கொசுக்கள் தேடி வந்து உங்களையே கடித்தால் அதற்கு காரணம் இது தான்…

Date:

என்ன தான் விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் கொசுக் கடியில் இருந்து மட்டும் நம்மால் தப்பிக்க முடிவதே இல்லை. அதிலும் மழைக்காலம் பனிக்காலம் என்றால் கேட்கவே வேண்டாம். கொசுக்களுக்கு கொண்டாட்டம் தான். கூட்டமாக வந்து கடிக்கும். கொசு கடித்த இடம் வேறு சிவப்பாகி தடித்தும் விடும். அதிலும் சிலரையே குறி வைத்து கடிப்பது போல் இருக்குமே! சரி இதுக்கெல்லாம் என்ன காரணம் என்று பார்ப்போம்.

36 முதல் 50 மீட்டர் தூரம் வரை வாசனைகளை கொசுவால் நுகர முடியும்.

கொசுக்கள் இரை தேடும் விதம்

  • கொசுக்கள் முதலில் வாசனையை வைத்து தான் இரை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும். அதாவது நாம் வெளிவிடும் கார்பன் டை ஆக்ஸைடை கொசுக்களால் நுகர முடியும். மேலும் அவற்றால் 72  வகையான வாசனையை உணர முடியுமாம். நம் வியர்வையில் உள்ள லாக்டிக் அமிலம்(Lactic Acid) போன்ற பல வேதிப்பொருட்கள் மணம் கொண்டவை. கொசுக்களால் இவற்றை எளிதில் நுகர முடியும். மேலும் 36 முதல் 50 மீட்டர் தூரத்தில் கூட இந்த வாசனைகளை கொசுவால் நுகர முடியுமாம்.
  • வாசனையை நுகர்ந்து அருகில் வந்தவுடன் பார்த்து இரையை உறுதி செய்யும்.
  • கடைசியாக நம் உடல் வெளிவிடும் வெப்பத்தை உணர்ந்து  நம்மை கடிக்கிறது.
கொசு ரத்த நாளத்தை தேடும் முறையை இங்கே வீடியோவாக காணுங்கள்!

ஏன் சிவந்து தடிக்கிறது?

உண்மையில் கொசுக்கள் நம்மை கடிப்பது இல்லை. நம் உடலில் உள்ள ரத்தத்தை கொசுக்கள் அதன் வாய் பகுதியில் உள்ள உறிஞ்சு குழலை கொண்டு உறிஞ்சுகிறது. அதனால் நமக்கு வலி ஏற்படுகிறது. கொசு உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சும் போது ரத்தம் உறைந்து  விடாமல் இருக்க சில என்சைம்கள் கொண்ட உமிழ்நீர் போன்ற வேதிப்பொருளை சுரந்து விட்டுச் செல்லும். நம் உடலில் இப்போது ஒரு அந்நிய பொருள்  வந்து விடுவதால்  நமது நோய் எதிர்ப்பு மண்டலம் ஹிஸ்டமைன் (Histamine) என்ற வேதிப்பொருளை கொசு கடித்த இடத்திற்கு அனுப்பும். இப்போது கடித்த இடத்தில் உள்ள ரத்த குழாய் விரிவடைந்து ரத்தம் பாயும். இதனால் தான் கடித்த இடம் சிவந்து தடிக்கிறது.மற்ற எந்த அலர்ஜியையும் விட கொசுக்கடிக்குத் தான் நமது உடல் உடனே எதிர்வினையாற்றும். கொசுக்கடித்த உடனே நாம் சொறிய ஆரம்பித்துவிடுவோம். இதனால் தான் காயங்கள் ஏற்படுகின்றன. மாறாக ஐஸ் கட்டியை கடித்த இடத்தில்  வைப்பதன்மூலம் தடித்தல் மற்றும் காயங்களில் இருந்து தப்பிக்கலாம்.

யாரை அதிகமாக கடிக்கும்

  • உங்களுக்கு அதிகமாக வியர்த்தால் கொசு உங்களைத் தேடி வந்து கடிக்கும். வியர்வையில் கொசுவைக் கவரும் வேதிப்பொருட்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதே அதற்குக் காரணம்.
  • உங்கள் உடலில் இருந்து வெளிவரும் வெப்பம் அதிகமாக இருந்தாலும் அது கொசுவைக் கவரும்.
  • நீங்கள் அதிகமாக அசையும் போதும் கொசு கடிக்கும் வாய்ப்பு அதிகம். ஏனெனில் உயிருள்ள இரையை கொசுவால் எளிதாக அடையாளம் காண முடியும்.
  • சுற்றுப்புறத்திற்கு முரணான நிறத்தில் நீங்கள் ஆடை அணிந்து இருந்தாலும் உங்களை விரைவில் கண்டு கொண்டு கடிக்கும்.
  • கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடுவதாலும், உடல் வெப்பத்தாலும் அவர்களை அதிகமாக கொசு கடிக்கிறது.
  • A ரத்த வகையை விட O ரத்த வகை உள்ளவர்களை அதிகமாக கடிக்குமாம்.
Mosquito, Bite, Reason, Solution
Credit: Cleaveland Clinic Health Essentials

தீர்வு

கொசு கடித்தால் கடித்து விட்டுப் போகிறது என்று விட்டு விட முடியாது. ஏனெனில் கொசுக்கள் தான் மலேரியா,டெங்கு,சிக்குன்குனியா போன்ற நோய்களை உருவாக்குகின்றன. அதற்காக செயற்கையான கொசுவர்த்தி சுருள்,கொசு திரவம் போன்றவற்றை உபயோகிப்பதும் பல ஆபத்துகளை விளைவிக்கிறது. எனவே இயற்கையான வழிகளைப் பின்பற்றலாம்.

  • வேப்பிலை, யூகலிப்டஸ் இலைகளை கொண்டு புகை போடுவது கொசுக்களை விரட்டும்.
  • வேப்பெண்ணை, விளக்கெண்ணை கொண்டு விளக்கு ஏற்றுவதும் சாம்பிராணி போடுவதும் கொசுக்கள் வராமல் தடுக்கிறது.
  • ஜன்னல் ஓரங்களில் பூண்டை நசுக்கி வைப்பதும், புதினாவை அரைத்துத் தெளிப்பதும் கொசுக்களை விரட்டும்.
  • எல்லாவற்றையும் விட கொசு வலைகளை பயன்படுத்துவது சிறந்தது.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஷேர் செய்யவும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!