தானியங்கி வாகனத்திற்கு உள்ளே தங்கும் விடுதி

Date:

வருடம் முழுவதும் ஒரே வீடு, ஒரே தெரு, பக்கத்து வீட்டுக்காரரின் அதே இறுகிய முகம், ஒரே ஊர். சலித்துப்போய் விடாதா? இதற்குத் தீர்வு தான் என்ன? கார் போல் வீட்டிற்கும் சக்கரங்கள் இருந்தால் நமக்குப் பிடித்த இடத்திற்கு ஓட்டிச் சென்றுவிடலாம் என்று அடிக்கடி தோன்றும் அல்லவா? இந்தக் கற்பனை கனடாவில் நிஜமாகியிருக்கிறது. மூன்று அறைகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட தானியங்கி வாகனத்தை Aprilli Design Studio என்னும் நிறுவனம் உருவாக்கி வருகிறது. பயணிக்கும், தங்கும் விடுதிக்காவே (The Autonomous Travel Suite) இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் லீ (Steve Lee) தெரிவித்துள்ளார்.

ATS Autonomous Travel Suite
Credit:

இந்த வாகனத்தில் நீச்சல் குளம், விருந்தினர் அறை தேவைப்படுவோருக்கும் வசதி செய்து தரப்படும்!!

பயணிக்கும் விடுதி

சிறிய கட்டிலுடன் கூடிய தூங்கும் அறை, சமையலறை, கழிப்பறை, குளியலறை, இவைபோக தனியாக ஒரு அறையும் இந்தக் காரில் உள்ளது. ஆறு முதல் பத்து மணிநேரம் பயணிக்கக்கூடிய இந்த வாகனம் சிறந்த வடிவமைப்புத் திட்டத்திற்கான Radical Innovation விருதைப் பெற்றிருக்கிறது. வாகனம் மற்றும் தங்கும் விடுதியின் தேவைகள் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதன் வடிவமே இந்தத்திட்டம். மேலும் திருமணமானோர், குடும்பம் என வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வாகனத்தின் கட்டணத்தில் மாற்றம் இருக்கும்.

பயணிகள் தங்களுக்குப் பிடித்த இடத்திற்கு இந்த வாகனத்தை எடுத்துச் செல்லலாம். விடுதி நிர்வாகத்திற்கு வாகனம் குறித்த தகவல்கள்(பயணிக்கும் திசை, வேகம், தூரம்) அனைத்தும் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டுவிடும். தானாகவே இயங்கும் இந்த வாகனத்தில் நீச்சல் குளம், விருந்தினர் அறை தேவைப்படுவோருக்கும் வசதி செய்து தரப்படும் என அந்நிறுவனம் அறிவித்திருப்பது பல பயணிகளை ஈர்த்துள்ளது. வரும் 2021 – ஆம் ஆண்டிற்குள் இக்கார் சேவை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எப்படி இயங்கும் ?

முதலில் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் காராகத்தான் இது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேவைகள் அதிகம் என்பதால் பேட்டரிகளில் எளிதில் மின்னூட்டம் குறைந்து போய்விடும். அதனாலேயே ஹைட்ரஜன் எஞ்சினுக்குத் தகுந்தபடி வடிவமைப்புகளை மாற்றியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால் ஹைட்ரஜன் எஞ்சின்கள் இன்னும் வளராத குழந்தைகளாகவே ஆய்வகத்தில் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. எப்படி அதனை வெற்றிகரமாக செயல்பட வைக்கப்போகிறார்கள் என்பதை அந்நிறுவனம் இன்னும் விளக்கவில்லை.

autonomous-travel-suite
Credit: CNN

இல்லையென்றால் Alternative Fuels எனப்படும் மாற்று எரிபொருட்கள் ஏராளம் உள்ளன. அவற்றின் அதாவது ஒன்றின் மூலம் இத்திட்டமானது முடிக்கப்படும். உலகத்தின் பல கடற்கரை நகரங்களில் இந்த வாடகை பயணிக்கும் தங்கும் விடுதி விருந்தினர்களுக்காகக் காத்திருக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!