அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தற்போது தோற்ற மெய்ம்மை (Virtual Reality) செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலி மூலம் பயனாளிகள் இங்கிருந்த படியே விண்வெளியில் செல்பி எடுத்துக் கொள்ளலாம். அதே போல் இந்த உலகில் மட்டுமின்றி பூமியைப் போன்று இருக்கும் மற்ற கோள்களில் இருந்தும் செல்பி எடுத்து கொள்ளும் வசதியும் கிடைக்கும்
நாசா நிறுவனம் ஸ்பைட்சர் ஸ்பேஸ் டெலஸ்கோப் (Spitzer Space Telescope) என்ற அரிய வகை டெலஸ்கோப்பைக் கண்டுபிடித்து 15 வருடங்கள் பூர்த்தி ஆனதை அடுத்து, இந்த செல்பி செயலியை அதன் தோற்ற மெய்ம்மை வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, அமெரிக்க வான்வெளி முகமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த தோற்ற மெய்ம்மை செயலியில் ஸ்பைட்சர் எடுத்த விதவிதமான ஆச்சரியம் தரத்தக்க புகைப்படங்கள் இருக்கும். இந்தப் புதிய செல்பி செயலி மூலம் நீங்கள் புகைப்படம் எடுக்கும் போது தோற்ற வடிவில் விதவிதமான இடங்களில் அதாவது ஓரியன் நெபுலா (Orion Nebula) அல்லது பால்வெளி அண்டத்தில் இருப்பது போன்று செல்பி எடுத்துக் கொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி, இந்த செல்பி புகைப்படத்தில் உங்களுக்குப் பின்னால் உள்ள புகைப்படத்தின் முழு விபரங்களும் கிடைக்கும். ஸ்பைட்சர் டெலஸ்கோப் எடுத்த சுமார் 30 விதமான புகைப்படங்கள் தற்போது இந்த செயலியில் உள்ளன. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான புகைப்படங்கள் இந்த செயலியில் இணைக்கப்படும் என்றும் நாசா தகவல் அளித்துள்ளது. மேலும், இந்த வசதி மூலம் ரியாலிட்டி செல்பி புகைப்படம் எடுக்க உங்களுக்கு டிராப்பிஸ்ட் 2 (Trappist 2) என்ற பிளானெட்டரி சிஸ்டம் (Planetary System) வழிகாட்டவும் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
டிராப்பிஸ்ட் 1 என்பது, சுமாராக பூமியைப் போன்று அளவில் உள்ள ஏழு கோள்களின் கூட்டு ஆகும். ஸ்பைசர் மூலம் தான் இந்த ஏழு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் தான் விஞ்ஞானிகள் இந்தக் கோள்கள் குறித்த பல புதிய தகவல்களை கண்டறிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதே போல் டிராப்பிஸ்ட் 2 என்பது, மிகவும் தொலைதூரத்தில் உள்ள கோள்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். இந்த தோற்ற மெய்ம்மை மூலம் இந்த அதிசயங்களை நாம் நேரில் காண்பது போல் காணலாம் என்பது தான் இதன் சிறப்பு
இந்த செயலியின் உதவியால் ஸ்பைட்சர் கண்டுபிடித்த ஏழு கோள்களில், அற்புதமான அதன் பின்னணியில் உள்ள கரு நிற வான் பகுதி, மேலும் தொலைவில் உள்ள விண்மீன்கள் ஆகியவை அடங்கிய செல்பியை நீங்கள் எடுக்கலாம். இந்த தோற்ற மெய்ம்மை செயலியை இந்த ஆண்ட்ராய்டு மற்றும் ios பயன்பாட்டாளர்கள் இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். மேலும், ஸ்பைட்சர் மிஷன் இணையதளங்களில் ஒகுலஸ் மற்றும் வைவ் ( Spitzer website Oculus and Vive) மூலம் நமக்கு கிடைக்கும்.

மேலும், ஸ்பைட்சர் யூடியூப் சேனலின் முலம் உங்களுக்கு 360 டிகிரி கோணம் கிடைக்கும். இதன் மூலம் உங்கள் கணினியில் மற்றும் ஸ்மார்ட்போனில் டிராப்பிஸ்ட் 1 புனைவைப் பார்த்து அனுபவிக்கலாம். அல்லது கூகுள் கார்ட்போர்ட் போன்ற 360 டிகிரி கோணம் வசதியுள்ள ஸ்மார்ட்போனிலும் பார்க்கலாம்