
இந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்கள் மல்பெரி வண்ண சிவப்பு தாது கொண்டு வரையப்பட்டவையாகும். கிட்டத்தட்ட 190 பவுண்டுகள் (85 கிலோகிராம்) வரை எடையுள்ள இந்த வார்டி பன்றிகள் (warty pig) இன்றும் இந்தோனேசியாவின் ஒரு சில இடங்களில் காணப்படுகின்றன. இருப்பினும், இதன் எண்ணிக்கையானது தற்பொழுது குறைந்து கொண்டே வருகின்றது என்று க்ரிஃபித் பல்கலைக்கழகத்தின் மனித பரிணாம வளர்ச்சிக்கான, ஆஸ்திரேலிய ஆராய்ச்சி மையத்தின் தொல்பொருள் பேராசிரியரான ஆடம் ப்ரூம் கூறினார்.
டிசம்பர் 2017 இல், ப்ரூம் மற்றும் அவரது குழுவினர், இந்தோனேசிய தீவான சுலவேசியில் (Sulawesi) உள்ள லியாங் டெடோங்கே (Leang Tedongnge) குகையில் இருந்து மேலும், மூன்று வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை கண்டறிந்தனர்.
கரடுமுரடான மலைப்பாதை:

இந்த குகையானது, இந்தோனேசியாவில் புகிஸ் விவசாயிகள் வசிக்கும் ஒரு சிறிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்குக்கு செல்ல சாலைகள் எதுவும் இல்லை. இருப்பினும், இதனை அடைவதற்கு சுண்ணாம்புக் குன்றுகளுக்குச் சென்று கரடுமுரடான மலைப்பாதை வழியாக கடந்து செல்லலாம். இது, இந்த பள்ளத்தாக்கிற்கு செல்வதற்கு ஒரே ஒரு நுழைவாயில் என்று ஆராய்ச்சி குழுவினர் கூறுகின்றனர்.
இந்த பள்ளத்தாக்கானது இந்தோனேசியாவில் உள்ள பெரிய நகரமான மக்காசருக்கு அருகாமையில் இருந்தபோதிலும், இதற்கு முன்னர் எந்த மேலை நாட்டினரும் இந்த இடத்தில் கால் வைக்கவில்லை என்று ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றிய செய்தியானது அறிவியல் முன்னேற்றங்கள் (Science Advances) இதழில் புதன்கிழமை (ஜன. 13) அன்று வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
4.5 முதல் 1.8 அடி நீளம் கொண்ட வார்டி பன்றிகள்:
சுண்ணாம்புக் குகையில் அமைந்துள்ள ஒரு சில வார்டி பன்றியின் வரைபடங்கள் சுமார் 4.5 முதல் 1.8 அடி (136 ஆல் 54 சென்டிமீட்டர்) நீளம் கொண்ட மிகவும் பழமையான ஒன்றாகும். இதனை தவிர்த்து, இரண்டு மனித கைகளின் வெளிப்புற தோற்றங்கள் அந்த குகை ஓவியத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த பன்றியின் ஓவியமானது, மாறுபட்ட கலாச்சார மரபுகளை மீண்டும் நமக்கு கண் முன் கொண்டு வருகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பழமையான இரண்டு விலங்குகளின் ஓவியங்கள்:

லியாங் பாலங்காஜியா 1, (Leang Balangajia 1) என்ற மற்றொரு ஆராய்ச்சி குழுவினரால், அதன் அருகிலுள்ள மற்றொரு குகை ஒன்றில், சுமார் 6.1 முதல் 3.6 அடி (187 முதல் 110 செ.மீ) வரை நீளமுடைய பெரிய வர்ணம் பூசப்பட்ட பன்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த குகையில் இருந்த பழமையான இரண்டு விலங்குகளின் ஓவியங்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை தவிர்த்து, இரண்டு குகைகளிலும் உள்ள பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்கள், வயது வந்த ஆண் பன்றிகளை சித்தரிக்கிறது என்று ஒரு சில உடற்கூறியல் தடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, அவை ஈர்க்கக்கூடிய முக மருக்கள் மூலம் வரையப்பட்டுள்ளன. அவை, பெண்களை விட வயது வந்த ஆண்களின் வரைபடங்களாகும்.
43,900 ஆண்டு பழமை வாய்ந்த வார்டி பன்றியின் ஓவியம்:
ஹேரி, வார்டி பன்றிகள் (warty pig) சுலவேஸித் தீவுக்கு தனித்துவமானவையாகும். இந்த பன்றிகளை மனிதர்கள் வேட்டையாடி வளர்த்தார்கள் என்று தொல்பொருள் சான்றுகள் கூறுகின்றன. “இதன்மூலம் ஆரம்பகால மனிதர்கள் இந்த வார்டி பன்றிகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெளிவாகத் தெரிவதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீவின் மற்றொரு குகையில் கண்டுபிடிக்கப்பட்ட வார்டி பன்றி (warty pig) ஒன்று, குறைந்தது 43,900 ஆண்டுகளுக்கு முந்தையது என்று 2019 ஆம் ஆண்டு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டதாக, நேச்சர் இதழில் (Nature journal) செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தொல்பொருள் பேராசிரியரான ஆடம் ப்ரூம் கூறும்போது, ‘தற்போது, நாங்கள் கண்டுபிடித்துள்ள பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றியின் (warty pig) ஓவியங்கள் தொடர்பான தகவல்கள் மிகவும் வியக்கத்தக்கது. இதுபோன்று, இனி வரும் காலத்தில் இன்னும் பல உருவங்கள் மற்றும் பழமையான வடிவமைப்புகளை கண்டுபிடிப்பதற்கான முன்னோடியாக இது திகழும்’ என்கிறார்.