28.5 C
Chennai
Sunday, April 14, 2024

ஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்? மனித வாழ்க்கை பற்றிய ஆச்சரியமூட்டும் 25 தகவல்கள்!

Date:

மனித வாழ்க்கை ஒரு ஆச்சரியமானது தான். நாம், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில், நாம் செய்யும் சிறுசிறு தவறுகளும், மாற்று முயற்சிகளும் பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடியவை. அப்படிபட்ட மனித வாழ்வில், நம்மால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இயற்கையில் நிகழும் மாற்றங்கள் பற்றிய 25 தகவல்கள்.

 • தினமும் காலையில் ஓட்டப் பயிற்சி செய்பவர், 6 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ முடியும்.
 • தினமும் இரவு 7 மணி நேரத்திற்கு குறைவாக உறங்கினால், வாழ்நாள் குறையுமென்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
human life sleep
Image credit :  Getty Images/Thinkstock
 • தொடர்ந்து நாள் ஒன்றுக்கு தொடர்ந்து மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால், மனிதர்களின், ஆயுட்காலத்தில் இரண்டு வருடங்கள் குறைந்து விடும்.
 • மனிதன் தனது வாழ்நாளில், மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்திலேயே கடக்கிறான். அது கிட்டத்தட்ட 25 வருடம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 • அதிக நண்பர்களை கொண்டவர்கள், தனித்து இருப்பவர்களை விட 3.7 ஆண்டுகள் கூடுதலாக உயிர்வாழ முடியும்.
 • ஒரு சராசரி மனிதன், தனது வாழ்நாளில் 6 ஆண்டுகள் கனவு காண்கிறான்.
 • தலைமுடி ஆண்டு ஒன்றுக்கு கிட்டத்தட்ட 6 அங்குல நீளம் வரை மட்டுமே வளர்கிறது.மனித உடலில், வேகமாக வளரும் ஒரே விஷயம் எலும்பு மஜ்ஜை மட்டுமே.
indian curly bride
Image credit: Indian Curl Pride
 • பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஓர் ஆண்டு அளவிற்கு என்ன ஆடை உடுத்துவது என்பதை பற்றி சிந்திக்கின்றனர்.
 • ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில், மூன்று மாதங்கள் கழிவறையில் அமர்ந்திருக்கிறான்.
Did you know?
மனித உடலில் தோல் புதுப்பித்தல் சுழற்சி முறையில் 28 நாட்கள் நடைபெறுகிறது
 • ஒரு சராசரி மனிதன், தனது வாழ்நாளில் 2,50,000 தடவை கொட்டாவி விடுகிறார். இது தூக்கத்திற்கு முன்பு வரும் கொட்டாவி மட்டுமல்ல, சோர்வு, களைப்பு, போன்றவையாலும் ஏற்படும் கொட்டாவியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
 • ஒரு சராசரி மனிதன், தனது வாழ்நாளில் 1,20,000 கிலோ மீட்டர்கள் நடக்கிறான். அது பூமியை 5 தடவை சுற்றி வருவதற்கு சமம்.
 • ஆண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு வருடம் அளவிலாவது, பெண்களை வெறித்து பார்க்கின்றனர் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
 • 110 வயது அல்லது அதை கடந்து வாழ்பவர்கள், ஏழு மில்லியனில் ஒருவர் மட்டுமே
 • புதிதாக குழந்தை பெற்ற தம்பதிகள் முதல் இரண்டு ஆண்டுகளில், கிட்டத்தட்ட 6 மாதம் அளவிலான நாட்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர்.
 • பூமியில் மக்கள் வாழ்வதை விட அதிகமான உயிர்கள் உங்கள் தோல்களில் உயிர்வாழுகின்றன.
 • பெண்களின் நோய்யெதிர்ப்பு திறன் மெதுவாக குறைவதால், ஆண்களை விட அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றனர்.
aged women 2
Image credit : Pexels/ Sharad Patil
 • ஆய்வு ஒன்றின் தகவல்படி 65 வயதை கடந்த பின்பும் வேலை செய்பவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழுகின்றனர்.
 • ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 183,755,600 படிகளை ஏறுகிறான்.
 • உலகில் வாழும் 75 சதவீத மனிதர்கள் நாள் ஒன்றுக்கு 1,494 ரூபாய்வருமானமாக பெறுகின்றனர்.
 • மனிதர்கள் உணவருந்தாமல் 2 மாதங்கள் வரை உயிர் வாழலாம். ஆனால், உறங்காமல் 11 நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். இது நோயற்ற மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
Did you know?
மனித மூளை கடினமான நேரத்தை அதிகம் நினைவில் வைத்துக்கொள்கிறது!
 • மனிதர்களின் தங்கள் வாழ்நாளில் 37,854 லிட்டர் உமிழ்நீரை உற்பத்தி செய்கிறார்கள். இதன் மூலம் இரண்டு நீச்சல் குளங்களை நிரப்ப முடியும்.
 • மனிதர்களில் ஆயுட்காலம் முந்தைய 2,00,000 ஆண்டுகளை விட கடந்த 50 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
 • உலகில் உள்ள அனைவரும் தங்கள் கைகளை சரியான முறையில் கழுவினால், ஒரு மில்லியன் மனித உயிர்கள் ஆண்டு ஒன்றுக்கு காப்பாற்றப்படும்.
handwash human
Image credit: Pexels/ Burst
 • மனிதனின் வாழ்நாளில், தோல் மட்டும் 900 தடவை புதிதாக உருவாகிறது.
 • புத்தகம் படிப்பவர்கள், புத்தகம் படிக்காதவர்களை விட 23 மாதங்கள் கூடுதலாக உயிர் வாழ்கின்றனர் என்று Yale University ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 • இந்த தகவல்கள், நோயுற்று மற்றும் விபத்து போன்றவற்றில் சிக்கி உயிரிழப்பவர்களுக்கு பொருந்துவதில்லை. வயது முதிர்ச்சியடைந்து உயிரிழக்கும் நபர்களுக்கு மட்டும் பொருந்தும் தகவலாகும்.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!