28.5 C
Chennai
Thursday, April 25, 2024

[TOP 10] – உலகின் வலிமையான ராணுவங்களைக் கொண்ட 10 நாடுகள்

Date:

2018 ஆம் ஆண்டிற்கான வலிமையான ராணுவங்களின் அடிப்படையில் வரிசைப்பட்டியலை பிரபல “Global fire power”  இணையதளம் வெளியிட்டுள்ளது. உலகின் 136 நாடுகளின் ராணுவத்துள் முதல் 10 இடங்களுக்காகப் போட்டியிடும் நாடுகள் என்னென்னவென்று பார்ப்போமா..

Contents hide
அறிந்து தெளிக!
Global fire power என்பது அரசுசாரா தனியார் அமைப்பாகும். ராணுவத்தின் கட்டமைப்பு பற்றிய அட்டவணை வெளியிடும் அமைப்புகளில் முதன்மையானதும் நம்பத்தகுந்தும் கூட.

military strongest 10 countries பட்டியலைத் தீர்மானிக்கும் காரணிகள்

GFP ஆனது அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக உள்ள 55 முக்கியமான காரணிகளை கருத்திற்கொண்டு, ஒவ்வொரு காரணிகளுக்கும் தனித்துவமான சூத்திரங்களைப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த மதிப்பெண்களில் இருந்து  மதிப்பெண் தள்ளுபடி வழங்கிய பின்னர் மீதமுள்ள புள்ளிகளைக் கொண்டு அந்தந்த நாட்டின் ராணுவங்களை வரிசைப்படுத்துகிறது.

அதன்படி,

  • மதிப்பெண் தள்ளுபடி வழங்கிய பின்னர் power index என்ற முறையில் புள்ளிகள் வழங்கப்படும். 0.0000 புள்ளிகளைப் பெறும் நாடுகளே முழுமையான மற்றும் சிறந்த ராணுவத்தைக் கொண்டதாக கருதப்படும்.
  • பட்டாளங்களில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படாது. ஆனால், ஆயுதங்களின் வகைகள் மற்றும் தன்மைகள் “ புள்ளிகளுக்கு” உரியது.
  • அணு ஆயுதக்குவியல் புள்ளிகளைப் பெற்றுத்தராது. ஆனால், அணு ஆயுதங்களின் சக்தி போனஸ் மதிப்பெண்களை அள்ளி வழங்கும்.
  • நாடுகளின் பூகோள அமைவிடம், இயற்கை வளங்கள், உட்கட்டுமானங்கள் மற்றும் தொழில்துறைகள் புள்ளிகளை வழங்கும் காரணிகளாகும்.
  • ஒட்டுமொத்த மனித சக்திகளின் எண்ணிக்கை முக்கிய காரணகர்த்தா.
  • “லேண்ட்லாக்டு” நாடுகள் எனப்படும் நாலாப்க்கமும் பிற நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளுக்கு, அவை கடற்படை பரிவாரங்களைக் கொண்டிராத காரணத்தால் புள்ளிகள் பறிக்கப்படாது. ஆனால், கடல் பரப்பு இருந்தும் அவற்றை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளலாத நாடுகள் புள்ளிகளில் பின்தங்கிவிடும்.
  • நேட்டோ கூட்டமைப்பு நாடுகள், அவை நட்பு நாடுகளுடன் ஆயுதம் மற்றும் தத்தம் உதவிகளைப் பறிமாறிக்கொள்வதால் அவைகளுடைய ராணுவம் ஸ்திரமானது. புள்ளிகளும் தாராளமானது. ஐரோப்பிய ஒன்றியமும் அப்படியே.
  • ஒவ்வொரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் இங்கே மதிப்புண்டு. ஆனால், அரசியல் தலைமை மற்றும் ராணுவத் தலைமைக் காரணிகளாக கருதப்படமாட்டா.
  • நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியடையும் தன்மையும் அவற்றின் ராணுவ வலிமையைப் பறைசாற்றுமாதலால், முதல் உலகம், இரண்டாம் உலகம் மற்றும் மூன்றாம் உலகம் என நாடுகள் வளர்ச்சிக்கானப் புள்ளிகளைப் பெறுகின்றன.
  • 2017 ஆம் ஆண்டு வரிசைப்பட்டியலில் இருந்து முன்னேற்றம், தடுமாற்றம் , நிலைத்தன்மை கொண்ட நாடுகள் முறையே “Green Arrow” , “Red arrow” , மற்றும் “Double Arrow “ என குறிப்பிடப்படுகின்றன. “Double arrow” நாடுகள், போதிய மாற்றத்தை காணாத நாடுகளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட காரணிகளில் ஏற்படும் மாற்றமும் புள்ளிப்பட்டியலில் வருடந்தோறும் மாற்றத்தை ஏற்படுத்தும்

