கருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

Date:

இரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும்.

மே 2011 இல் ‘ப்ரோசிடிங்ஸ் ஆஃப் தி ராயல் சொசைட்டி பி’ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, ஒற்றை குழந்தையை பெற்ற தாய்மார்களை காட்டிலும், இரட்டையர்களை பெற்ற தாய்மார்கள் தான் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

Twins Facts001 1
Credit: pixabay.com/

இரட்டையர்கள் பொதுவாக ஒரே இடத்தில் தான் வளர்க்கப்படுவர். இருப்பினும், அவர்களுக்கிடையே தனிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே டி.என்.ஏ-வை கொண்டிருப்பார்கள். மேலும், அவர்களுக்கு இடையே உடல் ரீதியாகவும் பல வேறுபாடுகள் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியின் முடிவில், குணம் அல்லது உருவகத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்களை விட, வித்தியாசமான தோற்றம் கொண்ட இரட்டையர்கள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது, இரு மடங்கு மற்றும் மும்மடங்கு மகிழ்ச்சியை அளிப்பார்கள் என சொல்லப்படுவது உண்மைதான் என்றாலும், அதற்கான சவால்களும் பல மடங்கு இருக்கும். ஒரு குழந்தையை வளர்ப்பதே கடினம் தான். அப்படி இருக்க இரண்டு, மூன்று குழந்தைகளை வளர்ப்பதில் அதிக சிக்கல்களை பெற்றோர்கள் சந்திக்கின்றனர். உங்களுக்கு பிறக்க இருப்பது இரட்டை குழந்தைகள் என தெரிய வந்திருந்தால், மகிழ்ச்சியுடன் சேர்த்து காத்திருக்கும் சவாலை சமாளிக்கும் வழியை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

Twins Facts004
Credit: pexels.com/

செப்டம்பர் 2006 இல் இனப்பெருக்க மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்கள் மற்ற தாய்மார்களை விட சராசரியாக ஒரு அங்குல உயரம் கொண்டவர்கள். மனித இனப்பெருக்க இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இரட்டையர்களை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 35 வயதிற்கு மேல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டால், உடல் ரீதியாக கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மத்திய ஆப்பிரிக்க நாடான பெனினில், பிறக்கும் ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் சுமார் 27.9 சதவிகிதம் இரட்டையர்கள் பிறக்கின்றனர் என்று இரட்டையரின் தேசிய சராசரி அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆசியா, லத்தீன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில், சுமார் 1,000 பிறப்புகளுக்கு எட்டு என்ற விகிதத்தில் மட்டுமே இரட்டையர்கள் பிறப்பதாக செப்டம்பர் 28, 2011 அன்று ‘PLoS ONE’ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளரும் நாடுகளின் வெவ்வேறு பகுதிகளிடையே இரட்டையரின் பிறப்பு விகிதங்களில் ஏன் இத்தகைய வேறுபாடுகள் உள்ளன என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை என்றாலும், பெரும்பாலான வேறுபாடுகள் சகோதர, சகோதரிகளின் பிறப்பு விகிதங்கள் காரணமாக இருப்பதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர். ஒரே மாதிரியான இரட்டையர்கள் உலகளவில் 1,000 பிறப்புகளுக்கு 3.5 முதல் 4 என்ற விகிதத்தில் பிறக்கின்றனர். ஒரு தாயின் வயது, உயரம், புகைபிடித்தல் போன்ற நடவடிக்கைகள் மற்றும் அவர் எந்த “இரட்டை மரபணுக்களை” பெற்றிருக்கிறார்? என்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சகோதரத்துவ இரட்டை பிறப்பு விகிதங்கள் மாறுபட காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Twins Facts002 1
Credit: pixabay.com/

அக்டோபர் 7, 2011 இல் ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், 14 வார கர்ப்பக்காலத்திலேயே இரட்டையர்கள் தங்கள் தாயின் வயிற்றில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள், இத்தாலியில் உள்ள படோவா பல்கலைக்கழகத்தின் ‘உம்பர்ட்டோ காஸ்டெல்லோ’ இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கர்ப்பத்தின் 14 மற்றும் 18 வது வாரங்களில் நான்கு பரிமாண ‘அல்ட்ராசோனோகிராஃபி’ பயன்படுத்தி ஐந்து ஜோடி இரட்டை கருக்களின் இயக்கங்களை ஆய்வு செய்தனர். 14 வாரங்களுக்குள், கருக்கள் குறிப்பாக இணை-இரட்டை, 14 மற்றும் 18 வாரங்களுக்கு இடையில் தொடர்பு இயக்கங்களை அதிகமாக மேற்கொள்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

உதாரணமாக, சில வீடியோக்களில் ஒரு கரு பின்புறம் அல்லது இணை இரட்டையரின் தலையை மூடிக்கொண்டிருந்தது. இரண்டு சோதனைகளுக்கிடையில் கை-வாய் மற்றும் கை-கண்கள் போன்றவற்றின்
இயக்கங்கள் குறைந்துவிட்டாலும், 18 வாரங்களில் கவனிக்கப்பட்ட இயக்கங்களில் சுமார் 29 சதவிகிதத்தைக் கணக்கிடும் வரை மற்ற உறுப்புகளின் இயக்கங்கள் அதிகரித்து காணப்பட்டன.

இரட்டை குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மகிழ்ச்சியும், சிறிய சண்டைகளும் அவ்வப்போது காணப்பட்டாலும் கூட, இரட்டை குழந்தைகள் மூலம் அவர்களின் பெற்றோர்கள் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!