முத்தமிழ் அறிஞர், கலைஞர், மொழிக்காதலர், டாக்டர், கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கூறிய பொன்மொழிகள்.
- அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது.
- தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை.
- புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்… உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும்…
- நான் தாக்குதலைத் தாங்கிக்கொள்ளும் பழக்கமுள்ளவன் மாத்திரமல்ல, தாக்குதலை விரும்புகிறவனும்கூட. தாக்கப்பட்டால்தான் நானே கூட மெருகேற முடியும்.
- ஓயாமல் உழைத்த ஒரு தமிழன் இங்கே ஓய்வெடுத்துக் கொள்கிறான் என்று என் கல்லறையில் எழுதப்படும் எழுத்துக்களுக்காக நான் தவமிருக்கிறேன்.
- வீரன் சாவதே இல்லை… கோழை வாழ்வதே இல்லை…
- மோதிக்கொள்வது என்பது சாதாரண விஷயம். ஆனால், அதனால் ஏற்படுகிற பலன், விளைவு என்ன என்பதுதான் மிக முக்கியமான விஷயம்.
- தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை.
- சட்டங்களால் மட்டுமே சாதி, பேதத்தை ஒழித்துவிட முடியாது. மனமாற்றமே அதை அகற்றும் மாமருந்து.
- துணிவிருந்தால் துக்கமில்லை.. துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை..
- பகைவனுக்கு அருளிடலாம். ஆனால், துரோகிகளுக்கு அருள்வது ஆபத்தானது. உலகில் இன்று துரோகிகள் அதிகம்.
- அதிருப்தியாளர்கள் வளரவளர அவர்களின் மத்தியிலே அவர்களை நடத்தி செல்லும் தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான்.
- பெரியார் மலைப்பாறை. அந்த மலைகுடைந்து செதுக்கப்பட்ட மாமல்லபுரத்துச் சிற்பம் அண்ணா. நாமெல்லாம் அந்தச் சிற்பத்தின் மாதிரி வடிவங்கள்.
- ஒளியில்தான் நமது நிழலின் வடிவம் நமக்குத் தெரிகிறது. சோதனையில்தான் நமது நெஞ்சின் வலிமை நமக்குப் புரிகிறது.
- ‘முடியுமா நம்மால்’ என்பது ‘தோல்வி’க்கு முன்பு வரும் தயக்கம். ‘முடித்தே தீருவோம்’ என்பது ‘வெற்றி’க்கான தொடக்கம்.
- பாராட்டும், புகழும் குவியும் போது குட்டையான வாசலுக்குள், குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும். இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்..!
- குச்சியை குச்சியால் சந்திக்க வேண்டும்… கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும்…
- தோழமையின் உயிர்த்துடிப்பே, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது.
- உண்மையை மறைக்க முனைவது, விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்…
- சட்டங்களால் மட்டுமே சாதிபேதத்தை ஒழித்துவிட முடியாது. மனமாற்றமே அதை அகற்றும் மாமருந்து.
- பகைவனுக்கு அருளிடலாம். ஆனால் துரோகிகளுக்கு அருள்வது மிகவும் ஆபத்தானது. உலகில் இன்று துரோகிகள் அதிகம்.
- சட்டத்தை பயன்படுத்தி சமூகத்தை ஒழுங்குபடுத்துவது என்பது சலவை செய்யப்பட்ட உடைகளுக்கு இஸ்திரிபெட்டி போடுவதுபோல. கொஞ்சம் கைதவறினாலும் சட்டைத்துணி கருகிவிடும்.
- பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டவர்கள். பகைவர் முயற்சியினாலேயே தமக்குத் தாமே குழி வெட்டிக்கொள்வார்கள்.
- தென்றலை தீண்டியதில்லை. ஆனால், தீயை தாண்டியிருக்கிறேன்.
- நான் நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும்.
- மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமோ; அதைப் போன்றுதான் கெஞ்சினால் மிஞ்சிகிற வீரமும் ஆகும்.
- மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.
- இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிர்த்து நிற்கும் பகைவர் எவ்வளவோ மேல்.
- தான் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் போது தன் மக்களின் முகம் சுண்டக் கூடாது என்பதில் குறியாக இருப்பது தாய்க் குணம்.
- வாழும் போது மனிதர்களைப் பிரித்துவைக்கும் சாதிவெறி, அவர்கள் இறந்த பிறகாவது தணிந்துவிடுகிறதா?
- உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள்… அந்த உண்மையைப் புரியாதவன் பின்னாலும் ஐந்து பேர் செல்வார்கள்.
- பதவி என்பது முள்கிரீடம் போன்றது.
- அனுபவம் ஒரு பள்ளிக்கூடம்… ஆனால், அதில் ஆணவக்காரர்கள் கற்றுத் தேர்வதில்லை.
- அணு அளவுகூட இதயமிலாத ஒருவருக்கு ஆகாயம் அளவு மூளையிருந்து என்ன பயன்?
- ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை, அவர் இறந்துபோன நாளிலிருந்து கணக்கிட்டு தெரிந்துகொள்ளலாம்.
- ஆசைகள் சிறகு ஆகலாம்; அதற்காக கால்களை இழந்துவிட்டு பறந்தால் பூமிக்கு திரும்ப முடியாது.
- தவறு செய்ய ஆரம்பிக்கிறவனுக்கு அஸ்திவாரத்திலே ஏற்படுவதை விட, அதிக அச்சம் உச்சி போய் சேரும் போது தான் தோன்றுகிறது.
- சிரிக்க தெரிந்த மனிதன் தான் உலகத்தின் மனித தன்மைகளை உணர்ந்தவன்.
- கண்ணீரில் மலரும் காதல், சேற்றில் மலரும் செந்தாமரையாகக் காட்சி தருவதும் உண்டு.
Also Read: பாசிட்டிவ் எண்ணங்களை தரும் பொன்மொழிகள்