இந்த ஆண்டின் சிறந்த 10 அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
1. சக்காரா (Saqqara, Egypt)
2020 செப்டம்பர் மாதத்தில், சக்காரா நகரத்தின் 40 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய 100 தெளிவான வர்ணம் பூசப்பட்ட மரத்தாலான மம்மிகளின் சவப்பெட்டிகளைக் கண்டுபிடித்தனர்.


2. மட்பாண்டங்கள் (Çatalhöyük -துருக்கி)
சுமார் 6700–5650 B.C. க்கு முந்தைய கால மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன.

3. கீழடி அகழ்வாராய்ச்சி
கீழடியில் முழு மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது சேதம் அடையாமல் அப்படியே இருந்தது. முழு மனித உடல் எலும்புக்கூடு சேதமில்லாமல் கிடைப்பது இதுதான் முதல்முறை. மேலும் ஒரு களிமண் சூளை, கால்நடை எலும்புகள், பானைகள், தங்க நாணயம், கிண்ணம், மட்பாண்டங்கள் உள்ளிட்ட 913 பொருட்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

4. மிகப்பெரிய வைக்கிங் டி.என்.ஏ ஆய்வு (Northern Europe and Greenland)
வடக்கு ஐரோப்பா மற்றும் கிரீன்லாந்தில் வைக்கிங்குளின் 442 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

5. மெக்சிகோ (Mexico City, Mexico)
மெக்சிகோவில் கண்டெடுக்கப்பட்ட 3 மண்டையோடுகளின் பற்கள் ஐசோடோப்பு, மரபணு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. பற்கள் மேற்கு ஆப்பிரிக்கர்களின் பற்களோடு பொருந்திப்போகின்றது. அதாவது கிபி 1500 களில் ஆப்பிரிக்கர்கள் மெக்சிகோவில் அடிமைகளாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

6. லூவியன் கல்வெட்டு (Luwian Inscription, Türkmen-Karahöyük, Turkey)
துருக்கியில், கிமு 8 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய லூவியன் மொழியில் உள்ள கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

7. ரோமுலஸ் ஆலயம், இத்தாலி (Rome, Italy)
ரோம் நகரை உருவாக்கியவரும் அதன் முதல் அரசருமாகிய ரோமுலஸிற்கு கிபி 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் ஆலயம் இருந்ததற்கான சுவடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.


8. பழமையான சீன கலைப்படைப்பு (Chinese Artwork, Henan, China)
13,500 ஆண்டுகள் பழமையான ஒரு கலைப்படைப்பு சீனாவின் ஹெனான் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எரிக்கப்பட்ட எலும்பைக்கொண்டு .5 அங்குலம் அளவு உயரத்தில், ஒரு பறவையின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு நேர்த்தியான, அபாரமான திறமையுடைய ஒருவர் படைத்த கலைப்பொருள் போல இது உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

9. பழமையான மாயன் கோயில், மெக்சிகோ (Tabasco, Mexico)
கிமு 1000-800 இடைப்பட்ட காலத்தில் சடங்குகளுக்காக மாயன்களால் உருவாக்கப்பட்ட, சுமார் 50 அடி உயரத்தில் 1 மைல் தொலைவிற்கு ஒரு அமைப்பு கண்டறியப்பட்டது. இது இயற்கை நிலப்பரப்பின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. “சோகோ” என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு ஈட்டி, இரண்டு அடி உயர சுண்ணாம்பு சிற்பம் ஆகியவை இதுவரை அகழ்வாராய்ச்சியாளர்களால் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.


10. லண்டனின் பழமையான அரங்கம் (London’s Oldest Theater)
1560- ஆம் ஆண்டுகளில் செயல்பட்டு வந்த பழமையான அரங்கம் ஒன்று அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
