பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் எனப்போற்றப்படும் மகத்தான ஆளுமை. ‘உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட உன் வெங்காயம் வெளக்கமாத்த விட உன் அறிவு பெரிது அதை சிந்தி‘ என்று கூறிய பெரியார் அவர்கள் மனிதர்களது முன்னேற்றத்துக்காக 94 வயதுவரை அயராது உழைத்தவர். உங்கள் சிந்தையில் புது ரத்தம் பாய்ச்ச பெரியாரின் 50 பொன்மொழிகளை இங்கே தருகிறோம்.
தந்தை பெரியார் பொன்மொழிகள் – 50
- நம்முடைய மனம் நோகாமல் இருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அதே போல் நாம் பிறரிடம் நடந்துகொள்வது தான் ஒழுக்கம்.
- ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே தன்மையாக இருக்க வேண்டும்.
- கல்வியின் குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்க கூடாது.
- மனிதன் உலகில் தன்னுடைய சுயமரியாதையும், மானத்தையும் உயிருக்கு சமமாக கொள்ள வேண்டும்.
- மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
- முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு.. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
- மக்களிடம் உணர்ச்சியும், ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.
- நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட, ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது.
- விதியை நம்பி மதியை இழக்காதே.
- மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
- பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
- கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
- என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
- எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை, எங்கே வழுக்கியது என்று தான் பார்க்க வேண்டும்.
- விதி என்பது மிதிக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கொதித்து எழுதிருக்க செய்யப்பட்ட சதியாகும்.
- ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே தன்மையாக இருக்க வேண்டும்.
- தன் இனத்தையே அடிமைப்படுத்தி அதைக் கொடுமைபடுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலேயே அதிகம்
- நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்திரத்தை கெடுப்பது என்று தான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
- தீண்டாமை ஓழிய வேண்டுமானால் சாதி ஓழிய வேண்டும். மதம், மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனைச் சாக்கடையாக்கும்.
- பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி.
- விதி என்பது மிதிக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கொதித்து எழுதிருக்க செய்யப்பட்ட சதியாகும்.
- வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது. மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்
- மற்றவர்களிடம் பழகும் வித்தையையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே ஒருவன் கற்றுக்கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன்.
- பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாக உணர்வும் வேண்டும்.
- நமக்கு மாறுபட்ட கருத்துடையோரும் நம்மிடம் பரிதாபம் கொள்ளும் முறையில் நம் சொல்லும் செயலும் இருக்க வேண்டியது அவசியம்.
- நமக்கு வேண்டுவது எல்லாம் கட்டுப்பாடும் ஒற்றுமை உணர்ச்சியும் தான்.
- ஒழுக்கம் என்பது சொல்லுகின்ற படி நடப்பதும், நடந்தபடி சொல்வதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல.
- ஒருவன் மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து பிறரை மோசம் செய்யாமல் அன்புடன், ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
- உண்மையாக நாணயமாக நடப்பவனுக்கு மக்கள் நெஞ்சத்தில் ஓர் சிறந்த இடம் உண்டு.
- தேவையும் அவசியமும் அதிகமாக அதிகமாக நாணயக் கேடும், ஒழுக்க கேடும் வளர்ந்துகொண்டே தான் போகும்.
- பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்வதை விட தன்னிடம் அது எவ்வளவு இருக்கிறது என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
- தாங்கள் தங்கள் குழந்தைகளுக்கு நகை செய்து போடுவதற்கு பதிலாக கல்வியை கொடுங்கள்.
- படிப்பு அதிகமானால் இழிநிலை தானாகவே மாறும். உயர்வு தாழ்வு தானே அகன்று விடும். அனைவரும் சமம் என்ற வாய்ப்பு தானாகவே ஏற்பட்டு விடும்.
- மற்ற நாட்டவர்கள் கண்டுபிடித்த விஞ்ஞான அதிசய அற்புதங்கள் அனுபவிக்கிறோமே ஒழிய, நாம் கண்டுபிடித்தது என்று சொல்ல எதுவுமே இல்லையே.
- வாசக சாலைகளில் நல்ல அறிவை வளர்க்கும் அறிவுக்கு உணவாகும் எல்லா கொள்கைகள் கொண்ட புத்தகங்களையும் வைக்க வேண்டும்.
- ஆசிரியன் என்பவன் இயற்கை அறிவு பெற்றவனாக அதில் மேம்பட்டவனாக உலக அனுபவம் பெற்றவனாக இருக்க வேண்டும்.
- பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை தான் அவன் தன் லட்சியத்துக்கு கொடுக்கும் விலை.
- பக்தி என்பது சரீரத்தினாலும் தொண்டு செய்ய வேண்டியதுடன், மனத்தினாலும் செய்ய வேண்டும்.
- பெண் தன்னையும், தனது கற்பையும், காத்துக்கொள்ள தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய ஆண்காவல் கூடாது.
- மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை.
- காலத்தை எதிர்பார்ப்பது என்பதே சோம்பேறித் தனத்தை தான் குறிக்கும்.
- ஓய்வு, சலிப்பு என்பனவற்றை தற்கொலை என்றே கூறுகிறேன்.
- வாழ்க்கை என்பது தனித்தனி மனிதனைப் பொறுத்த தத்துவம் என்பது கூடவே கூடாது.
- ஆண்களுக்கு கற்பு இருந்தால் அது தானாகவே பெண்களையும் கற்பாக இருக்கச் செய்யும்.
- மனித வாழ்வில் வெற்றி என்னவென்றால் அவனவன் மனத் திருப்தியோடு வாழ்வது தான்.
- பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்து வரும் வரையில் மனித சமுதாயம் குமுறிக் கொண்டு தான் இருக்கும்.
- கர்மாவை நம்பினவன் கடைத் தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.
- பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும்.
- பிச்சை கொடுப்பதும், பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியங்களாக கருதப்பட வேண்டும்.
- ஒருவனுடைய யோக்கியதைப் பார்க்க வேண்டுமானால் அவனுடைய விரோதியைப் பாருங்கள்.
சில போனஸ் பெரியார் பொன்மொழிகள்!
- ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.
- காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாக வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆய்த்தமாக இருக்க வேண்டும்.
- பெண்களுக்கு படிப்பு, சொத்துரிமை ஆகியவை இருந்து விட்டால் நாடு கண்டிப்பாக முன்னேற்றமடைந்து விடும்.
உங்களுக்கு பிடித்த பெரியார் பொன்மொழிகள் எவை என்று கமெண்டில் குறிப்பிடுங்கள்!
Also Read: அரசியல், கல்வி, எதிரி, அறிவு பற்றி அறிஞர் அண்ணா கூறிய 30 பொன்மொழிகள்!
மேலும் பல அறிஞர்கள் கூறிய பொன்மொழிகளை படிக்க நியோதமிழின் பொன்மொழிகள் பக்கத்தை பாருங்கள்…