சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகம் செவ்வாய். செவ்வாய் கிரகத்துக்கு மனித ஆய்வாளர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கு முன்னதாக அந்தக் கிரகத்தினை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’, இன்சைட் என்ற விண்கலத்தை கடந்த மே மாதம் 5ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. அந்த இன்சைட் விண்கலம் இன்று 26-ம் தேதி செவ்வாயில் தடம் பதிக்க உள்ளது. செவ்வாயின் ஆழமான உட்பகுதிகளையும் மற்றும் பூகம்பங்களையும் இந்த விண்கலம் ஆராய்ச்சி செய்யும். இதன் ஆய்வுக்காலம் இரண்டு வருடங்கள்.
கடந்த மே மாதம் இன்சைட் விண்கலத்தை ஏவிய பிறகு, நாஸா தலைமை விஞ்ஞானி ஜிம் கிரீன், “செவ்வாய்க் கிரகத்தில் நிலநடுக்கங்கள், பனிப்பாறை சரிவுகள், விண்கற்களின் தாக்குதல் ஆகியவை ஏற்படுவது இயல்புதான், ஆனால் பூகம்பம் ஏற்படுமா என்பது மிகவும் அடிப்படையான ஒரு கேள்வி இதனை ஆய்வு செய்தேயாக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டில் கியூரியாசிட்டி ரோவர் தரையிறங்கிய பின்னர் செவ்வாயில் தரையிறங்கும் முதல் விண்கலம் இன்சைட் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழே உள்ள படத்தில் க்ளிக் செய்து நாசா வெளியிட்டிருந்த சில படங்களையும் காணுங்கள்.