20000 வருடமாக யாரும் நெருங்க முடியாத கடல்! இந்தியப் பெருங்கடல் உருவாவதற்கு முன்னால் கடும் உப்புத் தன்மையுடன் கூடிய கடல் இது!!

Date:

இந்த உலகம் 20 ஆயிரம் வருடத்திற்கு முன்னால் எப்படி இருந்திருக்கும்? ரொம்ப சிம்பிள். உலகின் பெரும்பாலான பகுதிகளில் பனியைத் தவிர வேறு எதுவும் இருந்திருக்காது. சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் நீடித்த பனிக்காலம் தனது அந்திம காலத்தில் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது வட அமெரிக்கா வட ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் முழுவதும் பனியால் சூழப்பட்டு இருந்தன.

sea

அதாவது நியூயார்க், பெர்லின் மற்றும் பெய்ஜிங் ஆகிய அனைத்து நகரங்களுமே பனியால் இணைக்கப்பட்டிருந்தன. இடையில் கடல் என்று எதுவும் கிடையாது. எல்லாம் பனிதான். அப்பேர்பட்ட பெரும்பனி காலமும் ஏதோ ஒரு மர்மமான முறையில் சற்றென்று முடிவுக்கு வந்திருக்கிறது. அப்போது உலகில் இருந்த பனிக்கட்டிகள் உருகி பெருங்கடல்கள் ஆக மாற்றம் அடைந்திருக்கின்றன. இதற்கான ஆராய்ச்சிகளின் போது தான் 20 ஆயிரம் வருடத்திற்கு முந்தைய கடல் நீரினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான பாறைகளுக்கு உள்ளேயிருந்து இவை கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த நீர்மம் மிகவும் பழமை வாய்ந்தது என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் உள்ள மாலத்தீவுகளில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்கள் நீர் பரப்பிற்கு கீழே இருந்த வினோத சுண்ணாம்பு பாறையை கவனித்திருக்கிறார்கள். அதன் பின்னர் ராட்சத துளையிடும் கருவி கொண்டு வரப்பட்டு சுண்ணாம்பு பாறையினுள் துளையிடப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கற்களுக்கு உள்ளே நீர் கசிவது தெரிந்தவுடன் அதனை உடனடியாக பத்திரப்படுத்தி ஆய்வுக் கப்பலுக்கு ஆராய்ச்சியாளர்கள் எடுத்து வந்திருக்கின்றனர். அவற்றை சோதித்துப் பார்த்ததில் தற்போதைய இந்திய பெருங்கடலில் உள்ள நீரின் உப்புத்தன்மை விட பல மடங்கு அதிகமாக உப்புத்தன்மை கொண்டிருந்திருக்கிறது அந்த பாறை நீர்.

scientist

அந்த நீர் மாதிரிகள் மேற்கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது இந்தியப் பெருங்கடல் உருவாவதற்கு முன்னால் கடும் உப்புத் தன்மையுடன் கூடிய கடல் ஒன்று இடிந்து இருப்பது உறுதியாகி இருக்கிறது. அந்தக் கடலில் குளோரின் அளவு மிக அதிகமாகவும், கடும் குளிரும் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பனிக்காலம் முடிவடையும் போது பனி உருகிக் கடலில் கலந்ததே இதன் உப்புத் தன்மை குறைய காரணமாக இருந்திருக்கலாம். மேலும் அந்த நீரானது இந்தியப் பெருங்கடலோடு இணைந்து ஒரே சமுத்திரமாக மாறி இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தற்போது வரையில் இந்த உப்பு நீரானது அடுத்தகட்ட பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் ஒரு லட்சம் ஆண்டுகள் நீடித்த பனிக்காலம் எப்படி முடிவுக்கு வந்தது என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைக்க இருக்கிறது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!