இந்தியா ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளையும் வாங்கியுள்ளது. இதை வைத்து எதிரி நாட்டு ஏவுகணையையும், விமானங்கள், டிரோன்களையும் நம்மால் பொடிப் பொடியாக்க முடியும் என்பதால் இந்நாடுகள்  நடுக்கத்தில் இருக்கின்றன.

அத்து மீறும் பாகிஸ்தான், சீனா

இந்திய எல்லையில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி வருகின்றது. அதே போல சீன ராணுவமும் அத்து மீறி வருகின்றது. பெரும் படையை வைத்துள்ள போதிலும் இந்தியாவுக்கு இது பெரும் சிக்கலாக இருந்து வருகிறது.

இந்தியாவோடு பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளிலும் அடிக்கடி அத்துமீறித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு ஒவ்வொரு முறையும் இந்தியா ராணுவம் தக்க பதிலடி கொடுத்து எதிரிகளை நிலை குலையச் செய்து வருகின்றது.

எஸ்-400 ஏவுகணை

இந்நிலையில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்க இந்தியா உடன்படிக்கை செய்து கொண்டது. இந்த விஷயம் சர்ச்சையான போது பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் அதிநவீன போர் விமானங்கள், அணு ஆயுதங்கள் இருப்பது குறித்து இந்தியா மேற்கோள் காட்டியது.

ரஷ்யாவிடம் இந்தியா எஸ்-400 ஏவுகணைகளை வாங்கியதால், சீனா 79 ஆளில்லா குட்டி விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரமோஸ் வெற்றி

இந்நிலையில் இந்தியா- ரஷ்யா கூட்டால் பிரமோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. இது இரண்டு நிலைகளில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் தன்மை கொண்டது. இதை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து ராணுவத்திலும் சேர்த்துள்ளது.

பிரமோஸ் ஏவுகணைக்குப் போட்டியாக சூப்பர்சோனிக் எச்டி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக ( அக்டோபர் 17, 2018) நடத்தியது சீனா.  இதை பாகிஸ்தானுக்கும், வளை குடா நாடுகளுக்கும் வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

இந்தியாவின் அக்னி-1 வெற்றி

இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலசோரில் அமைந்துள்ள அப்துல்கலாம் ஏவுதளத்திலிருந்து செவ்வாய் கிழமை காலை 8.30 மணிக்கு இந்தியாவின் அக்னி – 1 ஏவுகணை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

சுமார் 12 டன் எடையுள்ள அக்னி-1 ஏவுகணை குறிப்பிட்ட நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாக தாக்கக் கூடியது. சுமார் 1000 கிலோ எடையை தூக்கிச் செல்லக்கூடிய திறனுடையது.

5 மீட்டர் நீளமுள்ள அக்னி-1 முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் பாகிஸ்தான் மற்றும் சீனா தற்போது கலக்கத்தில் இருக்கின்றன. அவர்களின் அடுத்த அடி என்ன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.