கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாட்டில், கவிதை, நாடகம், இசை, அரசியல் மற்றும் அறிவியல் போன்றவற்றை தனது எழுத்துக்களில் பிரதிபலித்தவர். அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியராக விளங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உலகின் மிகச்சிறந்த தத்துவஞானிகளில் ஒருவர் அரிஸ்டாட்டில்.
- தன் அச்சங்களிலிருந்து மீண்டு வருகிறவன் தான் உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.
- சந்தோசம் வரும் போது அதைப்பற்றி சிந்தனை செய்யாதே; அது போகின்ற போது அதைப்பற்றி சிந்தனை செய்.
- வறுமையே புரட்சிக்கும் குற்றங்களுக்கும் தாயகம்.
- ஒரு நகரம் நல்ல சட்டங்களினால் ஆளப்படுவதை விட நல்ல ஒருவரால் ஆளப்படுவதே மேலானது.
- பைத்தியக்காரத்தனத்தின் கலவை இல்லாத ஒரு சிறந்த மேதை எவருமில்லை
- செயல்பாட்டில் ஏற்படும் மகிழ்ச்சியானது, அந்த செயலை முழுமைபெற வைக்கின்றது.
- கோபப்படுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில் சரியான நேரத்தில் சரியான நோக்கத்துடன் கோபப்படுவது எல்லோருக்கும் வராது.
- சமமற்ற விஷயங்களை சமப்படுத்த முயற்சிப்பதே சமத்துவமின்மையின் மோசமான வடிவம்.
- இரண்டாம் தரமான மனிதர்களைக் கொண்டு முதல் தரமான அரசாங்கத்தை உருவாக்க முடியாது.
- ஒருவனுடைய மனம் தூய்மையாக இல்லாவிட்டால் பணமோ, வலிமையோ, அழகோ அவனுக்குப் பயன்படாது.
- முனிவரின் மூளையில் கூட முட்டாள்தனம் ஒரு மூலையில் இருக்கும்.
- அவனவனுக்கு உரித்தானதை அவனவனுக்கு வழங்குவது தான் நீதி.
- கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
- அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.
- ஒரு குடிமகன் ஆள்வதற்கு மட்டுமல்ல, ஆளப்படுவதற்கும் தக்கவனாய் இருத்தல் வேண்டும்.
- கல்வியும், நன்னடத்தையுமே ஒரு மனிதனை நல்லவனாக்குகின்றன.
- கல்வியின் வேர்களோ கசப்பானவை, ஆனால் கனியோ இனிப்பானது.
- விமர்சனம் செய்பவனே நண்பன், கூழைக்கும்பிடு போடுபவனே முதல் எதிரி.
- வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அது போலத்தான் உயர்வதும்.
- தனித்திறன் என்பது செயல் அல்ல. அது ஒரு பழக்கம்.
- தாய் மொழியை செம்மையாய் பயன்படுத்த தெரியாத எவர்க்கும் பிற மொழியில் புலமை வராது.
- ஒரு செயலின் நல்ல தொடக்கம் அதனை பாதியளவு முடித்துவிட்டதற்கு சமம்.
- கலையின் நோக்கம் வெளிப்புற விஷயங்களை பிரதிபலிப்பதல்ல, உள்ளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவது.
- தைரியம் இல்லாமல் உங்களால் இந்த உலகில் எதுவும் செய்ய முடியாது. மரியாதைக்கு அடுத்து மனதின் சிறந்த பண்பு இதுவே.
- பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
- மகிழ்ச்சியானது நம்மைப் பொருத்தே அமைகின்றது.
- நாக்கு தீ போன்றது. ஆக்கவும் அழிக்கவும் வல்லது. கவனமாக பயன்படுத்துங்கள்.
- விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்காக அல்ல.
- தன் அச்சங்களில் இருந்து மீண்டு வருகிறவன் தான் உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.
- அனைவருக்கும் நண்பனாக இருப்பது என்பது உண்மையில் ஒருவருக்கும் நண்பராக இல்லாததை போன்றது.
- இரண்டு உடல்கள் வசிக்கும் ஒரு ஆன்மாவிற்காக உருவானதே அன்பு.
- மனதின் ஆற்றலே வாழ்க்கையின் சாராம்சம்.
மேலும் பல அறிஞர்கள், தலைவர்களின் பொன்மொழிகளை நியோதமிழ் தளத்தின் பொன்மொழிகள் பக்கத்தில் படிக்கலாம்.