10.ஜெர்மனி (RA)

போர், ஐன்ஸ்டீன் என அறிவியலாளர்கள் வாழ்ந்த பெர்லினைக் கொண்டது மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலில் முக்கியப் பங்காற்றும் ஜெர்மனி அதற்கேற்றவாறு அதிநவீன போர்த்தடவாளங்களைக் கொண்டது. அழியாப் பிளாஸ்டிக் இங்கிருந்துதான் உலகிற்கு அறிமுகமானது.

Global power index (GFP) = 0.2461

மொத்த வீரர்களின் எண்ணிக்கை = 37,000,000

germany military
Credit: World Politics Review

வான் பலம்

  • மொத்த போர் விமானங்கள் = 714
  •  ஃபைட்டர் (  Fighter aircraft) = 94

( ஃபைட்டர் – தரையிலுள்ள இலக்கைத் துல்லியமாக தாக்குவதும், எதிரிகளின் தாக்குதலிலிருந்து லாவகமாகத் தப்பிப்பதும் இதன் சிறப்பம்சம்)

தரைப்படை

கடற்படை

கடற்கரையை அருகில் இருந்து பாதுகாப்பவை. சில  பீரங்கிகள் மற்றும் சிறிய ரக ஏவுகணைகளை இலக்கை நோக ஏவவல்லது.

Corvettes = 5

Submarine = 6

Mine warfare = 12

தொழில்நுட்பத்திற்கு பெயர்போன ஜெர்மன் தன் ராஜ்ஜியத்திலிருந்து இயற்கை எரிவாயு, நிலக்கரி , யுரேனியம் , இரும்புத் தாது, நிக்கல், பொட்டாசியம் உப்பு மற்றும் தாமிரம் ஆகியவற்றை அறுவடை செய்கிறது. இதுவே இந்த முப்படையை  10 வது இடத்தில் வைத்துள்ளது.

9. துருக்கி (RA)

அமெரிக்காவுடனான சலசலப்பு , சிரியா யுத்தத்தில் கைகலப்பு, இஸ்தான்புல்லில் கசோகி அவர்களின் கொலை ஆகியவற்றால் பெயர் போன துருக்கியின் கடந்த ஆண்டு  ராணுவ பட்ஜெட் $10,200,000,000.

GFP   = 0.2216

வீரர்களின் எண்ணிக்கை = 7,10,565

turkey military
Credit: The Peninsula Qatar

வான்பலம்

  • மொத்த போர் விமானங்கள் = 1056
  • Fighter = 207
  • Attack aircraft = 207
  • Transport = 445
  • Helicopter = 475
  • Armed helicopter = 55

தரைப்படை

  • Tanks = 2446
  • Armoured fighting vehicles = 9031
  • Self propelled artillery = 1108
  • Towed artillery = 872
  • Rocket projector = 418

கடற்படை

  • மொத்த கப்பல் தடவாளங்கள் = 194
  • Frigates = 16
  • Corvettes = 10
  • Submarines = 12
  • Patrol vessels = 34
  • Mine warfare =  11

வளங்கள்

கச்சா எண்ணெய்  மற்றும் இயற்கை எரிவாயு

8. ஜப்பான் (RA)

வடகொரியா, சீனா , ரஷ்யா போன்ற நாடுகளை துணிச்சலாக எதிர்கொள்ளும் ஜப்பான் , கடந்த ஆண்டு $44,000,000,000  டாலர்களை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.

