புதையல் எடுக்கப்போய் பூதம் கிளம்பிய கதை தெரியும். ஆனா பூதத்துக்காகப் புதையல் எடுத்துத்தந்த கதை தெரியுமா? எல்லாருக்கும் தெரிந்த டைட்டானிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட கதைதான் அது. கொஞ்சம் சுவாரசியமானதுதான். CNN தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் இந்த ரகசியத்தை வெளியிட்டார் அமெரிக்காவின் கப்பற்படை கமேண்டரான ராபர்ட் பெல்லார்ட் (Robert Bellard).

பனிப்போர்
அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் நடந்த பனிப்போர் காலங்களில் இரு பெரும் நாடுகளுமே ஒன்றையொன்று உளவுபார்க்கத் தொடங்கின. பனிப்போரின் உச்சகட்ட காலங்களில் அமெரிக்காவின் USS Threshers, USS Scorpion ஆகிய 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் சோவியத் ஒன்றியத்தின் நீர்மூழ்கிக் கப்பல் ஆராய்ச்சிக் குழுவை உளவு பார்த்தல் மற்றும் பார்த்தவுடன் அழித்துவிடும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் ரிட்டர்ன் ஆஃப் தி சூனியமாக இரண்டு நவீன கப்பல்களுமே 1963 மற்றும் 1968 ஆம் ஆண்டுவாக்கில் காணாமல் போயின. இதில் USS Scorpion மட்டும் சோவியத்தின் அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பலுக்கு அருகில் சென்று உளவுபார்த்தது.
அந்த காலகட்டத்தில் மூழ்கிய கப்பல்களைக் கண்டறியவும் மீட்கவும் வாய்ப்பு இல்லை. ஆனால் அப்படியே விட்டுவிட முடியாதே. தொழில்நுட்பம் கைப்பற்றப்பட்டு விடுமே. ஆக என்ன சொல்லி கப்பலைத் தேடுவது? அமெரிக்காவுக்கு காரணமாயில்லை! டைட்டானிக் கப்பலை கண்டறிய போகிறேன் என்று உலகறிய அறிவித்து விட்டு சொந்த வேலையை துவங்கியது. அந்த பணிக்குத்தான் ராபர்டை(அப்போது ராபர்ட் கடல்சார் ஆராய்ச்சியாளர்) நியமித்தது அமெரிக்க அரசு. அவர் நீர்மூழ்கியைக் கண்டுபிடித்து தருவதற்கு பிராயச்சித்தமாக டைட்டானிக் கப்பலை எடுக்க நிதி உதவி அளிக்க முன்வந்தது அமெரிக்கா

முதலில் நீர்மூழ்கி பிறகு நீரில் மூழ்கிய டைட்டானிக்..
அப்படித்தான் 1985 ல் வெளியே வந்தது டைட்டானிக். இதுமட்டுமல்ல, இந்த மாதிரி ரகசிய பணி பற்றி ராபர்டிடம் மேலும் கூறக்கேட்டபோது “அவைகள் இன்னும் காப்பாற்ற கூடிய ரகசியமாகவே உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.”
சமத்துவம் பேசும் மனிதனை எந்த முதலாளிக்குத்தான் பிடிக்கும். மூழ்கி நூறு ஆண்டுகள் ஆனாலும் அதன் மர்மம் நிறைந்த பல செய்திகள் இன்றும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.