இரண்டு மாதம் தூங்கினால் மட்டும் போதும் 12 லட்சம் ரூபாய் சம்பளம் தரத் தயாராக இருக்கிறது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா. ஜெர்மனியின் வானியல் ஆராய்ச்சி மையம் (German Space Agency) மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (European Space Agency) ஆகியவை இணைந்து புதிய ஆய்வு ஒன்றை நிகழ்த்த இருக்கிறது. இதில் விண்வெளியில் மனிதர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

விண்வெளியைப் பொருத்தவரை அங்கு மனிதர்கள் சந்திக்கும் முதல் சிக்கல் புவியீர்ப்பு விசை இல்லாதது தான். இதனால் உடலில் உள்ள நீர் முழுவதும் தலைப்பகுதிக்கு பயணிக்க ஆரம்பிக்கும். இதன்காரணமாக தலைசுற்றல், கை நடுக்கம் முதலியவை விண்வெளி வீரர்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும். இதனைக் கருத்தில் கொண்டே நாசா செயற்கை புவியீர்ப்பு தடையை உருவாக்கியிருக்கிறது. இந்த குறிப்பிட்ட அறைக்குள் புவியீர்ப்பு விசை இருக்காது அதாவது உங்களால் உங்களுடைய எடையை உணர முடியாது.
அந்த அறைக்குள் தான் நீங்கள் 2 மாதம் ஓய்வெடுக்க இருக்கிறீர்கள். மிகுந்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு பின்பே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கை அறை, ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒருமுறை சுழலும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு நீங்கள் தயார் என்றால் உங்களுக்கு சோதனைக்கு முன்பாக 15 நாட்களும் சோதனைக்கு பின்பாக 14 நாட்களும் நாசா சிறப்பு பயிற்சி அளிக்கும். இந்த இரண்டு மாத காலத்தில் உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம். மேலும் அங்கு உள்ள சிறப்பு மருத்துவர்கள் அளிக்கும் உணவினை தான் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சோதனைகள் பங்குபெற விரும்பும் நபர்கள் புகைப்பழக்கம் அற்றவராகவும், 22 முதல் 55 வயது கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். கண்டிப்பாக ஆண்களுக்கு அனுமதி கிடையாது. எனவே தூங்கும் கலையில் பிஎச்டி முடித்த பெண்கள் நாசாவை அணுகவும்.