Homeபொன்மொழிநல்வாழ்க்கைக்கு புத்தர் கூறிய 40 பொன்மொழிகள் மற்றும் சிந்தனைகள்!

நல்வாழ்க்கைக்கு புத்தர் கூறிய 40 பொன்மொழிகள் மற்றும் சிந்தனைகள்!

உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றும் சிந்தனை மிகுந்த புத்தரின் பொன்மொழிகள்.

-

NeoTamil on Google News

1. மனமே எல்லாம். நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்.

2. உங்கள் மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் நீங்களே காரணம்.

3. சுயநலமான, தகுதியற்ற, விதண்டாவாதம் செய்யும், பிடிவாதமான மனிதர்களுடன் ஒருவன் பழகுவதைவிட தனியாக இருப்பதே மேல்.

4. எதற்காகவும் அவசரப்படாதீர்கள். நேரம் வரும்போது தானாகவே நடந்தேறும்.

5. ஆயிரம் வெற்று வார்த்தைகளைவிட மேன்மையானது, அமைதியைக் கொடுக்கும் ஒரே வார்த்தை.

6. கடவுளுக்கு தொண்டு செய்வதை விட சிறந்தது, உண்மைக்கு கீழ்ப்படிந்து நடப்பது.

7. மனதை அமைதிப்படுத்துங்கள். உங்கள் ஆன்மா பேசத் தொடங்கும்.

8. மூன்று விஷயங்களை நீண்ட காலமாக மறைக்க முடியாது: சூரியன், சந்திரன் மற்றும் உண்மை.

9. கூர்மையான கத்தியைப் போன்றது நாக்கு. ரத்தம் வராமலேயே ஒருவனைக் கொன்றுவிடும் வல்லமை அதற்கு உண்டு.

10. மற்றவர்களிடம் பேசும் போது உங்கள் மனதில் இருப்பதை சொல்லுங்கள் இல்லையென்றால் மௌனமாக இருங்கள்.

11. இந்த உலகத்தை வெற்றி கொள்வதைக் காட்டிலும் உன் மனதை வெற்றி கொள்வதே மகத்தான வெற்றி!

12. ஆசையே துன்பத்திற்கு காரணம்.

13. கோபத்தை அன்பினாலும் தீமையை நன்மையினாலும் வெல்.

14. நாம் எண்ணங்களால் கட்டமைக்கப்படுகிறோம். எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம். நம் எண்ணம் தூய்மை அடையும் போதுதான் மகிழ்ச்சியும் நிழலைப்போல நம்மை விலகாமல் தொடர்ந்துகொண்டிருக்கும்.

15. உங்களை நீங்களே காத்துக்கொள்ளுங்கள்; மற்றவரை சார்ந்து இருக்காதீர்கள்.

16. எங்கிருந்தாலும் நீ நீயாக இரு. இல்லையெனில் உன் வாழ்க்கையை நீ இழந்துவிடுவாய்.

17. மகிழ்ச்சியை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. காரணம் மகிழ்ச்சி என்பதே பாதைதான்.

18. நீரிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். சிற்றோடைகள் மலைகளில் மோதியும் பிளவில் விழுந்தும் பெரும்சத்தத்தை எழுப்பும். பெரிய ஆறோ அமைதியாக பயணிக்கும். முட்டாள் சிற்றோடையைப் போன்றவன். அறிவாளி அமைதியான நதியைப் போன்றவன்.

19. சிலந்தி தன் வலைக்குள் மட்டுமே சுற்றுவதை போல மனிதன் தன் ஆசைக்குள் மட்டுமே கட்டுண்டிருக்கிறான்.

20. பறக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், முதலில் உங்கள் சுமையை வீசியெறியுங்கள்.

21. உங்களுக்கு நீங்களே ஒளியாக இருங்கள்.

22. அமைதியை உங்களிடம் தேடுங்கள். மற்றவர்களிடம் தேடாதீர்கள்.

23. நெருப்பில்லாமல் மெழுகுவர்த்தி எரியாது. ஆன்மீகம் இல்லாமல் மனிதனால் வாழஇயலாது.

24. கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை.

25. பிறர் செயல்களில் குறைகளை மட்டுமே காணாதீர்கள். மற்றவர்களின் குறைகளை மட்டுமே கண்டுபிடிப்பவன், தனக்கு தானே குழி பறித்துக்கொள்கிறான்.

26. செல்வத்தின் இயல்பு வளர்வதும் தேய்வதும் செல்வம் என்றைக்கும் ஒரு இடத்தில் நிலைத்திருப்பது கிடையாது.

27. தவறு செய்தவர்களை மன்னித்துவிடு. ஆனால், அவர்களை திரும்ப நம்பும் அளவுக்கு முட்டாளாக இராதே.

28. இருளில் இருக்கிறேன் என்று கவலைப்படாதே! இருளும் விடியலை நோக்கித் தான் செல்கிறது.

29. நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள்.

30. அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.

31. நிரந்தரமானது என்ற தோற்றத்தை அளிப்பது எல்லாம் தற்காலிகமானதே. அவை அனைத்தும் மறைந்துவிடும்.

32. இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை. பகைமை அன்பினாலேயே தணியும்.

33. வாழ்க்கை என்றாலே துன்பங்களும் துயரங்களும் இருக்கத் தான் செய்யும் அது தான் நியதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

34. கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம். எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம். இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்.

35. வாழ்வு என்பது சில நொடியில் முடிந்து போவதல்ல. ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாகவும், மன நிறைவுடனும் வாழ்வதாகும்.

36. உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு அதை எவராலும் மாற்றிடவோ, மறைத்திடவோ, இயலாது உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.

37. உணர்வோடு இருப்பதே போலவே அதீத உணர்ச்சிகளில் இருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.

38. இந்த நொடியை மகிழ்ச்சியாக வாழுங்கள். நிகழ்காலத்தை மகிழ்ச்சியுடன் வாழ்வது தான் வாழ்க்கையை இனிமையாக மாற்றும்.

39. உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள் அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும்.

40. உண்மை என்பது ஒரு இனிமையான உணர்வு. உண்மையின் அருமை தெரியாதவர்கள் இனிமையின் சுகத்தை உணராதவர்கள்.

Also Read: மகிழ்ச்சி பற்றிய புகழ்பெற்ற 35 பொன்மொழிகள்!

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

Popular

error: Content is DMCA copyright protected!