- இளமையில் உன் சேமிப்பு மட்டுமே. முதுமையில் உனக்கு கை கொடுக்கும். அடுத்தவரை நம்பி வாழும் வாழ்க்கை நரகம் போன்றது.
- சிக்கனம் என்பது கஞ்சத்தனம் அல்ல. செலவு செய்யும் விதம்.
- சிக்கனமாக இருந்தால் யாரும் வறியவராக முடியாது.
- சிறிய செலவுகளில் கவனம் கொள்ளுங்கள். ஒரு சிறிய கசிவு மிக பெரிய கப்பலை மூழ்கடிக்கும்.
- நல்ல குடும்பம் என்பது வரவுக்கு மீறிய செலவு செய்யாமல் இருப்பதாகும்.
- செல்வதுடன் இருக்க வேண்டுமென்றால் சம்பாதிப்பதை போல் சேமிப்பிலும் கவனம் வேண்டும்.
- சிக்கனம் நமது வாழ்க்கையை அழித்து விட கூடியதாக இருக்க கூடாது. மாறாக சிக்கனம் நம் வாழ்க்கைக்கு உயிர் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
- சிக்கனமும் சேமிப்பும் செல்வம் பெருக உதவும்.
- பணம் உங்களை வந்தடையும் முன் அதை ஒருபோதும் செலவிட வேண்டாம்.
- ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன் வாங்கும் போது எதிர்கால சுயத்தை கொள்ளையடிக்கிறீர்கள்.
- பேராசை கொண்ட மனிதனுக்கு உலகத்தையே கையில் கொடுத்தாலும் திருப்தி உண்டாவதில்லை.
- ஏழையாய் இருப்பதில்லை என்று உறுதியாக முடிவு செய்யுங்கள்.
- நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு மிக அவசியம்.
- நேரத்தையும் பணத்தையும் வீணாக்காதீர்கள். இரண்டையும் சிறப்பாக பயன்படுத்துங்கள்.
- சேமிப்பு செழித்து வளர சிறந்த வழி சிக்கனம்.
- செலவழித்த பின் எஞ்சியதை சேமிக்க வேண்டாம். சேமித்த பின் எஞ்சியதை செலவிடுங்கள்.
- என்றும் நினைவில் வைத்திருங்கள் சேமிப்பு என்பது முதலீட்டின் முன்நிபந்தனை.
- வீண் செலவுகளை தவிர்த்து சேமியுங்கள் அது உங்களை காப்பாற்றும்.
- பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்கு பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
- சம்பாதிப்பவனை விட சேமிப்பவனே சிறந்தவன்.
- சேமிப்பை உதாசீனம் செய்பவன் தன் வாழ்வில் ஒருநாளும் செழிமையை கொண்டுவர முடியாது.
- சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரம் செல்வந்தன் ஆவான்.
- சிக்கனமே செல்வம்.
- தகுதிக்கு மேல் வாழ்வதே தரித்திரம் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.
- சேமித்த பணம் வறுமையில் பயன் அளிக்கும்.
- பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான ஒரே வழி அல்ல. ஆனால் பெரும்பாலான சூழ்நிலையில் பணத்தை அடிப்படையாக வைத்தே மனிதன் மதிப்பிடப்படுகிறான் என்பது தவிர்க்க முடியாத உண்மை.
- சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.
- செல்வாக்கு நீடித்திருக்க வேண்டுமானால் செல்வத்தைப் போலவே அதையும் சிக்கனமாகவே செலவு செய்ய வேண்டும்.
- செலவழிக்கும் பணத்துக்கு கணக்கு எழுதிவை. செலவழித்தது அவசியம் தானா என்று சிந்தித்து பார். சிக்கனம் தானாகவே வந்துவிடும்.
- கஞ்சத்தனம் என்பது சிக்கனத்தின் போலியான உணர்வு.
- எதிர்கால பொறுப்புடன் செயல்படுவது சிக்கனம்.
- சிக்கனமாக இல்லாமல் யாரும் செல்வந்தராக முடியாது.
- வளத்தின் ஒரு கை உழைப்பு. ஒரு கை சிக்கனம்.
- வாழ்க்கை ஒரு போர்க்களம் அதில் சிக்கனமாக இருத்தல் என்பது பாதி வெற்றிக்கு சமம்.
- எப்பொழுதும் உங்களிடம் இருப்பதை விட குறைவாகவே செலவு செய்யுங்கள்.
நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்…
உங்கள் மனதில் நேர்மறை எண்ணம் தோன்ற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 14 வழிகள்!