மொத்த வீரர்களின் எண்ணிக்கை = 3,10,457

Japan-Military
Credit: i-HLS Israel Homeland Security

வான் பலம்

  • மொத்த போர் விமானங்கள் = 1508
  • Fighter = 290
  • Attack aircraft = 290
  • Transport = 486
  • Helicopters = 622
  • Armoured helicopter = 84

தரைப்படை

  •  Tanks = 679
  • Self propelled artillery = 202
  • Rocket projectors = 99
  • Armoured fighting vehicles = 3178
  • Towed artillery = 500

கடற்படை

  • மொத்த கடல் தடவாளங்கள் = 131
  • Aircraft carrier = 4
  • Destroyer = 36
  • Corvettes = 6
  • Submarine = 17
  • Patrol vessel = 6
  • Mine warfare = 25

*Destroyer என்பது பீரங்கிகள் அணுஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்லும் போர்க்கப்பலாகும். இதில் எதிரியினுடைய நீர்மூழ்கிக் கப்பலை ரேடார் மூலம் கண்டறியும் வசதிகளும் உண்டு.

வளங்கள்

அதிகளவு இரும்பு, எஃகு, உருக்கு மற்றும் பல உலோகங்கள், கனிம தாதுக்கள், மென்பொருள்கள்  என ஏற்றுமதிக்கான பல முகங்களைக் கொண்டுள்ளது.

7.தென்கொரியா (GA)

ஹீண்டாய், கியா எனப் பல கார் உற்பத்தி நிறுவனங்களையும், தொழிற்சாலைகளுக்கு ரோபாட்டிக்ஸ் கரங்களையும் வழங்கும் கொரியா சென்ற வருடம் $40,000,000,000 டாலர்களை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.

GFP index : 0.2001

மொத்த வீரர்களின் எண்ணிக்கை = 5,827,250

south korea military
Credit: We Are The Mighty

வான்படை

  • மொத்த போர் விமானங்கள் = 1560
  • Fighter = 406
  • Attack aircraft = 466
  • Transport = 382
  •  helicopter = 748
  • Armoured helicopter = 112

தரைப்படை

  • Tanks = 2654
  • Armoured fighting vehicles = 3480
  • Self propelled artillery =  1890
  • Towed artillery = 3854
  • Rocket projectors = 214

கடற்படை

  • மொத்த கடற் தடவாளங்கள் = 166
  • Aircraft carrier = 1
  • Frigates = 12
  • Corvettes = 12
  • Destroyers = 14
  • Submarine = 16
  • Patrol vessel = 69
  • Mine warfare = 11

வளங்கள்

இரும்பு , டங்க்ஸ்டன், மாலிப்டினம், நிலக்கரி ,லைம்ஸ்டோன், கிராபைட் ஆகியன

6. யுகே (GA)

பிரெக்ஸிட் பஞ்சாயத்தில் பரிதவிக்கும் யுகே தனது அதீத நிலம் மற்றும் கடற்பரப்பை அதிக கவனத்துடன் பாதுகாத்து வருகிறது. ஏனெனில் அதன் வழியேதான் அகதிகள் மற்றும் கடல்சார் கடத்தல் போக்குவரத்து நிகழ்கிறது. எனவே கடந்த ஆண்டு மட்டும் $ 50,000,000,000 டாலர்களை முப்படைகளுக்கும் வழங்கியுள்ளது.

GFP index 0.1917

மொத்த வீரர்களின் எண்ணிக்கை = 2,79,230

uk military
Credit: Daily Express

வான் பலம்

  • மொத்த போர் விமானங்கள் = 832
  • Fighters = 103
  • Attack aircraft = 143
  • Transport = 297
  • Helicopters = 333
  • Armoured helicopters. = 49

தரைப்படை

  • Tanks = 227
  • Armoured fighting vehicles = 5371
  • Self propelled artillery = 89
  • Towed artillery =126
  • Rocket projectors = 35

கடற்படை

  • மொத்த கடற் தடவாளங்கள் = 76
  • Aircraft carrier = 2
  • Frigates = 13
  • Destroyers = 6
  • Submarine = 10
  • Patrol vessel = 21
  • Mine warfare  = 13

வளங்கள்

நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், தங்கம், வெள்ளி, லெட், லைம்ஸ்டோன், சீனா களிமண், ஜிப்சம், சிலிக்கா, சாக், ராக் சால்ட், டின் மற்றும் இரும்புத்தாது.

