‘எருமை வாங்கும் முன்னே, நெய் விலை கூறாதே’: சிறந்த 60 தமிழ் பழமொழிகள்..!

Date:

  1. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
  2. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
  3. பேராசை பெரு நஷ்டம்.
  4. அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
  5. அலைகடலுக்கு அணை போட முடியுமா?
  6. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
  7. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
  8. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
  9. வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்.
  10. மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.
  11. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
  12. யானைக்கும் கூட அடி சறுக்கும்.
  13. பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
  14. ஆடத்தெரியாதவர், தெருக் கோணல் என்றாராம்.
  15. மத்தளத்திற்கு இரு புறமும் இடி.
  16. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
  17. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  18. நுணலும் தன் வாயால் கெடும்.
  19. மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
  20. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
  21. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
  22. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
  23. தனி மரம் தோப்பாகாது. 
  24. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். 
  25. கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது. 
  26. செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
  27. தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?
  28. சிறு துளி பெருவெள்ளம்.
  29. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  30. கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
  31. கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.
  32. கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
  33. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  34. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
  35. மனம் போல வாழ்வு.
  36. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  37. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  38. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  39. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
  40. நாலாறு கூடினால் பாலாறு.
  41. கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
  42. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  43. நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.
  44. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவார்கள்.
  45. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
  46. வானம் சுரக்க, தானம் சிறக்கும்.
  47. நாய் வாலை நிமிர்த்த முடியாது.
  48. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
  49. எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
  50. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே.
  51. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  52. தாழ்ந்து நின்றால், வாழ்ந்து நிற்பாய்.
  53. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால். 
  54. தவளை தன் வாயாற் கெடும்.
  55. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
  56. இக்கரைக்கு அக்கரை பச்சை. 
  57. புயலுக்குப் பின்னே அமைதி.
  58. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.
  59. கெடுவான் கேடு நினைப்பான். 
  60. நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு.

Also Read: ‘அறிஞருடன் உரையாடுவது நூறு நூல்களைப் படிப்பதற்கு சமம்.’ சீனப் பழமொழிகள்

‘பேச்சு வெள்ளியென்றால், அமைதி தங்கமாகும்’ புகழ்பெற்ற 20 அரேபிய பழமொழிகள்!

இங்கிலாந்து நாட்டில் கூறப்படும் புகழ்பெற்ற 25 பழமொழிகள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!