28.5 C
Chennai
Wednesday, July 6, 2022
Homeஅறிவியல்ஆராய்ச்சிகள்உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்!

உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்!

NeoTamil on Google News

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட விலங்கினங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, ஆறு அறிவு கொண்ட மனித இனமாக நிலைநிறுத்தி வருவதே இந்த மூளைதான்.

100 சதவிகித மூளை அளவில், மனிதர்கள் 2 சதவீதம் முதல் 5 சதவீத மூளையையும், ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.
அப்படியிருக்க மீதிருக்கும் மூளையின் செயல்பாடுகளை வியக்காமல் இருக்க முடியுமா?

மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க
Credit: pixabay.com/

எனவே, நல்ல விஷயங்களுக்கு உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும், அதிக ஈடுபாட்டுடனும் வைத்திருக்க தேவையான 6 எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. கற்றலில் ஆர்வம் வேண்டும்:

கற்றலில் ஆர்வத்தைப் பற்றிய சமீபத்திய ஆய்வானது, வெவ்வேறு நிறுவனங்களில் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் 200 ஊழியர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து மேற்கொண்டது. ஆய்வின் முடிவில், முதல் குழு புதுமையான கேள்விகள் மற்றும் சிக்கல்களுக்கான தீர்வுகள் உள்ளிட்ட படைப்பாற்றல் நடவடிக்கைகளில் அதிக மதிப்பெண் பெற்றது. அவர்கள், கற்றலில் அதிக ஆர்வத்தை வளர்த்துக் கொண்டது கண்டறியப்பட்டது.

உங்கள் மூளையை சுறுசுறுப்பாக, அதிக ஈடுபாடுடன் செயல்பட புதிர்களை விடுவிப்பது அவசியம். சுடோகோ, குறுக்கெழுத்து போன்றவை உங்களது நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவையும் சிறந்த வொர்க் அவுட்கள் ஆகும். எனவே, நீங்கள் ஒவ்வொரு புதிய நாளை துவங்கும் போதும், அன்றைய புதிய விஷயங்களில் கற்றலின் அவசியத்தை புரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலான தொழில்முனைவோரின் வெற்றிக்கு, இது முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

2. புத்தகங்களைப் படியுங்கள்:

Brain Active Tips004
Credit: pixabay.com/

வாரன் பபெட், பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் மார்க் கியூபன் ஆகியோர் புத்தக படிப்பில் வெற்றி பெற்றவர்கள். இதுகுறித்து பபெட் கூறும்போது, “ஒவ்வொரு நாளும் குறைந்தது 500 பக்கங்களைப் படியுங்கள்” இது கூட்டு வட்டி போன்றது என்று அவர் பல கையேடுகள் மற்றும் ஆவணங்களை சுட்டிக்காட்டினார். மேலும், அவர் “அறிவு வளர மற்றும் மூளை சுறுசுறுப்பாக செயல்பட புத்தகங்களை படிப்பது நல்லது” என்றார்.

சராசரியாக அமெரிக்கர் வருடத்திற்கு ஒரு புத்தகத்தைப் படிக்கிறார்கள். தலைமை நிர்வாக அதிகாரிகள் மாதத்திற்கு சராசரியாக ஐந்து புத்தகங்களைப் படிக்கிறார்கள். ஆனால், ”ஒவ்வொரு நாளும் செய்தித்தாள் அல்லது பல்வேறு புத்தகங்களை படிப்பவர்களுக்குத்தான் நீண்ட ஆயுள்” என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நல்ல வாசிப்பிற்கு கவனம் மிக அவசியம். வாசிக்கும்போது செலுத்தும் கவனம், தகவல்களை உள்வாங்கிக் கொண்டு அதை தக்க வைத்துக் கொள்ளும் செயலில் மூளையை ஈடுபடுத்துகிறது. இந்த செயல்முறை மூளையை கூர்மையாக்கி, நினைவுத்திறனை மேம்படுத்தும். வாசித்தலோடு தொடர்புடைய மொழியாற்றல், பார்வை, கற்றல் மற்றும் நரம்பியல் இணைப்பு போன்ற அனைத்து செயல்பாடுகளையும் இணைக்கும் சவாலான பணிகளை படிப்பு என்னும் ஒரே செயலால் செய்துவிட முடியும். மேலும், புத்தகங்கள் படிப்பதால் மனஅழுத்தம் குறையும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள்.

