சூரியனை நோக்கிச் செல்கிறது நாசாவின் பார்கர் சூரிய விண்கலம்..!! அடுத்தது என்ன?

Date:

நாசாவின் பார்கர் சூரிய விண்கலம் (Parkar Solar Probe) பல ஆண்டுகளுக்குப் பிறகு கட்டுமானப் பணிகளை முடித்து சூரியனை அடைய இருக்கிறது . இது மற்ற விண்கலங்களை விட ஏழு மடங்கு சூரியனுக்கு அருகில் வேகமாகப் பறக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதன் தரவுகளை நாசா விஞ்ஞானிகள் சேகரித்து வருகின்றனர். இதன் தரவுகள் ஏழு ஆண்டுகளுக்கு வரும் எனவும் கூறுகின்றனர்.

nasas parker solar probe is headed to the sun so whats
Credits: 2feeds.com

$1.5 பில்லியன் மதிப்பிலான இந்த பார்கர் விண்கலம் (Parker Solar Probe) பூமியின் சுற்றுப்  பாதையில் இருந்து விலகிச் செல்ல ஒரு பெருமளவு (ton) வேகம் தேவைப்பட்டது. எனவே, இந்த விண்கலம் விண்வெளியில் உள்ள வெள்ளி கிரகம் (Venus) அருகாமையில்  செல்லும் வரை, விண்வெளிக்கலனை மூன்று நிலைகளாகப் (3-Stage Separation) பிரித்து அனுப்பப்பட்டது. இது 6 வாரங்களுக்குப் பிறகு செப்டம்பர் கடைசியில் அங்கு போய்ச் சேரும் என்று கூறுகின்றனர்.

செப்டம்பர் 28-ஆம் தேதி அன்று, விண்கலம் தனது ஈர்ப்பு விசை எனப்படும் சூழ்ச்சியைப்  பயன்படுத்தி சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆராயும். பிறகு நெருக்கமான அணுகுமுறையுடன் சூரியனுக்கு அருகில் உள்ள 24 கிரகத்தின் சுற்றுப்பாதையின் தரவு (Data)  நவம்பர்-1 ம் தேதி வரும் எனவும் கூறியுள்ளனர்.

குறிப்பிட்ட காலத்தில் எப்படி இது இலக்கை அடையும் என்பதை மக்கள் சந்தேகிக்கின்றனர். அதனால் தான் இக்கருவியின் ஆராய்ச்சியாளர் ஜஸ்டின் காஸ்பர்(Justin Kasper), மற்ற கிரகங்களின் சுற்றுப்பாதை சூரியனுக்குத் தொலைவில் இருக்கும் போது இந்த விண்கலமானது அதன் நேரத்தை பயன்படுத்தி சூரியனுக்கு நெருக்கமாகவும், பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு சமமாகவும் இருக்கும் என்று கூறுகிறார்.

இதைத் தான் விஞ்ஞானிகள் வேகமான ரேடியல் ஸ்கேன்கள் (fast radial scans)  என்று சொல்கின்றனர். இச்சமயங்களில் தான் விண்கலத்தின் சுழற்சி சூரியனின் சுழற்சியை ஒத்திருக்கும். அதே நேரத்தில் அப்பகுதியில் விண்கலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை 10 நாட்களுக்கு நாம் காணமுடியும்.

aHR0cDovL3d3dy5zcGFjZS5jb20vaW1hZ2VzL2kvMDAwLzA3OC80NTkvb3JpZ2luYWwvcGFya2VyLXNvbGFyLXByb2JlLmpwZz8x 1
Credits: Space.com

சூரியனின் ஒரு பகுதி எவ்வாறு மாறும் அல்லது மாறாது என்பதைப் பற்றியும் அறிய முடிகிறது என்று திட்ட விஞ்ஞானி நிக்கோலா ஃபாக்ஸ் கூறியுள்ளார். பார்கர் விண்கலம் எங்கள் நெருங்கிய கோளப்பகுதியை அடைவதற்கு 5 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறுகின்றனர், அது மட்டுமல்லாமல் இந்த விண்கலம் சூரியனின் நெருக்கமான அணுகுமுறையை  அடைவதற்கு  முன்னால், பல விஞ்ஞானம் இருக்கிறது. இந்தக் குளிர்காலத்தில் சூரியனைப் பற்றிப் பல அற்புதமான நுண்ணறிவுகளைக்  கண்டிடலாம் என்று காஸ்பர் கூறினார்.

“பார்கர் விண்கலம் சூரியனுக்கு 6 மில்லியன் கி.மீ தொலைவில் நெருங்கும் போது தான் சூரியனின் மேற்பரப்பில் என்ன இருக்கிறது எனத் தெரிய வரும். ஒவ்வொரு சுற்றுப்பாதையிலும் விண்கலம் சூரியனின் வளிமண்டலத்தில் வெவ்வேறு ஆழங்களில் ஒரே விதமான அளவீடுகளை எடுத்துகொள்ளும். இது கோரோனா (Corona) என அழைக்கப்படுகிறது. பார்கர் சூரிய விண்கலத்தின் ஆய்வு மையத்தின் மூலமாக கோரோனாவில் அழகான எல்லா இடங்களிலும் அதன் இயக்கவியலை நாங்கள் பார்க்கும் வாய்ப்பை பெறுகிறோம்.” என்று ஃபாக்ஸ்(Fox) கூறுகிறார்.

இதன் மூலமாக சூரியன் தனது சூரிய ஒளி, சூரிய எரிப்பு மற்றும் பூமியில் ஏற்படுத்தக் கூடிய கடுமையான தாக்கங்கள் ஆகியவற்றை  எப்படி உருவாக்குகிறது என்பதைப் பற்றி ஆய்வாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இது சூரியனின் அடுக்குகளை மட்டுமல்லாமல், நட்சத்திரத்தின் முழுமையான செயல்திறனை காண்பிக்கும். வெவ்வேறு கால கட்டங்களில் சூரியனின் பரந்த நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் காண விரும்புகின்றனர். ஆனால், விண்கலம் சூரியனில் தனது தரவுகளை சேகரிக்கும் போது அது பூமியைத் தொடர்பு கொள்ள முடியாது. இதனால் தரவுகளைச் சேகரிக்கும் வரை கண்காணிப்புகளில் கவனம் செலுத்துகிறார்கள். பிறகு, தொகுப்புகளில் உள்ள தரவுகளை அனுப்புகிறது. பிறகு விண்கலம் திட்டமிட்டபடி செப்டம்பர் இறுதியில் தனது ஈர்ப்பு  விசை சூழ்ச்சியை ஏழு முறை பயன்படுத்தி மீண்டும் சூரியனை வளைந்து வரும்.

300px Parker Solar Probe 3


இச்செயலானது 2025-ம்  ஆண்டுவரை நடைபெறும். மேலும், விண்கலத்தின் எரிபொருள் தீர்ந்து விடாமல் இருந்தால் விண்கலத்தின் கருவிகளை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி, மீண்டும் அதன் பணியை தொடங்க வைக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை விடுத்துள்ளனர். ஒருவேளை முன்னரோ அல்லது பின்போ எரிபொருள் தீர்ந்துவிட்டால் விண்கலம் அதன் செயலை இழந்து விடும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!