புதிய ஆராய்ச்சி முடிவு: மொபைல் ஃபோன் ஸ்கிரீன், ரூபாய் நோட்டுகள், வங்கி ATM திரை மீது 28 நாட்கள் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ்!

Date:

ஒரு காய்ச்சல் வைரஸ் பொதுவாக 17 நாட்கள் வரை உயிர்வாழ்கிறது. ஆனால் மொபைல் ஃபோன் ஸ்கிரீன், ரூபாய் நோட்டுகள், வங்கி ATM திரை மீது கொரோனா வைரஸ் 28 நாட்கள் உயிருடன் இருக்கும் என்று ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

28 நாட்கள் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ்

SARS-CoV-2 “மிகவும் வலுவானது” மற்றும் மென்மையான மேற்பரப்பில் 28 நாட்கள் உயிருடன் இருக்கும் எனவும் இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், ரூபாய் நோட்டுகள் மற்றும் கண்ணாடிகளில் கொரோனா வைரஸ், மூன்று நாட்கள் வரையிலும், பிளாஸ்டிக் மற்றும் துருபிடிக்காத எஃகு மீது ஆறு நாட்கள் வரையிலும் உயிருடன் இருக்கும் என்று கண்டறியப்பட்டிருந்தது. கொரோனா வைரஸின் பரவுதல் பொதுவாக பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பு மூலம் நிகழ்கிறது. குறிப்பாக இருமல், தும்மல், பேசுவது, பாடுவது மற்றும் சுவாசிப்பது போன்றவை மூலம் பரவுகிறது.

28 நாட்கள் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ்

COVID-19 ஏற்படுத்தும் வைரஸ் குளிர்ந்த நிலையில் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ்கிறது என்று இந்த ஆராய்ச்சி மேலும் கூறியுள்ளது. கோடைகாலத்தை விட குளிர்காலத்தில் அதைக் கட்டுப்படுத்துவது சவாலானது என்றும், 40 டிகிரி செல்சியஸில், வைரஸின் உயிர்வாழும் வாய்ப்புகள் ஒரு நாளுக்கு குறைவாகவே இருக்கும் என்றும் இந்த ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

இது 20 டிகிரி செல்சியஸ் (68 டிகிரி பாரன்ஹீட்) அறை வெப்பநிலையில் உள்ள பொருட்கள் மொபைல் போன் திரைகள், வங்கி ATMகள், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றில் உயிர்ப்புடன் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தாங்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வங்கி ஏடிஎம்கள், சூப்பர்மார்க்கெட் சுய சேவை பிரிவுகள் மற்றும் விமான நிலைய செக்-இன் போன்ற தொடுதிரை சாதனங்கள் சற்றே உயர்ந்த தொடு மேற்பரப்புகளாக இருப்பதால், அவை தொடர்ந்து சுத்தம் செய்யப்படுவதில்லை. மொபைல் போன்கள் கைகளைப் போல, தொடர்ந்து சுத்தம் செய்யப்படுவதில்லை. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது, மேலும் இறப்பு எண்ணிக்கை 109,389 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: கொரோனா காலத்தில் வீட்டில் இருக்க வேண்டிய 5 மருத்துவ சாதனங்கள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!