
வீட்டில் குழந்தை பிறந்தவுடன், நம் அனைவருக்கும் அளவுக்கு அதிகமான சந்தோஷம் இருக்கும். அதிலும் இரட்டை குழந்தை என்றால் கண்டிப்பாக நம்முடைய சந்தோஷம் இரு மடங்கு கூடிவிடும். அவர்களை வளர்ப்பதில், அதிக சிக்கல் இருந்தாலும், இரட்டை குழந்தைகள் வீட்டில் பிறப்பதில் நிறைய நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலும், இரட்டை குழந்தைகள் பிறப்பது கருமுட்டை மற்றும் விந்தணுவைப் பொருத்தது. சில சமயங்களில் பெண்ணின் பரம்பரையில் யாருக்கேனும் இரட்டையர்கள் பிறந்திருந்தால் அதற்கான வாய்ப்புகள் உண்டு.
இரட்டையர்கள் புள்ளிவிவரம்
இரட்டையர்களின் புள்ளி விவரங்களின் படி, 21 ஆவது நூற்றாண்டில் 3% மட்டுமே இரட்டை கருவுறுதல் வாய்ப்பு இருந்தது. 100 பேர்களில் 3 பேர்கள் இரட்டை கருவுறுதல் பெற்றனர். ஆனால், 1980 ஆம் ஆண்டுகளில் இதன் அளவு 61% ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்க தேசிய சுகாதார மையம் புள்ளி விவரப்படி, 1000 பிறப்பில் 33.9 சதவீதம் இரட்டை குழந்தைகளின் பிறப்பு விகிதம் உள்ளது என்கிறது. அப்படி பிறக்கும் இரட்டையர்கள் ஒரே மாதிரியான உருவ அமைப்பை கொண்டிருந்தாலும், அவர்களின் DNA-க்கள் 100% ஒரே மாதிரியாக இருக்கின்றதா? என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கும்.
ஆராய்ச்சி முடிவுகள்
உருவ அமைப்பில், ஒரே மாதிரியான இரட்டையர்கள் (ஐடென்டிக்கல் ட்வின்ஸ்) ஒரே கருமுட்டையில் தான் உருவாகின்றனர். இருவருமே, ஒரே மாதிரியான மரபணுப் பொருளைப் அவர்களது பெற்றோர்களிடமிருந்து பெறுகின்றனர். இருப்பினும், அவர்கள் பிறக்கும் தருணத்தில் மரபணு ரீதியாக வேறுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தாயின் கருப்பையில் இந்த ‘ஐடென்டிக்கல் ட்வின்ஸ்’ மரபணு மாற்றத்தை மேற்கொள்வதே இதற்கு காரணம். செல்களில் உள்ள DNA-க்கள் தானாக புதிய DNA வடிவங்களை உருவாக்குகின்றன. சாதாரணமாக இவை வளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்திலேயே சராசரி 5.2 மரபணு மாற்றங்களின் மூலம் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சராசரியாக 15% ‘ஐடென்டிக்கல் இரட்டையர்களில்’ ஒரு குழந்தை குறிப்பிட்ட தகுந்த அளவு மரபணு மாற்றங்களை மேற்கொள்கிறது. ஆனால், இரட்டையர்களில் மற்றொரு குழந்தை இந்த மாற்றங்களை மேற்கொள்வதில்லை என்று கரி ஸ்டீபன்சன் என்ற ஆராய்ச்சியாளரின் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மனித மரபணுக்களை பற்றி ஆய்வு மேற்கொண்டதில் 10 முதல் 15 மரபணு மாற்றங்கள் இந்த கரு வளர்ச்சியின் மூலம் நிகழ்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த மரபணுக்களில் (ஜீனோம்) எந்த குறிப்பிட்ட பகுதியில், இந்த மரபணு மாற்றங்கள் நிகழ்கிறது என்று இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும், இது பற்றிய ஆராய்ச்சிகள் தொடரும் பட்சத்தில் வருங்காலத்தில் இது பற்றி கண்டறியப்படலாம் என்று ஸ்டீபன்சன் தெரிவித்துள்ளார்.
இரட்டையர்கள் பொதுவாக ஒரே இடத்தில் தான் வளர்க்கப்படுவர். இருப்பினும், அவர்களுக்கிடையே தனிப்பட்ட குணங்கள் மற்றும் உடல் ரீதியாகவும் பல வேறுபாடுகள் இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மற்றுமொரு ஆராய்ச்சியின் முடிவில், குணம் அல்லது உருவகத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்களை காட்டிலும், வித்தியாசமான தோற்றம் கொண்ட இரட்டையர்கள் அதிக அளவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கோட் (zygote) என்று அழைக்கப்படும் ஒரே ஒரு கருவுற்ற முட்டை இரண்டாக பிரிந்து இரண்டு கருக்களை உருவாக்குகின்றது. பெரும்பாலும், இந்த நிகழ்வு கருவுற்ற 1 முதல் 7 நாட்களுக்குள் நிகழ்கிறது. ஆனாலும், ஒரு சில சமயங்களில் இந்த நிகழ்வானது அரிதாக கருவுற்று 8 முதல் 12 நாட்களிலும் நிகழலாம்.
இந்த பிரிதல் நிகழ்வு 8 முதல் 13 நாட்களுக்குள் பிரியுமாயின் அதிக அளவிலான செல் மூலக்கூறுகள் இந்த இரட்டையர்கள் பிரியும் முன்னரே வளர்ந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.
எனவே, இரட்டையர்களில் ஒரு குழந்தை அதிக மாறுபாடுகளை கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த பிரியும் நிகழ்வானது, கரு வளர்ச்சியின் மிக ஆரம்ப கட்டத்திலேயே பிரிவுற்றதை இது உணர்த்துகின்றது. மேலும், இந்த பிரிதல் நிகழ்வு 10-திற்கும் மேற்பட்ட செல் வளர்ச்சி நடந்த பிறகே நிகழுமாயின் ஒரு குழந்தை மட்டும் அதிக அளவில் செல் மூலக்கூறுகளை எடுத்துக் கொண்டு வளரவும் வாய்ப்புள்ளது.
இந்த ஆராய்ச்சி முடிவுகளில் ‘ஐடென்டிக்கல் இரட்டையர்கள்’ 100% ஐடென்டிக்கல் DNA வை கொண்டிருப்பதில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த மரபணு மாற்றங்களில் ஒரு சில நோய்களுக்கு அல்லது பண்புகளுக்கு காரணமாக அமைவது குறிப்பிடத்தக்கது.
Also Read: கருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!