மியான்மர் நாட்டின் யங்கூன் நகரத்திலிருந்து மாண்டலே நகரத்திற்கு பறந்த விமானத்தின் லேண்டிங் கியர் கடைசி நேரத்தில் செயலிழந்ததால் முன்பக்க சக்கரம் இல்லாமலேயே ஓடுதளத்தில் விமானத்தை இறக்கி அதனை நிறுத்தி இருக்கிறார் விமானி. இந்த விமானத்தில் பயணித்த 89 பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இதனால் விமானி மியாட் மோ ஆங் கிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

யங்கூன் நகரத்திலிருந்து பயணிகளுடன் எம்ரேர் 190 ரக விமானம் பறந்து உள்ளது. மாண்டலே விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பாக லேண்டிங் கியரில் பிரச்சினை இருப்பது தெரிய வந்திருக்கிறது. உடனே விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் விமானத்தின் முன்பக்க சக்கரம் வெளியே வந்து விட்டதா? என்று உதவி கோரியிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முன்பக்க லேண்டிங் கியர் வெளியே வரவே இல்லை. இந்த தகவல் பரிமாற்றம் நடைபெறும் வேளையில் இரண்டு முறை விமான நிலையத்தையே சுற்றி வந்திருக்கிறார் விமானி. லேண்டிங் கியரில் ஏற்பட்ட சிக்கல்களை அதிகாரிகள் முடிவு செய்தவுடன் விமானத்தின் எரிபொருள் துரிதகதியில் செலவழித்து ஓடு தளம் நோக்கி செலுத்தியிருக்கிறார் விமானி. எரிபொருள் முழுவதும் தீர்ந்தவுடன் கவனமாக ஓடுபாதைக்கு விமானத்தை திருப்பியுள்ளார் ஆங். இதனால் விமானத்தின் வேகமானது கணிசமான அளவு கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது.

25 நொடிகள் மனத்தின் மூக்குப் பகுதி தரையில் உரசியபடியே போய் நின்று இருக்கிறது விமானம். இதனால் விமானத்தின் உள்ளே இருந்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மியான்மர் நாட்டில் இந்த வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது விமான கோளாறு இதுவாகும் சென்ற வாரத்தில் வங்கதேச விமானத்தின் ஓட்ட திசை மாறியதால் இருந்த பயணிகள் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அதில் பயணித்த 17 பயணிகள் காயமடைந்தனர்.