3. ஊட்டச்சத்துள்ள உணவுகளும், தூக்கமும் அவசியம்:

ஊட்டச்சத்துள்ள உணவுகள் நமது மூளையின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமாகும். குறிப்பாக முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய்கறிகள், பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, நம்முடைய நீண்ட கால நினைவாற்றலுக்கு தூக்கம் இன்றியமையாததாகின்றது. சரியான ஓய்வு இல்லாவிட்டால் மந்தத்தன்மை, சோர்வு ஏற்படுவதோடு சில வியாதிகள் தொற்றவும் வாய்ப்பிருக்கிறது.

4. மூளை புத்துணர்ச்சியாக இருக்க கேளுங்கள், கேளுங்கள், கேட்டுக் கொண்டே இருங்கள்:

Brain Active Tips007
Credit: callcentrehelper.com/

கடந்த காலத்தில் என்ன நடந்தது, தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது, வருங்காலத்தில் என்ன நடக்க வேண்டும், என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றிய புரிதல் வேண்டும். ஏராளமான புதிய நல்ல விஷயங்களை கேட்டு கொண்டே இருக்க வேண்டும்.

சரித்திரம் முதல் நிகழ்கால நடைமுறை வரை அத்தனையும் நினைவில் வைத்திருக்க, எந்தவொரு விஷயத்தையும் முதலில் நினைவில் நிறுத்தி, பின்னர் முறையானப் பயிற்சிகள் மூலம் நினைவை மீட்டெடுக்க வேண்டும். க்விஸ் போட்டி சிறந்த பயிற்சி. குடும்பம், நண்பர்கள் என எல்லோரும் குழுகுழுவாக இணைந்து ‘க்விஸ்’ பழகினால், மூளை புத்துணர்ச்சியாக இருக்கும்.

5. மீண்டும் வகுப்புக்குச் செல்வது:

நீங்கள் இன்றைய நவீன கால கட்டத்தில், பல்வேறு துறை சார்ந்த கல்வியை கற்பதற்கு கல்லூரி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், ஏராளமான கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் அவற்றின் பாடங்களை ஆன்லைனில் இலவசமாகக் கிடைக்கச் செய்கின்றன. அவற்றின் தெளிவான பாட விளக்கங்களும் வீடியோ மூலம் உடனடியாகக் கிடைக்கின்றன.

கூரூவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் லீ, சமீபத்தில் தனது நிறுவனத்தின் கல்வி தளத்தை வயது வந்த தொழில் வல்லுநர்களுக்கும், இளைய மாணவர்களுக்கும் நிச்சயமாக சந்தாக்களை சேர்க்க முடிவு செய்தார். அதேபோன்று, லீ “வாழ்நாள் முழுவதும் கற்றல் என்னுடைய ஒரு ஆர்வம்” என்று கூறுகிறார்.

6. புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது அவசியம்:

Brain Active Tips003
Credit: pixabay.com/

நாம் நமது வாழ்க்கையில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் மூலம், மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது மூளையை புத்துணர்ச்சி அடைய செய்து நமது உடல் நலனை பாதுகாக்கிறது.

மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம். ஏனெனில், ஓர் இசையைக் கற்றுக்கொள்ளும் போதும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதும் மன அழுத்தம் குறைகிறது.

உங்கள் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க மேற்கண்ட ஆறு வழிகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். 

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -
error: Content is DMCA copyright protected!