உலகப் புகழ் பெற்ற சீனத் தத்துவஞானி கன்பூசியஸ். ஒரு சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இளம் வயதிலேயே மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியராக விளங்கியவர். இவரின் சிந்தனைகளும் கருத்துகளும் தனிமனித வாழ்வு, அரசாட்சி, நீதி, நல்லொழுக்கம் மற்றும் சமூகம் சார்ந்ததாக இருந்தன.
- நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவு உள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.
- மனதைக் கடமையில் செலுத்துங்கள். ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். அன்புக்கு கட்டுப்படுங்கள். மேலான கலைகளில் மனதை செலுத்தி அமைதி பெறுங்கள்.
- தீயவற்றின் உற்பத்தி சாலை இதயம். தீயனவற்றை விற்கும் இடமே நாக்கு.
- அறிஞர்கள் சிந்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகிறார்கள்.
- உன்னத நெறிகளையும், உயர்ந்த மதியும், நேர்மையும் கொண்டவரே உயர்ந்த மனிதர்.
- உங்களுக்கு எதை மற்றவர்கள் செய்தால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்களோ அதை நீங்களும் மற்றவர்களுக்கு செய்யாதீர்கள்.
- பெற்றோருக்கான தொண்டு, மேலோரிடம் மரியாதை, நண்பர்களிடம் நல்லுறவு, நாட்டுக்கான அர்ப்பணிப்பு, இவற்றைக் கொண்டவனே உண்மையில் கற்றறிந்தவன் ஆவான்.
- நேர்மையும் சத்தியமுமே ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படை.
- ஓர் ஏழையின் செல்வம் அவனது திறமை தான்.
- ஒவ்வொன்றும் அழகுடையதே! ஆனால் எல்லோர் கண்களும் அதைக் காண்பதில்லை.
- பயத்தை மனதிற்குள்ளேயே பயிர் செய்பவன், பாம்பை மனதில் வளர்க்கிறான்.
- புகழைப் பொருட்படுத்தாதீர்கள். ஆனால், புகழ் பெறுவதற்கு தகுதி உடையவராக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
- கோபம் தலை தூக்கும் போது, அதன் பின் விளைவுகளை சிந்தித்து பாருங்கள்.
- உயர்ந்த குணமுள்ள மனிதன்தான், எதைப்பற்றி யாரிடம் பேசுகிறோம் என்பதைக் குறித்து மிகுந்த கவனம் செலுத்துவான்.
- இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.
- முன்னேற்பாடுகளைப் பொறுத்தே வெற்றி அமைகின்றது. முன்னேற்பாடுகள் இல்லாத செயல்பாடு கண்டிப்பாக தோல்வியிலேயே முடியும்.
- விவேகமான மற்றும் முட்டாள்தனமான மனிதர்களை மட்டும் ஒருபோதும் மாற்ற முடியாது.
- மனத் திடம் இல்லாத மனிதனால், வறுமையையும் சரி. செல்வநிலையையும் சரி. வெகுநாள் தாங்க முடியாது.
- இலக்குகளை அடைய முடியாது என்று தெரியும் போது, நமது செயல்பாட்டு முறையினை சரி செய்ய வேண்டுமே தவிர இலக்குகளை சரி செய்யக்கூடாது.
- வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நல்ல பெயரை எடுக்காமல் இறந்து விடுவோமோ என்று அச்சப்படுபவன் மதிக்கப்பட வேண்டிய மனிதன்.
- அறிவு, இரக்கம் மற்றும் தைரியம் ஆகியவையே உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களுக்கான மூன்று தார்மீக குணங்கள்.
- அறிவால் உழைப்பவர் ஆள்கின்றனர். உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர்.
- உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது, ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகிறோம்.
- தன்னுடைய புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைதான் இந்த உலகம் விரும்புகிறது.
- ஒழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் உள்ளவன் வேறு எதைப்பற்றியும் கவலையோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை.
- சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.
- எவ்வளவு மெதுவாக செல்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்.
- துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறோமோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தை கடந்து விட்டோம் என்பது உறுதி.
- நமக்கு வாழ்க்கையைப்பற்றி தெரியாது என்றால், எப்படி மரணத்தைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும்?
- நீங்கள் உங்களுக்கு எதை செய்யவில்லையோ அதை மற்றவர்களுக்கும் செய்யாதீர்கள்.
- வெறுப்பது எளிதானது, விரும்புவது கடினமானது; அதுபோல, அனைத்து நல்ல விஷயங்களையும் அடைவது கடினமானது, கெட்ட விஷயங்களைப் பெறுவது எளிதானது.
- உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது, ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகின்றோம்.
- எவ்வளவு மெதுவாக செல்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்.
- நம்முடைய மிகப்பெரிய பெருமை விழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில் இருக்கின்றது.
- உங்களுக்கு என்ன தெரியும் மற்றும் என்ன தெரியாது என்பதை அறிந்துகொள்வதே உண்மையான அறிவு.
- முன்னேற்பாடுகளைப் பொறுத்தே வெற்றி அமைகின்றது, முன்னேற்பாடுகள் இல்லாத செயல்பாடு கண்டிப்பாக தோல்வியிலேயே முடியும்.
Also Read: நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்…