கவியரசு கண்ணதாசன் கூறிய சிறந்த 45 பொன்மொழிகள்!

Date:

கவியரசு கண்ணதாசன் இந்திய கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர், ஆசிரியர், தத்துவஞானி ஆவார். இந்தியாவின் மிகச் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர். கவியரசு என்று அழைக்கப்படும் கண்ணதாசன், தமிழ் படங்களில் அவரது பாடல் வரிகளுக்கு மிகவும் பிரபலமானவர். கவியரசு கண்ணதாசன் கூறிய பொன்மொழிகள் இங்கே…

கண்ணதாசன் பொன்மொழிகள்

  1. நல்லதே நினை நல்லதே பேசு நல்லதே செய் நல்லதே நடக்கும்.
  2. ஒன்பது ஓட்டைக் குள்ளே ஒருதுளிக் காற்றை வைத்து சந்தையில் விற்று விட்டான் ஒருவன். அவன் தடம் தெரிந்தால் அவன் தான் இறைவன்.
  3. ஒழுங்காக சம்பாதித்து பணக்காரனவன் குறைவு. உண்மை பேசி பதவிக்கு வந்தவனும் குறைவு.
  4. பாத்திரத்தின் நிறமல்ல பாலின் நிறம். ஆத்திரத்தின் நிறமல்ல அறிவின் நிறம்.
  5. அன்பிலே நண்பனை வெற்றிகொள். களத்திலே எதிரியை வெற்றிகொள். பண்பிலே சபையை வெற்றிகொள்.
  6. கேட்கும்போது சிரிப்பு வர வேண்டும். சிந்தித்து பார்த்தால் அழுகை வர வேண்டும். அதுதான் நல்ல நகைச்சுவை.
  7. மனிதனுடைய திறமை பெரிதல்ல கிடைக்கக்கூடிய சந்தர்ப்பமே அவனைத் பிரகாசிக்கச் செய்கிறது.
  8. தேவைக்காக கடன் வாங்கு கிடைக்கிறதே என்பதற்காக வாங்காதே!
  9. நெருப்பில் இறங்கிய பிறகு வெயிலுக்கு அஞ்சுவதில் அர்த்தமில்லை.
  10. ஏராளமான வாய்ப்புகள் வரும்போது தான் ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  11. கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே.
  12. அடைவதற்கு ஆசைப்படுபவன் இழப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.
  13. சாக்கடை என்பது மோசமான பகுதிதான். ஆனால் அப்படி ஒன்று இல்லாவிட்டால் ஊரே சாக்கடை ஆகிவிடும்.
  14. இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களின் சிந்தனையில் உதித்தவை அல்ல. நூற்றுக்கு தொன்னூறு அனுபவத்தில் உதித்தவை
  15. இந்த உலகத்தில் வேர் இல்லாமலும் நீர் இல்லாமலும் வளரக் கூடிய ஒரே செடி ஆசைதான்.
  16. அடக்கத்தின் மூலம் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றியுடன் முன்னேறியவர்கள் உண்டு.
  17. வெற்றி பெற்றவர்கள் தோல்விக்காக காத்திருங்கள். தோல்வியுற்றவர்கள் வெற்றிக்காக காத்திருங்கள்.
  18. எதையும் இன்னொருவனுக்கு கொடுத்து விட முடியும். ஆனால், இந்த நிம்மதியை மட்டும் மனிதன் தன்னிடத்தே தான் பெற்றுக்கொள்ள முடியும்.
  19. அனுபவம் என்பது ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.
  20. யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே! ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டிஇருக்கும்.
  21. அளவுக்கு மிஞ்சிய சாமர்த்தியம் முட்டாள்தனத்தில் தான் முடியும்.
  22. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? எந்த விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ளும் உள்ளம் வேண்டும்.
  23. காதல் மயக்கத்தில் தோன்றினால் மங்கும். அன்பில் தோன்றினால் பொங்கும்.
  24. அறிவாளிகளுக்கு அறிவு தான் அதிகம். முட்டாள்களுக்கு அனுபவம் அதிகம்.
  25. குற்றம் புரிந்தவன் தனக்கு நியாயம் கேட்கிறான் குற்றத்திற்கு ஆட்பட்டவன் தனக்கு நியாயம் கேட்கிறான் யாருக்கு அதை வழங்குவது என்பதை இறுதியில் பணமே முடிவு செய்கிறது.
  26. இருப்பது ஒரு பிடி அன்னம். ஆனாலும் தனக்கென இல்லாது பிள்ளைக்கு ஊட்டி மகிழ்பவளே தாய்.
  27. கருத்து பழையதாக இருக்கலாம் பலர் கூறியும் இருக்கலாம் ஆயினும் அது உயர்ந்த வகையில் அழகாய் கூறுபவர்களுக்கு உரியதாகும்.
  28. மனிதன் மரம் போல் வளர்கிறான் என்பது பெருமையல்ல. மரம்போல் பயன்படுகிறதா என்பதே பெருமை.
  29. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.
  30. நம் நாட்டில் எல்லோருமே நடிகர்கள் தான் சிலருக்கு மட்டும் ஏன் பட்டம் தருகிறார்கள்.
  31. நீ வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள் நீ வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்.
  32. இரவு என்ற ஒன்றையும் உறக்கம் என்ற ஒன்றையும் இறைவன் படைக்காமல் இருந்திருந்தால் மனிதன் 20 வயதுக்கு மேல் வாழ மாட்டான்.
  33. வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்.
  34. அழும் போது தனிமையில் அழுது சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள் தனிமையில் அழு சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.
  35. தேவைக்கு மேலே பொருளும் திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.
  36. எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும் மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.
  37. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.
  38. அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.
  39. உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்.
  40. ஞானத்திற்கும் ஆணவத்திற்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம். நம்மிடம் ஏதுமில்லை என்று நினைப்பது ஞானம். நம்மை தவிர ஏதுமில்லை என்று நினைப்பது ஆணவம்.
  41. இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் இதே மாதிரி எந்தப் பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு ஜாக்கிரதையாக பழக வேண்டும்.
  42. கண்ணில் காணும் உலகத்தைவிட கற்பனை உலகம் சுவையானது தங்கு தடையில்லாமல் எங்கேயும் போக முடிகிறது. ஆனால் உள்ளம் காட்டுகிற இடமெல்லாம் கைக்கு கிடைத்து விடுவதில்லை
  43. நான் என்று நினைக்காதீர்கள் நினைத்தால் ஆண்டவன் தான் என்பதை காட்டி விடுவான்.
  44. செயல்படுவோம் நல்லதே நடக்கும் என்ற பொது நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை நிச்சயம் வளமடையும்.
  45. ஒவ்வொரு மனிதனும் தன் புறப்பட்ட இடத்திற்கு ஒரு முறை திரும்பி வருகிறான்.

Also Read: “உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள்” வள்ளலார் பொன்மொழிகள்…

‘வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு. ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் பொறுத்தது..!’ ஓஷோ…

‘சொற்களில் ஞானம் இல்லை; அவற்றின் பொருளில் அது புதைந்து கிடக்கிறது.’ கலீல் ஜிப்ரான்

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!