பெண்கள் சிறப்பை போற்றும் 25 பொன்மொழிகள்!

Date:

மகளிர் தினம் அன்று மட்டும் பெண்களை வானாளவ புகழ்ந்து பேசிவிட்டு மறந்து விடுகிறோம். பெண்கள் போற்றப்பட வேண்டியர்வர்கள் மட்டுமல்ல, பின்பற்றப்பட வேண்டியவர்களும் கூட. அறிஞர்கள் கூறிய, பெண்களின் சிறப்பை போற்றும் பெண்கள் பற்றிய பொன்மொழிகள் சிலவற்றை இந்த பதிவில் வழங்குகின்றோம்.

பெண்கள் பற்றிய பொன்மொழிகள்

  1. மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா. – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  2. பெண்களுக்கு படிப்பு சொத்துரிமை ஆகியவை இருந்து விட்டால் நாடு கண்டிப்பாக முன்னேற்ற மடைந்து விடும்.- பெரியார்
  3. கையில் புத்தகத்துடன் இருக்கும் கல்வி கற்கும் பெண்களைக் கண்டு, அடக்குமுறையாளர்கள் பெரும் பயம் கொள்கிறார்கள். – மலாலா
  4. பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு செழிப்படையாது. – ஜவஹர்லால் நேரு
  5. ஒரு விஷயத்தை சொல்லி முடிக்க ஆண்களை கேளுங்கள், செய்து முடிக்க பெண்களை கேளுங்கள். – மார்கரெட் தாட்சர்
  6. பெண் மனம் அறிவு பெறுவதைப் பொறுத்தே மனித சமுதாய‌ம் அறிவும் வளர்ச்சியு‌ம் பெறுகிறது – ஹெரிடன்
  7. பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு. – லெனின்
  8. பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை. பெண்கள், எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே சமூக முன்னேற்றத்தை நாம் அளவிடமுடியும். – காரல் மார்க்ஸ்
  9. அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண். – ஜெயகாந்தன்
  10. பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும் விளக்கு. – ஜேம்ஸ் எல்லீஸ்
  11. வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் ‘பெண்’ என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை. – காண்டேகர்
  12. பெண்ணுக்கு இயற்கை அளித்திருக்கும் அதிகாரம் அளப்பரியது என்பதனாலோ என்னவோ நம் சட்டங்கள் பெண்களுக்குக் குறைவான அதிகாரத்தையே தருகின்றன. – சாமுவேல் ஜான்சன்
  13. ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது. – டிக்கன்ஸ்
  14. சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண். – காந்தியடிகள்
  15. அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது. – டேவிட்ஹ்யூம்
  16. பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது – வில்லியம் ஷேக்ஸ்பியர்.
  17. ஆண்களின் தர்க்கமெல்லாம் பெண்களின் ஒரு உணர்வுக்கு இணையாகாது. – வால்ட்டேர்
  18. பெண்கள் ஆண்களை விட சிறந்தவளா என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் கண்டிப்பாக தாழ்ந்தவள் இல்லை – கோல்டா மியர்
  19. தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு. – ஒளவையார்
  20. பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி. – வில்சன் மிசுனர்.
  21. காதலைப் பொருத்தவரை பெண்கள் தான் நிபுணர்கள், ஆண்களெல்லாம் கற்றுக்குட்டிகள். – ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ
  22. ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம், கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம். – பெஸ்லிங்
  23. பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். அதனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள். – வேட்லி.
  24. பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்தலே, குடும்ப இன்பத்தின் அடிப்படை. – லாண்டர்.
  25. ஒரு நாட்டின் நாகரிகம் அந்நாட்டின் பெண் மக்கள் நிலையைப் பொறுத்து நிற்கிறதென்பது எவரும் ஏற்கத்தக்க உண்மை. பெண்மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, இடுக்கணுமின்றிப் பிறப்புரிமை இன்பத்தை எங்கே நுகர்கிறார்களோ அங்கேயுள்ள ஆண்மக்கள் நாகரிக நுட்பம் உணர்ந்தவர்களாகிறார்கள். அந்நாடே நாகரிகம் பெற்றதாகும் – திரு. வி. கல்யாணசுந்தரனார்

Also Read: பெண்கள் ஸ்பெஷல் கட்டுரைகள்

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!