ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு இயற்பியல் அறிஞர். கோட்பாட்டு இயற்பியலின் தந்தை. அண்டவியல், அணுவியல், குவாண்டம் எந்திரவியல், ஒளிமின் விளைவு எனப் பல துறைகளில் விளக்கங்களை தந்தவர். ஐன்ஸ்டீன் கூறிய சில தத்துவங்கள் இங்கே.
- கருந்துளைகள் கடவுளை பூஜ்ஜியத்தால் வகுத்த இடங்கள்.
- ஒரு விஷயத்தை உங்களால் ஓர் ஆறு வயதுக் குழந்தைக்கு எளிதாக விளக்க முடியவில்லையெனில், அதை நீங்கள் சரியாக கற்கவில்லை என்று அர்த்தம்.
- எந்தவொரு அறிவுள்ள முட்டாளும் விஷயங்களை பெரிதாகவும் சிக்கலானதாகவும் செய்திட இயலும். ஆனால், ஒரு மேதையால் மட்டுமே அவற்றை எளிதாகச் செய்ய முடியும்.
- நம்மை சீர்குலைக்கக்கூடிய புகழ்ச்சியில் இருந்து விடுபட ஒரே வழி, மீண்டும் உழைக்கச் செல்வதுதான்.
- அறிவாற்றலை விட கற்பனைத்திறன் மிகவும் முக்கியமானது. அறிவாற்றலுக்கு எல்லை உண்டு, கற்பனைத்திறனுக்கு எல்லை கிடையாது.
- சிறு செயல்களிலும் உண்மையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர், பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.
- மனிதனின் தீய குணங்களை இயல்மாற்றம் செய்வதைவிட புளுட்டோனியத்தை இயல்மாற்றம் செய்வது சுலபமானது.
- கடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள்/முட்டாள்கள்.
- கடவுள் அண்டத்தைப் படைத்த போது அதை எவ்வாறு படைப்பது என்று விரும்பித் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவருக்கு இருந்ததா?
- தேசியம் என்பது ஒரு குழந்தைப்பருவ நோய். மனித இனத்தை பிடித்து வாட்டும் அம்மை நோய்.
- தனி நபராகக் கருதப்படும் ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கையில்லை. இந்த நம்பிக்கையின்மையை நான் என்றும் மறுத்ததும் கிடையாது. அதற்கு மாறாக அதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன்.
- வெற்றி பெற்ற மனிதராக முயற்சிப்பதை விட, மதிப்பு மிக்க மனிதராக முயற்சி செய்யுங்கள்.
- வாழ்க்கை என்பது மிதிவண்டியை ஓட்டுவது போலத்தான். விழாமல் இருக்க வேண்டுமென்றால், நிற்காமல் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
- அமைதியை வலுவாக கட்டுப்படுத்திக் கொண்டு வர முடியாது. அது புரிந்துணர்விலேயே நீடிக்கும்.
- யோசிக்காமல் அதிகாரத்திற்கு அடிபணிந்து போவதுதான், உண்மைக்கு மிகப்பெரிய எதிரி.
- புத்திசாலி பிரச்சினைகளை தீர்ப்பான். ஞானமுள்ளவன் பிரச்சினைகளை அண்ட விட மாட்டான்.
- எண்ணக்கூடியனவெல்லாம் எண்ணத்தகுந்தனவல்ல. எண்ணத்தகுந்தனவெல்லாம் எண்ணக்கூடியனவல்ல.
- தவறு செய்பவர்களை விட அதை வேடிக்கை பார்ப்பவர்களே மிகவும் கொடுமையானவர்கள்.
- உன் முயற்சிகளை கைவிடாதவரை, நீ தோல்வி அடைந்தவன் கிடையாது.
- உண்மைகள் தேற்றங்களுடன் பொருந்தவில்லை என்றால் உண்மைகளை மாற்றுங்கள்.
- நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதில்லை, ஏனெனில் அது தேவையானபோது வந்தே தீரும்.
- ஆசிரியரைப் பொறுத்தவரை நான் ஒரு முட்டாள். உங்களைப் பொறுத்தவரை நான் ஒரு அறிவாளி. என்னைப் பொறுத்தவரை நான் யாரென்று தேடிக்கொண்டிருக்கிறேன் சரியாக புரியவில்லை.
- வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், வாழ்க்கையில் புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகதான் இருக்கமுடியும்.
- அனைத்து மதங்களும் கலையும் அறிவியலும் ஒரே மரத்தின் கிளைகள்.
- வெகு அதிகமாகப் படித்து, தன் மூளையையும் குறைவாக பயன்படுத்துபவன் சிந்தனை என்ற சோம்பேறித்தனத்துக்கு சென்றிடுவான்.
- ஆழமான மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான். இது ஒரு வகையான புதிய மதம். இயற்கையிடம் நான் ஓர் அற்புதமான கட்டமைப்பைக் காண்கிறேன்; அதை மிகக்குறைந்த அளவிலேயே நம்மால் புரிந்து கொள்ள முடியும், அந்தப் புரிதல் சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு நபரின் உள்ளத்திலும் ஓர் உணர்வை உண்டாக்குகிறது. இது ஓர் உண்மையான மத உணர்வாகும். இதற்கும் மதவாதிகள் கூறும் மர்மமான மதப் புரிதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
- மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதே விஞ்ஞானிகளின் முழு முதற் கடமை. அந்த வேலைதான் எல்லாவற்றையும் விட இப்போது தலையானது.
- எவனும் எளிமையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். எளிய வாழ்க்கையே சிறப்பானது. எளிமையான இல்லத்திலே, எல்லாரும் விரும்பும் எளிமை விரும்பியாக வாழ கற்றுக்கொண்டால் மக்களும் அப்படி வாழ்பவரைப் பின்பற்றத் தயங்க மாட்டார்கள்.
- அறிவியலோடு கலக்காத மதம் குருட்டுத்தனமானது.
- நமது எல்லையை அறியும்போது, அதைத் தாண்டி நம்மால் செல்ல முடியும்.
மேலும் பல அறிஞர்கள், தலைவர்களின் பொன்மொழிகளை நியோதமிழ் தளத்தின் பொன்மொழிகள் பக்கத்தில் படிக்கலாம்.
நமது நியோதமிழ் தளத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வாழ்க்கை வரலாறு பற்றி படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.