19 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய தமிழ் கவிஞர்களில் ஒருவர். வள்ளலார் அவர்கள் ராமலிங்க சுவாமிகள் மற்றும் ராமலிங்க அடிகள் என்றும் அழைக்கப்படுகிறார். புகழ்பெற்ற தமிழ் “ஞான சித்தர்” ஆவார். சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர். “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை”, “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர் இவர். வள்ளலார் அவர்கள் அருளிய பொன்மொழிகள் இங்கே.
- மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்களின் ஆசை.
- பெரியவர்களைக் கண்டால் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். தவறு செய்தால் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி நல்லவராக இருங்கள்.
- உங்கள் திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது அடக்கத்துடன் இருங்கள்.
- பல்லாயிரம் சொற்களை உபசாரமாக பேசுவதை விட. முகமலர்ச்சியுடன் ஒருவரை பார்த்தாலே போதும் நம்மை சந்திப்பவர் மகிழ்ச்சி அடைவார்.
- பொய் மற்றும் புறம் சொல்லுதல் போன்ற செயல்களால் முன்னேறலாம் என நினைக்க கூடாது. அது ஒரு நாள் மிகப்பெரிய அழிவில் கொண்டு போய் விடும்.
- தானம் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தாதே.
- பழித்தால் எந்த பயனும் கிடையாது.
- அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை.
- மனிதன் அஞ்சுவது மரணத்திற்கு அல்ல. மரண அவஸ்தைக்கு தான்.
- சூரியன் உதிக்கும் முன் எழுவது, அதிகாலையில் தியானம் செய்வது, இளம் வெயிலில் உடல்பயிற்சி செய்வது ஆரோக்கியமாகும்.
- உயிர் இரக்கமே பேரின்ப வீட்டின் திறவு கோல்.
- நரகமும் சொர்க்கமும் உன் ஒழுக்கத்திலும் நல்ல பழக்கத்திலும் இருக்கிறது.
- யாரிடத்தில் இரக்கம் அதிகம் இருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார்.
- வெயிலுக்கு ஒதுங்கும் மரத்தை வெட்டாதே.
- எனக்கு சித்திகள் தருகின்ற தெய்வமாக விளங்குவது சத்தியமே.
- சோதனைகள் தான் ஒரு மனிதனை அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன.
- ஏதும் இல்லாத ஏழைகளுக்கு இரக்கப்பட்டு மனது உவந்து கொடுப்பதே ஜீவகாருண்யம்.
- திருவருளை சிந்தித்து கடவுளை நினைத்து கொண்டிருந்தால் கவலைகள் உங்களை விட்டு நீங்கும்.
- உண்மையை சொல் அது உனது வார்த்தைகளை பாதுகாக்கும். நல்ல எண்ணத்தோடு இரு அது உன் நடத்தையை பாதுகாக்கும்.
- பக்தி என்பது மன நெகிழ்ச்சி, மன உருக்கம்.
- ஒரு உடல் என்பது, அந்த உயிர் குடியிருக்கும் வீடு என்பதை மறந்துவிட கூடாது.
- புண்ணியம் மற்றும் பாவம் என்பன மனம், சொல், செயல், ஆகிய இம்மூன்று வழிகளில்தான் நம்மை வந்தடைகின்றன.
- பஞ்ச மகா பாவங்கள் (கள், காமம், கொலை, களவு, பொய் ) இந்த ஐந்தும் கொடிய துக்கத்தை உண்டு பண்ணும். தெய்வத்தின் பெயரால் உயிர் பலி கூடாது.
- ஈஸ்வர பக்தி என்பது எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்து இருப்பதை உணர்தல்.
- ஒருவர் செய்கிற நன்மை தீமைகள் எங்கும் போவதில்லை.. என்பதை உணர்ந்து அனைவரும் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
- எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்பதை அறிதலே கடவுள் பக்தியாகும்.
- அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம்.
- அரை வயிறு உணவு. கால் வயிறு தண்ணீர். கால்பாகம் காலியாக உணவு உண்ணும் முறையை பின்பற்றினால் எந்த வகை நோய் நொடியும் மனிதனை தாக்காது.
- மனதை அடக்க முயன்றால் அடங்காது. அதனை அறிய முயன்றால் தான் அடங்கும்.
- தவறு செய்வதும் இந்த மனம் தான். இனி தவறே செய்யக் கூடாது என தீர்மானிப்பதும் இந்த மனம் தான்.
- பிறருடைய பசியைப் மட்டும் போக்குவதோடு ஒருவனுடைய ஒழுக்கமும் கடைமையும் முடிந்து விடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன் வர வேண்டும்.
- நட்புக்கு துரோகம் செய்யாதே.
- உடலை வருத்தி விரதம் இருப்பதை விட, யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே சிறந்தது.
- உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்கள் மேல் உள்ள மரியாதையை பாதுகாக்கும்.
- ஏழைகளை ஏமாற்றி, அவர்களின் மனம் வலிக்கும் படி எதுவும் செய்யாதே.!
- தாய், தந்தை சொல்லை புறந்தள்ளாதே..!
- கடவுளிடம் சரணடைந்தால் மட்டுமே நம்மிடம் இருக்கும் பொய் மற்றும் பொறாமை போன்ற தீய பண்புகள் நம்மை விட்டு நீங்கும்.
- உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக இருப்பவர்களின் உறவை நாட வேண்டாம்.
- பசித்தவர்களுக்கு பாகுபாடின்றி உணவளிக்க வேண்டும்.
- உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
- நல்லவர்கள் மனதை கலங்க செய்யாதே.!
- வாக்கு வேறு.. மனம் வேறு.. செயல் வேறு.. என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.
Also Read: ‘சொற்களில் ஞானம் இல்லை; அவற்றின் பொருளில் அது புதைந்து கிடக்கிறது.’ கலீல் ஜிப்ரான்
“சரியானதைச் செய்ய இதுவே சரியான நேரம்” – வெற்றிக்கான சிறந்த 15 பொன்மொழிகள்!
‘ஆனந்தம் ஆற்றல் மிக்கது’… அன்னை தெரசா கூறிய அற்புதமான 35 பொன்மொழிகள்!