அதிகாலை விடியலின் போது வெள்ளிக்கோளினை நாம் பார்த்திருப்போம். நிலவுக்கு அருகினில் சற்றே பெரிய நடச்சத்திரம் போன்று காட்சியளிக்கும். வெள்ளிக் கோள் முதன்முதலில் 14 – ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியினை விட சிறியக் கோள் வெள்ளி. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுந்த சூழ்நிலை வெள்ளியில் இருந்திருக்கிறது. வெள்ளியினைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைக் கீழே காணலாம்.

இரண்டாவது கோள்
சூரியக்குடும்பத்தில் சூரியனை வெள்ளி இரண்டாவதாகச் சுற்றி வருகிறது. ரோமானியர்களின் காதல் கடவுளான வீனஸின் பெயரே இக்கோளிற்குச் சூட்டப்பட்டது. மற்றைய கோள்களுக்கு எதிர் திசையில் வெள்ளி சூரியனை வலம் வருகிறது.
நீங்கள் வெள்ளிக்கிரகத்தில் நுழைகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு முதல் பிரச்சனை அங்குள்ள வளிமண்டலம். விண்வெளியிலிருந்து வெள்ளியின் வளிமண்டலத்தில் நுழையும்போதே அடர் சல்பியூரிக் அமிலத்தில் மாட்டிக் கொள்வீர்கள். கந்தக அமிலத்தின் அடர்த்தி காரணமாக எல்லா பொருளும் எளிதில் கரைந்துவிடும். அதிலும் தப்பித்தால் அடுத்த பிரச்சனை தரையினில் காத்துக்கொண்டிருக்கும். வெள்ளியின் சராசரி வெப்பநிலை 462 டிகிரி !!
வெள்ளியில் ஒரு நாள்
பூமியினைப் போன்று வெள்ளி இல்லை என்பதைப் போன பத்தியிலேயே சொல்லி விட்டேன். வெள்ளியின் தற்சுழற்சி வேகம் மிகக் குறைவு. சூரியனின் ஈர்ப்பு விசையினால் அதன் தற்சுழற்சி வேகம் குறைவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இதனால் வெள்ளி ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 243 நாட்கள் ஆகிறது.

பூமி தன்னைத்தானே சுற்றுவதால் தான் இரவு பகல் ஏற்படுகிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை தானே?. இப்போது இதனை வெள்ளியினோடு ஒப்பீடு செய்து பாருங்கள். ஆமாம் வெள்ளியில் ஒரு நாள் என்பது 243 நாட்கள். அதாவது வெள்ளியில் ஒரு இரவும் பகலும் செல்வதற்கு 243 நாட்கள் ஆகும்.
ஆண்டு என்பது…
வருடத்திற்கு எத்தனை நாள் ? என்ன 365 நாட்களா? நீங்கள் வெள்ளியில் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட்டீர்கள். பொதுவாக ஒரு வருடம் என்பது கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ள ஆகும் காலம். பூமி சூரியனைச் சுற்றுவதற்கு 365 நாட்கள் ஆகிறது. அது போல் வெள்ளி சூரியனைச் சுற்றி வர 225 நாட்களை எடுத்துக் கொள்ளும். மூளைக்குள் ஏதாவது தீப்பொறி பறக்கிறதா?
நீங்கள் அறிவாளி தான். வெள்ளியில் ஒருநாள் முடிவடைவதற்கு முன்பே ஓராண்டு முடிந்துவிடும். புரிந்து கொள்ள இயலுகிறது தானே? அதாவது இது பூமியில் நிகழும் பட்சத்தில் அதிகாலை குளிர்காலமும், மதியம் கோடைகாலமாகவும், மாலை மழைக்காலமும், இரவு பனிக்காலமும் அடுத்தடுத்து வரும்.