கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா? அறிவியல் உண்மை என்ன?

Date:

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா? என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில உதவிக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதிலும் கொரோனா தடுப்பூசிகள் போட துவங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும், தற்போது ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்ஸின்’ ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டில் செலுத்தப்பட்டு வருகின்றது.

covid 19 vaccine pregnancy002 1
Credit: uchicagomedicine.org/

இந்த சூழலில், பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக, உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் மற்றும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், புதிய வகை கொரோனா வைரஸுக்கு எதிராக ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், இந்த தடுப்பூசியானது குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமைகின்றது. உலக சுகாதர மையம் கருவுற்ற பெண்களிடம், இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்துவதற்கு ஆரம்ப காலத்தில் ஆதரிக்கவில்லை. தற்போது, இந்த நிலைப்பாட்டினை மாற்றி தடுப்பூசியை போட்டுக் கொள்ள வழி வகை செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு உகந்ததா? என்பதைக் கண்டறிய ஆராய்ச்சிகள் தேவையா?

கடந்த 2020ஆம் ஆண்டில் 10-க்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. அவற்றில், பயன்பாட்டில் இருக்கும் முக்கிய தடுப்பூசிகளின், ஒரு சில நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கும் உகந்ததா என்று சோதனையை நடத்தி வருகின்றன. எனவே, இந்த தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்கு உகந்ததா? என்பதை முடிவு செய்ய மேலும் சில ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

கொரோனா தடுப்பூசிக்கும், கருச்சிதைவிற்கும் தொடர்பு உண்டா?

கர்ப்பிணிகளுக்கு என்று தனிப்பட்ட தடுப்பூசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, கொரோனா தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்கு வழங்க கூடாது என்று ஒரு தரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் மற்றொரு தரப்பினர், கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கும் கருச்சிதைவிற்க்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறி வருகின்றனர். இருப்பினும், இதுவரை எந்த ஒரு ஆராய்ச்சியிலும் இந்த தகவல்கள் நிரூபிக்கப்படவில்லை.

கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை உண்டா?

கருவுற்ற பெண்களுக்கு கொரோனாவிற்கான தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் ஏன் முன்னுரிமை அளிக்கப்படவில்லை? கொரோனா தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை உருவாக்குகின்றனவா? என்பது குறித்தும் பல்வேறு தரப்பட்ட கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இந்த கொரோனா தடுப்பூசிகள் கருக்கலைப்பை மற்றும் மலட்டுத்தன்மை உருவாக்குகின்றன என்பது பற்றி இதுவரை எந்த ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவது பற்றி முன்னுரிமை அளிப்பதற்கு தேவையான காரணங்கள் இல்லை.

உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கொரோனா வைரஸால் பொது மக்களை காட்டிலும் கர்ப்பிணிப் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், இயற்கையாகவே ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில், நோயெதிர்ப்பு சக்தி மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. எனவே, கர்ப்பிணி பெண்கள் கொரோனா உள்ளிட்ட நோய்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முறையான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம் என்றது.

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட பிறகு, தலை வலி , தசை வலி, காய்ச்சல், சோர்வு போன்ற சில ஆரம்ப கட்ட உடல் உபாதைகளை எதிர்கொள்ளலாம். இவை, கர்ப்பிணிகள் மட்டுமின்றி தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் எதிர்கொள்ளும் உடல் உபாதைகள் ஆகும். இருப்பினும், கர்ப்ப காலத்தில் வேறு சில உடல் உபாதைகள் சந்திக்க நேர்ந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று உரிய மருந்தினை எடுத்துக்கொள்வது நல்லது.

இந்தியாவில் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. எல்லாத் தேவையான காரணிகளையும் பூர்த்தி செய்யும் நிலையில், இந்த தடுப்பூசிகள் இனி வரும் நாட்களில் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்களும் போட்டுக்கொள்வது சிறந்தது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!