5. பிரான்ஸ் (DA)

பிரான்ஸ் சென்ற ஆண்டு $40,000,000,000 டாலர்களை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.

GFP index : 0.1869

மொத்த வீரர்களின் எண்ணிக்கை =  3,88,635

French-Security_reuters
Credit: Breitbart

வான் பலம்

  • மொத்த போர் விமானங்கள் = 1263
  • Fighters = 499
  • Attack aircraft = 499
  • Transport = 433
  • Helicopters = 570
  • Armoured helicopters = 54

தரைப்படை

  • Tanks = 406
  • Armoured fighting vehicles = 6330
  • Self propelled artillery = 109
  • Towed artillery =  12
  • Rocket projectors = 13

கடற்படை

  • மொத்த கடற் தடவாளங்கள் =111
  • Aircraft carrier = 4
  • Frigates  =11
  • Destroyers =12
  • Submarine = 10
  • Patrol vessel = 18
  • Mine warfare = 18

வளங்கள்

நிலக்கரி, இரும்பு, பாக்ஸைட், யுரேனியம் மற்றும் சில தாதுக்கள்.

4.இந்தியா (DA)

சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பொருட்டு நவீன போர்கருவிகளை இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. கடந்த ஆண்டு நமது ராணுவ பட்ஜெட்டானது $47,000,000,000.

GFP index : 0.1417

மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 4,207,250

indian military
Credit: YouTube

வான் பலம்

  • மொத்த போர் விமானங்கள் : 2185
  • Fighters = 590
  • Attack aircraft = 804
  • Transport  = 708
  • Helicopters =  720
  • Armoured helicopters = 15

தரைப்படை

  •   Tanks = 4426
  • Armoured fighting vehicle = 3147
  • Self propelled artillery = 190
  • Towed artillery = 4158
  • Rocket projectors = 266

கடற்படை

  • மொத்த கடற் தடவாளங்கள் : 295
  • Aircraft carrier = 1
  • Frigates = 14
  • Destroyer = 11
  • Corvette = 22
  • Submarine = 16
  • Patrol vessel = 139
  • Mine warfare = 4

வளங்கள்

நிலக்கரி, மாங்கனீசு, இரும்பு, எஃகு, உருக்கு, மைகா, பாக்ஸைட், குரோமைட், லைம்ஸ்டோன் , தோரியம், வைரம், இயற்கை எரிவாயு மற்றும் கடல்சார் ஆற்றல் மூலங்கள் போன்றவை அதிகமாகக் கிடைக்கின்றன.

3.சீனா (DA)

வருங்கால அமெரிக்கா, உற்பத்தி ஜாம்பவான், ஆசியாவின் மிகப்பெரும் சொல்லாட்சி பொருந்திய சர்வாதிகார நாடு அமெரிக்காவை எட்டிப் பிடிக்கும் நோக்கோடும் தென்சீனக் கடலை மற்ற சிறிய நாடுகளிடமிருந்து கைப்பற்றவும், பலத்தை அதிகப்படுத்திகொண்டே வருகிறது. கடந்த ஆண்டு  $151,000,000,000 டாலர்களை  ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.

GFP index: 0.0852

மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 2,693,000

china military
Credit: Department of Defense – Defense.gov

வான்பலம்

  • மொத்த போர் விமானங்கள் : 3035
  • Fighters = 1125
  • Attack aircraft = 1527
  • Transport = 722
  • Helicopters = 985
  • Armoured helicopters = 281

தரைப்படை

  • Tanks = 7716
  • Armoured fighting vehicles = 9000
  • Self propelled artillery = 2000
  • Towed artillery = 6046
  • Rocket projectors = 2250

கடற்படை

  • மொத்த கடல் தடவாளங்கள் : 714
  • Aircraft carrier = 1
  • Frigates = 50
  • Destroyers = 29
  • Corvettes = 39
  • Submarines = 73
  • Patrol vessels = 220
  • Mine warfare = 29

வளங்கள்

நிலக்கரி, இரும்பு , எஃகு, உருக்கு, பாக்ஸைட், டின், டங்ஸ்டன், மாலிப்டினம், காப்பர், சில்வர், கோபால்ட், தங்கம், வெனேடியம்,ஆன்டிமனி மற்றும் அரியவகை தனிமங்கள் அங்கே தாராளம்.

