‘ஆனந்தம் ஆற்றல் மிக்கது’… அன்னை தெரசா கூறிய அற்புதமான 35 பொன்மொழிகள்!

Date:

அன்னை தெரசா அவர்கள் சிறந்த சமூக சேவகராகவும் ஏழை எளியோருக்கும் ஆதரவற்றோர்க்கும் ஆதரவாக இருந்தவர் என்று உலகம் முழுவதும் புகழப்பட்டவர். அமைதிக்கான நோபல் பரிசும் இந்தியாவின் சிறந்த விருதான பாரத ரத்னா விருதும் பெற்றவர்.

அன்னை தெரசா பொன்மொழிகள்

  • புன்னகையே அன்பின் ஆரம்பம்.
  • அன்பின் அட்சய பாத்திரம்! கருணையின் உண்மை உருவம்! தாய்மையின் உன்னத அடையலாம்
  • பெரிய சாதனைகளை செய்யாமல் துன்பப்படுவதை விட, சிறிய சாதனைகளை முழு அன்புடன் செய்து முடிக்கலாம்.
  • நம்மை சூழ்ந்துள்ள இடங்கள் சுத்தமாக இல்லை என்றால், மேடை அமைத்து பேசும் நேரத்தில் சிறிது நேரத்தை கொண்டு நாமே சுத்தம் செய்யலாம்.
  • நீ வாழ, பிறரை அழிப்பதே மிகப் பெரிய வறுமை.
  • வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும்வரை.
  • அன்பு சொற்களில் அல்ல; வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது.
  • வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல.
  • நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.
  • வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல.
  • மனம்விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.
  • உண்மையான அன்பு வலிக்கும், வதைக்கும், வெறுமையாக்கும்.
  • அன்புதான் உன் பலவீனம் என்றால் அதுவே உன் ஆற்றல்
  • அவமானங்களின் வழியேதான் தாழ்ச்சியைக் கற்றுக் கொள்கின்றோம்.
  • ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
  • ஆனந்தம் ஆற்றல் மிக்கது.
  • வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும் வரை.
  • உனக்கு உதவியோரை மறக்காதே; உன்னை நேசிப்பவரை வெறுக்காதே; உன்னை நம்பியவரை ஏமாற்றாதே.
  • தனிமையே நவீனத் தொழுநோய்.
  • எவ்வளவு கொடுக்கின்றோம் என்பதல்ல; எந்த மனநிலையில் கொடுக்கின்றோம் என்பதே முக்கியம்.
  • இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்?
  • உங்களுடைய கனவுகளோ வாழ்க்கை லட்சியங்களோ மிகவும் விரிவானவையாக சிக்கலானவையாக இருந்தால் அவற்றை எட்டிப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும்.
  • உலகின் பிளவு, குடும்பத்தில் ஆரம்பிக்கின்றது.
  • தண்டனைத் தர தாமதி; மன்னிக்க மறு சிந்தனை வேண்டாம்.
  • பிறருடைய துன்பத்தை நீக்கும் வல்லமை உனக்கு வரவேண்டுமானால், அத்துன்பத்தை நீயும் அனுபவித்து உணர வேண்டும்.
  • சிறியவற்றில் நம்பிகைக்கு உரியவராய் இருப்பதே உன் பேராற்றல்.
  • நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே.
  • இறக்கத்தான் பிறந்தோம் அது வரை இரக்கத்தோடு இருப்போம்…!
  • எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்? கவலையை விடுங்கள். வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்
  • அமைதியின் பலன் பிரார்த்தனை, பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை, நம்பிக்கையின் பலன் அன்பு, அன்பின் பலன் சேவை, சேவையின் பலன் அமைதி.
  • நாம் செய்யும் சேவை கடலின் ஒரு துளி போன்றதுதான். ஆனால் அதை நாம் செய்யாவிட்டால் கடலில் ஒரு துளி குறைந்துவிடும் அல்லவா?
  • தலைவன் ஒருவனுக்காக காத்திருக்காதீர்கள்.உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை நீங்களே வழிநடத்திச்செல்லுங்கள்.
  • கொடுப்பது சிறிது என்று தயங்காதே பெறுபவருக்கு அது பெரிது. எடுப்பது சிறிது என்று திருடாதே இழந்தவருக்கு அது பெரிது.
  • பிரார்த்தனை செய்யுங்கள் கடவுள் அருகே நீங்கள் போகலாம்! பிரார்த்தனை செய்ய முடியவில்லையா? அதற்குப் பதிலாகச் சேவை செய்யுங்கள் கடவுள் உங்கள் அருகே வருவார்…
  • இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!