- ஒன்றே குலம், ஒருவனே தேவன்.
- எதிரிகள் தாக்கித் தாக்கித் தங்கள் வலுவை இழக்கட்டும்… நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
- பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்தபிறகு, மனிதனிடம் வாதிடுவது என்பது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.
- ஒரு ஜனநாயகச் சமுதாயத்தில் கருத்துகளைச் சொல்வதற்குத் தடையோ, சுதந்திர உணர்வுகளுக்கு அழிவு தரும் நடைமுறைகளோ கண்டிப்பாக இருக்க கூடாது.
- உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்; வாழ்த்துக்குரியவன்; அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமூதாயத்தின் நல்வாழ்வையே புரையோறச் செய்வதாகும்.
- போட்டியும், பொறாமையும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.
- எவ்வளவு கட்டிடங்கள் கட்டினாலும், விஞ்ஞான கூடங்கள் அமைத்தாலும், புது பூங்கா அமைத்தாலும் கல்விச் செல்வம் இல்லாவிடில் அவை பயன் இல்லை.
- நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
- விதியை நம்பி, மதியை பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு.
- பொது வாழ்வு புனிதமானது; உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளமானது.
- வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.
- வன்முறை இருபுறம் கூர்மையான ஆயுதம்!
- ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.
- ஒரு நல்ல நூலைப் போலச் சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை.
- ஊக்கத்தை கைவிடாதே; அதுவே வெற்றியின் முதல் படிக்கட்டு.
- உலகின் பிளவு, குடும்பத்தில் ஆரம்பிக்கிறது.
- சட்டம் ஓர் இருட்டறை! அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு! அந்தப் பிரகாசமான விளக்கு ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை!
- நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்.
- சமத்துவம், சமதர்மம் போன்ற லட்சியங்களைப் பேசுவது சுலபம்; சாதிப்பது கடினம்.
- சாதிமுறையை நாம் எதிர்க்கிறோம் என்றால், சமதர்மத்துக்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.
- நெஞ்சிலே வலுவிருப்பின், வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சுவது உறுதி.
- புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது; அது தான் நம்மைத் தேடி வரவேண்டும்.
- பிறருக்கு தேவைப்படும் போது நல்லவர்களாகத் தெரியும் நாம் தான், அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாகிவிடுகிறோம்.
- கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை, சாதாரணமானவை தான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடைபோட முடியும்.
- கண்டனத்தைத் தாக்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது.
- தமிழ்நாடா! திராவிட நாடா! என்று கேட்பவர்க்குச் சொல்வேன், ஓரணாவில் காலணா தமிழ்நாடு என்று!
- மலையுச்சியிலிருந்து விரைந்து வரும் பேராறுகள் போல, கட்டுரைகள் ஜோலாவின் பேனா முனையிலிருந்து கிளம்பின!
- நான், சில காரியங்களைச் செய்யாமல் விடுவேனே தவிர, செய்கிற பல காரியங்களை நிறைவாகச் செய்பவன்.
- நாள், கோள், நட்சத்திரம், சகுனம், சாத்திரம் அத்தனையும் மனித முயற்சிக்கு போடப்படுகிற தடை கற்கள்!
- மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு!
பேரறிஞர் அண்ணாவின் பிற பிரபலமான வரிகள்!
- எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
- மறப்போம்; மன்னிப்போம்.
- கத்தியை தீட்டாதே; புத்தியைத் தீட்டு.
- எங்கிருந்தாலும் வாழ்க!
- ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!
- மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு!
Also Read: தமிழருக்குச் சரியான இலக்கையும் வழித்தடத்தையும் காட்டிய, அறிஞர் அண்ணாவின் சிறந்த 10 புத்தகங்கள்
அரசியல் களம் நோக்கி பெரும் திரளான மாணவர்களை இழுத்து வந்த அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு!