நீங்கள் காலப்பயணம் செய்யத் தயாரா? எகிப்தில் இருக்கிறது அதற்கான வழி..!?!?

Date:

எகிப்து நாட்டின் அபேடாஸ் (Abydos, Egypt) எனும் இடத்தில் உள்ள, சேட்டி 1 கோவில் எப்போதும் மர்மங்களுக்குப் பெயர் பெற்றது. இங்கு பழங்கால ஸ்டார்கேட் (Stargate) இருப்பதாகவும், அதன் மூலம் வேறு உலகத்திற்கான நுழைவு வாயில் இருப்பதாகவும் வதந்தி நிலவுகிறது.

இந்த மர்மங்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாக, இக்கோவிலில் உள்ள பல சுவர்களில் விசித்திரமான சிற்பங்கள் உள்ளன. ஆனால், அவற்றை எகிப்து நாட்டு ஆய்வாளர்களால் விளக்க இயலவில்லை. இது போன்ற சிற்பங்கள் வேறெந்த கோவில்களிலும் காணக் கிடைப்பதில்லை.

காலப்பயணம்
Credit : Express.com

இக்கோவிலில் பல நூற்றாண்டுகளாக ஸ்டார்கேட் எனும் காலப்பயணம் செய்வதற்கான நுழைவு வாயில் மறைந்துள்ளது என்ற தகவலை இந்தப் புதிய விசித்திர சிற்ப ஆதாரங்கள் நிரூபிப்பதால், அவற்றை ஆராய்ந்து உண்மையான அர்த்தங்களைக் கண்டறிய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அபேடாஸ் கோவில்

அபேடாஸ் கோவில் முன்னர் பழமையான நிலத்தில் இடுகாடாக இருந்தது எனவும், இது எகிப்தின் மையப் பகுதியில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இன்றைக்குக் காணப்படும் அந்தக் கோவிலானது, மிகவும் பழமையான புனிதக் கோவில் மீது சேட்டி-1  என்ற எகிப்து மன்னனால் கட்டப்பட்டது. இதில் பல்வேறு ஆழமான இரகசியங்கள் ஒளிந்துள்ளன. பழங்கால நம்பிக்கையின் படி, இந்த அபேடாஸ் கோவில் அடுத்த உலகிற்கு மிகவும் நெருக்கமான புள்ளியாக இருப்பதாக நம்பப்படுகிறது.

மெல்கிசெதேக்

இந்த கோவில் மெல்கிசெதேக் (Melchizedek) என்ற மத குருக்களின் இல்லமாகத் திகழ்கிறது. இவர்கள் உண்மையான தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் மற்றும் மற்றவர்களுக்கு சேவை புரிய அர்ப்பணிக்கப்பட்டவர்கள். இவர்கள் தான் அபேடாஸ் கோவிலில் உள்ள ஸ்டார்கேட்டின் பாதுகாவலர்களாக திகழ்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இரகசிய விண்வெளி திட்டத்தில், அபேடாஸ் கோவிலில் உள்ள இயற்கையான ஸ்டார்கேட் , இராணுவ ஆய்வுகளுக்குப்  பயன்படுத்தப்பட்டது. அவர்கள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டாயமாக ஸ்டார்கேட்டை திறந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

காலப்பயண  இயந்திரத்தை அப்படியே பிரதிபலிப்பது போல, கோவில் சுவர்கள் முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது. அதில் இருக்கும் இறக்கைகளுடன் கூடிய ஒரு வாகனம், ‘தி டைம் மெஷின்’ (The Time Machine ) படத்தில் வரும் காலாப்பயண வாகனத்தை நினைவு படுத்துகிறது.

3b5876938adfffb03878369741e4249c
Credit : Express.com

சொர்க்கத்திற்கான வழி

இந்தச் சுவர் சிற்பங்களைப் படம் பிடித்து , எகிப்திய ஆய்வாளர்களிடம் காட்டிய போது, இது ‘இரண்டாம் உலகிற்கான நுழைவுவாயில்’ என பதிலளித்தனர். ஆனால், இந்தச் சுவரில் ஒரு பகுதி மட்டும் முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்டது. இதைப் பார்க்கும் போது, யாரும் இந்த இரகசயத்தை முழுமையாக அறியக் கூடாது என்ற நோக்கத்துடன் செய்ததாகவே தோன்றுகிறது.

இந்த சுவர் சிற்பங்கள் பற்றிய தகவல்களை உண்மையென்று நிரூபிக்க எந்த வழியும் இல்லாத நிலையில், பல்வேறு அதிக மேம்படுத்தப்பட்ட உள்ளுணர்வாளர்களிடம் இந்த அபேடாஸ் சிற்பங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அவர்களின் கருத்து ‘சொர்க்கத்திற்கான வழி’, ‘கற்பனைக்கு அப்பாற்பட்டது’ என நேர்மறை மற்றும் எதிர்மறையாகப் பல்வேறு சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்தது.

காலப்பயணம் சாத்தியமா இல்லையா என்பதற்கு அதே காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!