COVID-19 ஐ முற்றிலும் ஒழிக்க எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் தெரியுமா? முழு விவரம்..

Date:

கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்க, உலக மக்கள்தொகையில் 60 முதல் 72 சதவிகிதம் மக்கள், இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். இதில் தனிமைப்படுத்துதலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த எண்ணிக்கை.

தடுப்பூசி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே சரியான எண்ணிக்கையை மதிப்பிட முடியும். ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் செயல்திறனை உறுதி செய்வதற்கான சோதனைகளில் முறையே 90 மற்றும் 94 சதவிகித செயல்திறனை கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோய் எதிர்ப்பு சக்தி பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை உடலில் உருவாக்க இரண்டு வாரங்கள் ஆகும்.

சோதனை முடிவுகள், ஃபைசர் தடுப்பூசி ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்று கூறுகிறது. இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில், பரவலான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது 10 பேரில் 7 பேருக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுகளுடன் முழுமையாக தடுப்பூசியாக போட வேண்டும்.

சில நிபுணர்கள், “தொற்றுநோயைத் தடுக்கவும், ஒட்டு மொத்த மக்களையும் அல்லது நாடுகளையும் பாதுகாக்க வேண்டுமெனில், மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் போதுமானதாக இருக்கும்” என்று மதிப்பிடுகின்றனர்.

Corona vaccination

எடுத்துக்காட்டாக, சில மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டு வரும் பட்சத்தில், 3-இல் இரண்டு பங்கு மக்கள் நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டதான ஒரு சூழ்நிலையை உருவாக்குவது மிகவும் கடினம். மேலும், மாறுபட்ட மக்கள் வாழக்கூடிய இந்த சமூகத்தில் மருத்துவ பரிசோதனைகள் குறிப்பிட்டுள்ள நாம் அடையக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அளவீடுகளானது (60-72 %), எந்த அளவிற்கு துல்லியமானது என்பதும் கேள்விக்குறியாகின்றது.

முந்தைய கொரோனா நோய்த்தொற்று சமயத்தில் எத்தனை பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்கனவே உள்ளது என்பதையும் இது சார்ந்துள்ளது. உலகளவில் நோய்த்தொற்று விகிதங்களை நாம் குறைத்து மதிப்பிடக்கூடும் என்பதால், இந்த எண்ணிக்கை தற்போதைய புள்ளிவிவரங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம். அதாவது 60 முதல் 72 சதவிகிதம் என்பதில் மாற்றம் உண்டாகலாம்.

தடுப்பூசி, COVID-19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருமா?

பொதுவாக தடுப்பு மருந்து என்பது குறிப்பிட்ட ஒரு நோய் தொற்றை தடுக்கும் வேலையை செய்கிறது. COVID-19 நோய்த்தொற்று தடுக்கப்படும் முயற்சியில் தடுப்பூசி நிச்சயமாக முக்கிய பங்கு வகிக்கும். 

உலகில் 80 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதில் பெரும்பாலானவர்கள் (75% = ~50 மில்லியன்) மீண்டு வந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றது. இதன் மூலம் 7.8 பில்லியன் மக்களில் 1 முதல் 6 சதவிகிதம் மக்கள் வரை (50 மில்லியன்) நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கக்கூடும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ள அளவீடுகளின் படி ஏறக்குறைய 60 முதல் 70 சதவிகித மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அவசியமாகின்றது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!