2. ரஷ்யா (DA)

ட்ரம்பின் இரண்டாவது தலைவலி, ஐரோப்பிய நாடுகளின் எதிரி மற்றும் மிகசிறந்த நவீனரக ஆயுதங்களின் பிறப்பிடம். எப்போதும் இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளும். சென்ற ஆண்டில் இதன் ராணுவ நிதி $47,000,000,000

GFP index : 0.0841

மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 3,586,128

russia military power
Credit: washingtonpost.com

வான் பலம்

  • மொத்த போர் விமானங்கள் : 3916
  • Fighters = 818
  • Attack aircraft =1416
  • Transport = 1524
  • Helicopters = 1421
  • Armoured helicopters = 511

தரைப்படை

  • Tanks = 20,300
  • Armoured fighting vehicles = 27,400
  • Self propelled artiller = 5970
  • Towed artillery = 4466
  • Rocket projectors = 3816

கடற்படை

  • மொத்த கடல் தடவாளங்கள் = 352
  • Aircraft carrier = 1
  • Frigates = 9
  • Destroyers = 13
  • Corvettes = 78
  • Submarines = 62
  • Patrol vessels = 41
  • Mine warfare = 47

வளங்கள்

நிலக்கரி, இரும்பு, இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், மினரல்ஸ் மற்றும் டிம்பர் போன்றன.

1. அமெரிக்கா(DA)

கச்சா எண்ணெய் டாலரில் வியாபாரமாகும் வரை அமெரிக்கா தான் எப்போதும் நம்பர் ஒன். 2018 ல் இதன் ராணுவ பட்ஜெட் $647,000,000,000.

GFP index : 0.0818

மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 2,083,100

military america US
Credit: The National Interest

வான் பலம்

  • மொத்த போர் விமானங்கள்   = 13,362
  • Fighters = 1962
  • Attack aircrafts =2830
  • Transports = 5248
  • Helicopters = 5758
  • Armoured helicopters = 973

தரைப்படை

  • Tanks = 5884
  • Armoured fighting vehicles = 38,822
  • Self propelled artillery =  950
  • Towed artillery = 795
  • Rocket projectors = 1197

கடற்படை

  • மொத்த கடல் தடவாளங்கள் = 415
  • Aircraft carrier = 20
  • Frigates = 10
  • Destroyers = 65
  • Submarines = 66
  • Patrol vessels = 13
  • Mine warfare =11

வளங்கள்

தங்கம், வெள்ளி, யுரேனியம்,  மெர்குரி, ஜிங்க், பொட்டாஷ், நிக்கல், மாலிப்டினம், பெட்ரோலியம், காப்பர், லெட் மற்றும் டாலர்

குறிப்பு

  • பொதுவாக ஒரு நாட்டின் ராணுவ வீரர்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றனர். Active soldier மற்றும் Reserve soldier .  இங்கே குறிப்பிட்டுள்ள எண்ணிக்கை ஆக்டிவ் வீரர்களைக்குறிக்கும் . அவர்கள் எக்காலமும் எல்லைப்புறத்திலேயே பணிபுரிபவர்கள். Reserve படைகள் என்பது , தேவையான நேரத்தில் களமிறங்கும் அதிரடி வீரர்களைக் குறிக்கும். எல்லா நாட்டிலும் லட்சக்கணக்கான ரிசர்வ் படைவீரர்கள் இருப்பர்.
  • இங்கே, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தனித்துவமான போர் விமானங்கள் ஒட்டுமொத்தமாகவும் , fighter aircraft களமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • வீரர்களின் எண்ணிக்கை மாறுபடும் வாய்ப்புள்ளது.
  • கட்டுமானத்தில் உள்ள கப்பல்கள் மற்றும் விமானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!