இயேசு கிறிஸ்து கூறிய போதனைகள் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவை. இவ்வுலகில் வாழும் மனிதர்கள் பெரும்பாலானவர்கள் பாவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். அம்மனிதர்களை மீட்கவும் பாவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் இவ்வுலக மக்களை மீட்கவும் மனிதராய் இவ்வுலகில் பிறந்தார் பரிசுத்த ஆவியான இயேசு கிறிஸ்து அவர்கள்.
- அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன். ஏனெனில் அன்பே கடவுள்.
- நீங்கள் நம்பிக்கையுடன், ஒரு மலையைப் பார்த்து, “கடலில் பெயர்ந்து விழு” என்றாலும் அப்படியே நடக்கும்.
- கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை.
- ஒருவன் உன் வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு உன் மறு கன்னத்தை காட்டு.
- கயமை புரியும் ஒவ்வொருவரும் ஒளியை வெறுப்பர்.
- நல்ல மரங்கள் நல்ல கனிகளைக்கொடுக்கும். நல்ல மனிதர்கள் நல்லதையே செய்வர்.
- ஒருவரும் துரத்தாவிடினும் தீயவர் பயந்து ஓடுவர். நல்லவர் எப்போதும் ஏறுபோல் வீற்றிருப்பர்.
- எவனொருவன் தன்னைத் தானே பணிவாகத் தாழ்த்திக் கொள்கிறானோ, அவன் பிறரால் உயர்த்தப்படுவான்.
- உங்கள் விரோதிகளை நேசியுங்கள். உங்களைச் சபிப்பவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
- கவலைப்படுவதன் மூலம் உங்களில் எவரும் ஒரு முழம் கூட உயர்ந்துவிட முடியாது.
- அன்புள்ள இடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தை துரத்திவிடவல்லது.
- அன்பாக வார்த்தை நிறைய பலன் கொடுக்கும். கோபத்தினால் பயன் ஒன்றும் இல்லை.
- கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் கண்டறிவீர், தட்டுங்கள் திறக்கப்படும்.
- நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச்செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்.
- உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.